என் மலர்
விளையாட்டு
பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் ஐதராபாத் அணி, 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள்பெற்று, புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 60 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை ருசித்தது. 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்த அந்த அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மார்க்ராம் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் விளாசினார். நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் சேர்த்தார். அபிஷேக் சர்மா 31 ரன்கள், ராகுல் திரிபாதி 34 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி, 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள்பெற்று, புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி , 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
புனே:
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9- வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஜடேஜா தலைமையிலான சென்னை அணி 6-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்சை இன்று சந்திக்கிறது. புனேயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி , 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அவர்களின் முயற்சியை முறியடித்து சென்னை அணி 2வது வெற்றியை பதிவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 28வது லீக் ஆட்டம் மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஷிகர் தவான் 8 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 14 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 11 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான் ஜோடி நிதானமாக ஆடியது. முதலில் நிதானம் காட்டிய லிவிங்ஸ்டோன் பின் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டு, அரை சதம் கடந்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 26 ரன்னில் வெளியேறினார். ஒடியன் ஸ்மித் 13 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் ஐதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசினர். கடைசி 7 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இறுதியில், பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐதராபாத் சார்பில் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவதற்காக முயன்று கொண்டிருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
மும்பை:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 27-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்5 விக்கெட்டுக்கு 189 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல் 55 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆடிய டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் போட்டி முடிந்தபின் தினேஷ் கார்த்திக்கிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இதுபோன்ற நேர்காணலை அதிகம் செய்யவில்லை. இன்று இதை செய்வதற்கு ஒரு சிறப்பான இரவு. இதுவரை இந்த தொடரின் 'மேன் ஆப் தி ஐபிஎல்' நாயகனுடன் நான் இங்கே இருக்கிறேன்.
அவர் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பெங்களூருவுக்காக மட்டுமல்ல, இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.
உங்கள் ஆட்டத்தைப் பார்த்து ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் பெருமைப்படுவார் என புகழ்ந்து பேசியுள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் விளையாடி தலா 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.
மும்பைக்கு எதிராக ஆடிய 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சின் சோகம் தொடர்கிறது. நேற்றைய ஆட்டத்தில் அந்த அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது. மும்பை அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது.
நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மும்பை அணியின் தொடர் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை தோற்கடித்து 2வது வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புனே:
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9- வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2- வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3- வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது. 5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்றது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணி 6-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்சை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி புனேயில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
ஷிவம் துபே, உத்தப்பா ஆகியோரது அதிரடியான ஆட்டம் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதே அதிரடி நீடிப்பது அவசியமானதாகும். ஆனால் பந்துவீச்சு இன்னும் பலவீனமாகவே இருக்கிறது. அதில் மேம்பாடு அடையவேண்டும். குஜராத்தை வீழ்த்த சி.எஸ்.கே. வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி , 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை தோற்கடித்து 5- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 அரைசதத்துடன் 228 ரன் எடுத்து உள்ளார். இது தவிர ஷுப்மன் கில், டேவிட் மில்லர், தெவாட்டியா, பெர்குசன், முகமது போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
முன்னதாக, மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இரு அணியும் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக ஹாக்கி அணிக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம், போபாலில், 12-ஆவது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடர், கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் 27 மாநிலங்களை சார்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை 3–0 என்ற கோல் கணக்கில் வென்றது.
தமிழ்நாடு அணி வீரர்கள் ஜோஷ்வா, சுந்தரபாண்டி மற்றும் சரவணகுமார் ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, ஹரியானா அணியை எதிர் கொள்கிறது. கடந்த 22 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அணி இறுதி ஆட்டத்தில் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக ஹாக்கி அணிக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு மாநில விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் தற்போது விளையாடும் விதம் இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக இருக்கிறது என்று, பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பாராட்டி உள்ளார்.
மும்பை:
மும்பையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில் ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் பேசியதாவது:
எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இது எனது பயணத்தின் ஒரு பகுதி. நான் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.
ஷாபாஸ் ஒரு சிறந்த வீரர், அவர் சிறப்பாக செயல்படுவார். அவர் சவாலுக்கு தயாராக இருக்கிறார். அவரால் நீண்ட தூரம் பந்தை அடிக்க முடியும். இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.
இந்நிலையில் பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி உள்ளார். தற்போது அவர் விளையாடும் விதம் இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் தெளிவாகவும், அமைதியுடனும் இருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது ஜோடி 97 ரன்களை சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் டக் அவுட்டானார். கேப்டன் டு பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். பிரபு தேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 66 ரன்னும், ஷாபாஸ் அகமது 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரிதிவி ஷா 16 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடி காட்டினார். 38 பந்துகளில் 66 ரன் குவித்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில்
7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது. இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது
இதையும் படியுங்கள்...
100வது ஐபிஎல் போட்டியில் சதமடித்து அசத்திய கே.எல்.ராகுல்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது ஜோடி 97 ரன்களை சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் டக் அவுட்டானார். கேப்டன் டு பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். பிரபு தேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 189 ரன்களை எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 66 ரன்னும், ஷாபாஸ் அகமது 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து 190 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி களமிறங்குகிறது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 13 ரன்னிலும், பிரெவிஸ் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா ஜோடி 26 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் பொல்லார்டு, உனத்கட்டும் போராடினர்.
இறுதியில், மும்பை அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் மும்பை அணி தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்துள்ளது.
லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் கடைசி போட்டியின்போது நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்






