என் மலர்
விளையாட்டு
மும்பைக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த போட்டி கே.எல்.ராகுலின் 100-வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 100வது போட்டியில் சதமடித்த ராகுலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம் - ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் சொல்கிறார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 26 லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். மும்பை அணியின் பந்து வீச்சை லக்னோ அணி பேட்டர்கள் நான்கு திசைகளிலும் விளாசி தள்ளினர். 13 பந்தில் 1 சிக்சர் 4 பவுண்டரிகள் அடித்த டி காக் 24 ரன்னில் ஆலன் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த மனீஸ் பாண்டே 29 பந்தில் 38 ரன்கள் விளாசி வெளியேறினார்.
ஒரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார். அடுத்த வந்த ஸ்டோனிஸ் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக ராகுலுடன் ஹூடா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 56 பந்தில் சதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் இது அவருக்கு 3-வது சதம் ஆகும்.
தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்குடன் களமிறங்கும் மும்பை அணி தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.14 கோடிக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டார்.
புதுடெல்லி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இதற்கிடையே, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் இருந்தபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தீபக் சாஹர் பங்கேற்க மாட்டார் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையி, நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனதற்கு தீபக் சாஹர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சாஹர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், அடுத்த சீசனில் முன்புபோல் வலிமையுடன் களமிறங்குவேன். தனக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ரசிகர்களின் ஆசிர்வாதம் தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் தொடரில் 26-வது போட்டி இன்று மதியம் 3.30 மனிக்கு மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தரவரிசைப் பட்டியலின் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கவுள்ளது.
அணி மாற்றத்தை பொறுத்தவரை லக்னோ ஜெயண்ட்ஸ் அணியில் மணிஷ் பாண்டே இடம்பெறுகிறார்.
நிறைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆரம்ப நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் இந்த ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி,
இந்த ஆண்டின் கடைசி ஐபிஎல் போட்டி மே 29-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. அன்று நிறைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு மேடை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ப்ரோபசல் ஆவணம் ரூ.1 லட்சத்திற்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25 வரை இந்த ப்ரோபோசல் ஆவணம் கிடைக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் மே 29-ந்தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளே ஆப் சுற்று ஆட்டங்களை 2 இடங்களில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது.
மும்பை:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதுகாப்பு காரணமாக மும்பையில் உள்ள வான்கடே, பிரா போர்ன், டி.ஒய்.பட்டீல் மற்றம் புனே ஆடிய 4 மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது.
மே 22-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும் பிளே ஆப் சுற்றுக்கான தேதி, இடம் இதுவரை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் மே 29-ந்தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளே ஆப் சுற்று ஆட்டங்களை 2 இடங்களில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி குவாலிபைபர் 1 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடத்தப்பட இருக்கிறது. குவாலிபைபர் 2 மற்றும் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறலாம்.
புதிய அணிகளில் ஒன்றான அகமதாபாத்துக்கு வாய்ப்பு அளிக்கும் போது மற்றொரு புதுமுக அணியான லக்னோவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் லக்னோவிலும் பிளேஆப் சுற்று நடத்தப்படலாம். கொல்கத்தா அல்லது லக்னோவில் குவாலிபைபர் 2 மற்றும் எலிமினேட்டர் நடக்கலாம். இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஐ.சி.எப் 25-16, 25-12 என்ற நேர்செட் கணக்கில் ஐ.சி.எப்.பை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஜி.கே.எம் 22-25, 26-24, 25-15 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.
சென்னை:
ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மற்றும் லேடி சிவகாமி பள்ளி ஆகியவை சார்பில் மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளிகள் கைப்பந்து போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவகாமி பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஐ.சி.எப் 25-16, 25-12 என்ற நேர்செட் கணக்கில் ஐ.சி.எப்.பை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஜி.கே.எம் 22-25, 26-24, 25-15 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது. இதேபோல பி.கே.ஆர், எஸ்.ஆர்.எம். அணி களும் வெற்றிபெற்றன.
பள்ளிகள் போட்டியில் பாரதியார் அணி 25-11, 25-8 என்ற கணக்கில் ஆவடி பள்ளியை தோற்கடித்தது. ஜி.எஸ்.பி.டி., எல்.எஸ்.எஸ். அணியும் வெற்றிபெற்றன.
