என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி சதம் விளாசினார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் சதம் விளாசிய அவர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    தேவ்தத் படிக்கல் 24 ரன், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். 

    கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட் எடுத்தார். பேட் கம்மின்ஸ், ரஸ்ஸல், சிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. 
    ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் வெவ்வேறு அணிகளுக்காக 219 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

    இதன்மூலம், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பிறகு, ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.

    தினேஷ் கார்த்திக் வெவ்வேறு அணிகளுக்காக 219 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோ ஃபர்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இந்நிலையில் தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் என்றும் கூறப்படுகிறது.

    இதையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோ ஃபர்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இந்நிலையில் தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடஸ் அணியில் வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு பின் செப்டம்பரில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சென்னையில் 26 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கல்லூரி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    சென்னை:

    குருநானக் கல்லூரி சார்பில் பவித்சிங் நாயர் நினைவு அகில இந்திய கல்லூரிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 8-வது பவித்சிங் நாயர் நினைவு கல்லூரிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

    வருகிற 23-ந் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. குருநானக்கல்லூரி மற்றும் அருகே உள்ள 5 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் குருநானக்கல்லூரி, லயோலா, பச்சையப்பா, ஆர்.கே.எம். கேரளா கிறிஸ்ட் கல்லூரி, அரியானா எஸ்.டி.கல்லூரி, மும்பை சி.கே.டி., ஐதராபாத் டி.கே.ஆர்., கேரளா மகாத்மா கல்லூரி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

    பெண்கள் பிரிவில் என்.எஸ்.ஜெயின், எத்திராஜ், ஜே.பி.ஏ.எஸ்.குருநானக், ராணி மேரி உள்பட 10 கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

    இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் ஆண்கள், பெண்கள் அணிக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும்.

    ஆட்ட நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர், பீல்டர், விக்கெட் கீப்பர் ஆகியோருக்கும் பரிசு தொகை வழங்கப்படும். தொடர் நாயகன் விருதை பெறுபவருக்கு ஹீரோ எக்ஸ்டீரிம் மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைக்கும்.
    சோர்வு, புதிய அணிகள் ஆகியவைகளின் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது சரியாகி பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    உலகில் அதிக டெலிவி‌ஷன் பார்வையாளர்களை கொண்ட போட்டிகளில் ஒன்று ஐ.பி.எல். 20 ஓவர் பேட்டியாகும். அந்த அளவுக்கு மதிப்புமிக்க விளையாட்டாக இருக்கிறது.

    15-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மார்ச் 26-ந் தேதி தொடங்கியது. 8 அணிகளோடு 2 புதிய அணிகளான லக்னோ, குஜராத் அணிகள் உள்பட 10 அணிகள் விளையாடும் இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் மட்டும் நடக்கிறது.

    கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே ஆகிய 4 மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 29 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஐ.பி.எல். பார்வையளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முதல் வாரத்தில் டி.வி.ரேட்டிங்கில் சரிவு இருந்தது. முதல் 8 போட்டிகளில் டி.வி. ரேட்டிங் 2.52 ஆக இருந்தது. கடந்த ஆண்டு முதல் 8 போட்டிகளில் டெலிவி‌ஷன் ரேட்டிங் 3.75 ஆக இருந்தது.

    இதே போல் 2வது வாரத்திலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த 8 போட்டிகளிலும் டி.வி. ரேட்டிங் குறைந்து வருகிறது. 15 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 1.98 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இது 3.31 ஆக இருந்தது.

    22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 2.43 ஆகவும், 31 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 2.34 ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு இது 3.68 ஆக இருந்தது.

    சோர்வு, புதிய அணிகள் ஆகியவைகளின் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது சரியாகி பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பந்துவீச்சில் எங்களது தொடக்கம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 6 ஓவரில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மில்லர் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார் என சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்திடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

    புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

    ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 73 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), அம்பத்தி ராயுடு 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி ,2 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ‌ ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டேவிட் மில்லர் 51 பந்தில் 94 ரன் (8 பவுண்டரி, 6 சிக்சர் ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். தற்காலிக கேப்டன் ரஷீத்கான் 21 பந்தில் 40 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து உதவியாக இருந்தார். பிராவோ 3 விக்கெட்டும் , தக்ஷீனா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சி.எஸ்.கே. அணி 5-வது தோல்வியை சந்தித்தது. இதனால் பிளேஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினமான ஒன்றாகும். எஞ்சிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:-

    பந்துவீச்சில் எங்களது தொடக்கம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 6 ஓவரில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மில்லர் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த ஆடுகளத்தில் 169 ரன் என்பது சமமான ஸ்கோராகவே நாங்கள் கருதினோம்.