வலிமையான அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே வீரரும், தற்போதைய டெல்லி அணியின் துணை பயிற்சியாளருமான ஷேன் வாட்சன் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளால் திணறுகிறது. முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை இந்தியன் அணியோ முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வி ஏன் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய டெல்லி அணியின் துணை பயிற்சியாளருமான ஷேன் வாட்சன் விளக்கம் அளித்துள்ளார். அங்கே அவர் கூறியதாவது:-
மும்பை தொடர்ந்து தோல்வி அடைந்து பட்டியலின் கடைசி இடத்தில் இருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. காரணம் அவர்கள் மெகா ஏலத்தில் சரியாக செயல்படவில்லை என கருதுகிறேன். மும்பை வீரர் இஷான் கிஷானுக்கு ரூ.15.25 கோடி செலவு செய்துள்ளனர். அவர் திறமையான வீரர் தான். ஆனால் இத்தனை சம்பளத்தை கொடுத்து அவரை வாங்கியிருக்கக்கூடாது.
அதேபோல இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சரை எடுத்ததும் மும்பைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் நீண்ட நாட்களாக காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவர் எப்போது வருவார் என்பது தெரியாமலேயே மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கும் செலவு செய்து விட்டது.
இவ்வாறு வாட்சன் விளக்கம் அளித்துள்ளார்.
எங்களது கடைசி நேர பந்து வீச்சு (டெத் பவுலிங்) சிறப்பாக இருந்தது. ராகுல் திரிபாதி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார் என ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா வை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத்துக்கு 176 ரன் இலக்காக இருந்தது.
நிதிஷ் ரானா 36 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 25 பந்தில் 49 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். தமிழக வீரர் டி.நடராஜன் 37 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜான்சென், சுஜித் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராகுல் திரிபாதி 37 பந்தில் 71 ரன்னும் (4பவுண்டரி, 6சிக்சர்), மார்க் கிராம் 36 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தனர். ரஸ்சல் 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஐதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (ராஜஸ்தான், லக்னோ) தோற்று இருந்தது. அதன்பிறகு சென்னை, குஜராத்தை தொடர்ந்து வீழ்த்தி இருந்தது.
இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-
எங்கள் ஆட்டத்தில் முன்னேற்றத்தை காண முடிகிறது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றியது முக்கியமானது. மேலும் மெதுவான பனித்துளியும் உதவியாக இருந்தது.
எங்களது கடைசி நேர பந்து வீச்சு (டெத் பவுலிங்) சிறப்பாக இருந்தது. ராகுல் திரிபாதி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார். இதேபோல மர்கிராமும் மாறுபட்ட பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
மார்கோ ஜான்செனின் பவுன்ஸ் மற்றும் வேகம் நன்றாக இருந்தது. பந்தை சுவிங் செய்யும் புவனேஸ்வர் குமாருடன் அவர் தாக்குதலில் பெரும் பங்கு வகித்தார்.
உம்ரான் மாலிக் ஒவ்வொரு பந்தையும் 150 கிலோ மீட்டர் வேகத்தை தொடும் அளவுக்கு வீசுகிறார். இதனால் பந்தை தொட்டவுடன் பவுண்டரிக்கு சென்று விடுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நாங்கள் மிகுந்த முன்னேற்றம் அடைந்து வருவதை காண முடிந்தது.
இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.
ஐதராபாத் அணி 6-வது ஆட்டத்தில் பஞ்சாப்புடன் நாளை மோதுகிறது.
கொல்கத்தா அணி 3-வது தோல்வியை தழுவியது. 6 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 18-ந் தேதி எதிர் கொள்கிறது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
புவனேஸ்வர்,
9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இந்தியா - ஜெர்மனி ஹாக்கி அணிகள் பங்கேற்ற 2வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் சுக்ஜீத்சிங், வருண்குமார், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜெர்மன் தரப்பில் ஆன்டன் போக்கெல் ஒரு கோடி அடித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. 2வது முறையாக நேற்று பெற்ற வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி ரசல் அதிரடியால், 175 ரன்களை குவித்திருந்தது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டி தொடரில் 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பின்ச் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயஸ் அய்யரும், நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடினர். ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஐதராபாத் சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 ரன்னுடன், கேப்டன் வில்லியம்சன் 17 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 36 பந்துகளில் 68 ரன்களை அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
ஐதராபாத் அணி 17.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடந்துவிட்டது - ஐபிஎல்லில் நுழைந்தது கொரோனா
ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் கடைசி கட்டத்தில் இறங்கிய ஆண்ட்ரூ ரசல் அதிரடியாக ஆடி 25 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பின்ச் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6 ரன்னில் அவுட்டானார்.
ஷ்ரேயஸ் அய்யரும், நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடினர். ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்ட்ரூ ரசல் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஐதராபாத் சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