    கடைசி 5 ஓவர்களில் நாங்கள் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை.

    கிறிஸ் ஜோர்டான் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். இதனால்தான் எனக்கு பதிலாக கடைசி 2 ஓவரை அவருக்கு கொடுத்தேன். அவரால் 4 முதல் 5 யார்க்கர் பந்துகளை வீச இயலும். துரதிருஷ்டவசமாக இந்த ஆட்டத்திலும் அப்படி நிகழவில்லை. இதுதான் 20 ஓவர் போட்டியின் அழகாகும்.

    இவ்வாறு ஜடேஜா கூறி உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 21-ந் தேதி எதிர் கொள்கிறது.

    குஜராத் அணி 5-வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் 10 புள்ளியுடன் அந்த அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 23-ந் தேதி சந்திக்கிறது. 

    வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.
    நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு அருகே சென்று தோல்வியடைந்தது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அந்த அணி வீரர் டேவிட் மில்லர் சி.எஸ்.கே அணியின் பந்துகளை சிதறடிக்கத் தொடங்கினார்.

    இறுதியில் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் குஜராத் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் ஆட்டமிளக்காமல் 94 ரன்கள் எடுத்தார். வெற்றி பெற்றுவிடும் தருணத்தில் இருந்த சென்னை அணியின் கனவை டேவிட் மில்லர் களைத்தார். இந்த போட்டியை தொடந்து சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்தார்.

    அதில், சாலையில் செல்லும் ஆண் தன்னை நோக்கி ஒரு பெண் வருவதாக தவறுதலாக கருதி கைகளை நீட்டுகிறார். ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு அருகில் உள்ள ஒருவரிடம் சென்று அணைத்துகொள்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாபர். இவ்வாறு தான் சென்னை அணியின் வெற்றியை குஜராத் டைடன்ஸ் திருடிக்கொண்டது என கூறியுள்ளார்.

    வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.


    ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் இதுவரை தான் ஆடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில்  குஜராத், சென்னை  அணிகள் மோதின. இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .

    2-வது இடத்தில் லக்னோவும், 3-வது இடத்தில் பெங்களூருவும் ,4-வது இடத்தில் ஐதராபாத்தும் உள்ளது.

    சென்னை அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 
    கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ரூர்கேலா:

    ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

    கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

    9 பேரும் ஒடிசாவின் பிரமித்ராபூர் தொகுதியில் உள்ள ஜமுனானகி கிராமத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டனர்.

    அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரமித்ராபூர் காவல்துறை அதிகாரி மனாஸ் பிரதான் தெரிவித்துள்ளார்.

    இந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
    போபால்:

    12ஆவது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி  போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. 

    நேற்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி அரியானா அணியை எதிர் கொண்டது. 

    இந்தப் போட்டியின் முடிவில் அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் இருந்ததால் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

    இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. 2வது இடத்தை பிடித்த தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

    வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு சீனியர் ஹாக்கி அணிக்கு மாநில விளையாட்டுத்துறை மந்திரி மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் 48 பந்துகளில், 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 73 ரன்கள் விளாசினார்.
    புனே:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி  ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.  மறுமுனையில் உத்தப்பா(3 ரன்), மொயீன் அலி (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்தாலும், 4வது வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு, கெய்க்வாட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டனர்.

    அம்பதி ராயுடு 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அரை சதம் கடந்து முன்னேறிய கெய்க்வாட் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 48 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசினார். 

    அதன்பின்னர் சிவம் துபே 19 ரன், கேப்டன் ஜடேஜா 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 

    குஜராத் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் விருத்திமான் சகா 11 ரன்னுடனும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

    விஜய் ஷங்கரும் ரன்  எதுவும்  எடுக்காமல் வெளியேறினார் அபினவ் மனோகர் 12 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து குஜராத் அணி தத்தளித்தது. அ

    அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும், ரஷித்கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்த நிலையில் ரஷித்கான் ஆட்டமிழந்தார்.  51 பந்துகளை சந்தித்த மில்லர், 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 94 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். 

    இதையடுத்து 19.5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 170 ரன்கள் குவித்ததுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
    ஷில்லாங்:

    மேகாலய மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (வயது 18) உயிரிழந்தார். 

    83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. 

    இதில், கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீனதயாளனின் உடல் நாளை காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. 

    தேசிய  மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார்.

    அவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
    ×