search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேபிள் டென்னிஸ்"

    • நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் ;

    கன்னியாகுமரி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பார்வதிபுரம் ஈடன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தினக்ஷ் குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். 2-ம் இடத்தை கிறிஸ்டோ வில்மோகன் பெற்றார்.

    பெண்கள் பிரிவில் அனிலா பானு வெற்றி பெற்றார். 19 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் வைஷ்ணவி, ஆண்கள் பிரிவில் தருண், 17 வயதிற்குட்பட்டோர்களில் டிரிபோன்ஸா, தருண் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்.எம்.சி.ஏ.தலைவர் டட்லிபென், செயலர் ரஞ்சித் அம்பலோஸ், விஜயகுமரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
    • இந்திய ஜோடி வட கொரியாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், வடகொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

    இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • அரையிறுதியில் சீன தைபே அணியிடம் தோல்வி
    • சரத் கமல், சத்தியன் நேர்செட்டில் தோல்வியடைந்தனர்

    ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிக்கான அரையிறுதியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.

    இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன், ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். சரத் கமல் சுயாங் சி-யுயானை எதிர்கொண்டார். இதில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார்.

    சத்தியன் 5-11, 6-11, 10-12 என லின் யுன்-ஜுவிடம் தோல்வியடைந்தார். ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என தோல்வியடைந்தார்.

    இதனால் இறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தோடு விடைபெற்றது.

    • டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்‌ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
    • சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்‌ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    3-வது சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடந்து வருகிறது. டேபிள் டென்னிஸ், சிலம்பம், கைப்பந்து, யோகா, கூடைப்பந்து, தடகளம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.

    இதில் டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.

    17 வயதுக்குட்பட்டோர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லத்திகா 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை வீராங்கனையையும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உத்பிரக்ஷா 3-1 என்ற செட் கணக்கில் நேபாளம் வீராங்கனையையும் தோற்கடித்தனர்.

    சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

    • டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
    • காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.

    பாங்காங்:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.

    மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.

    • திருச்சியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பிடித்தது
    • இறுதி ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருவாரூர் மஞ்சக்குடி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான மாணவர்களுக்கான மேஜை பந்து போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 6 கல்லூரி அணிகள் பங்கேற்ற மாணவர்களுக்கான மேஜை பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருவாரூர் மஞ்சக்குடி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பெற்று பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மேஜை பந்து போட்டியில் தொடர்ந்து 7-வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

    மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது.

    மேஜை பந்து போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி வீரர்களை கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான ஏ.கே.காஜா நஜிமுதீன், பொருளாளர் எம்.ஜமால் முகமது, முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீன்,

    கவுரவ உறுப்பினர் கே.என்.அப்துல் காதர் நிஹல், கே.என்.முகமது பாஷில், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ்.ஷாஇன்ஷா மற்றும் உதவி உடற்கல்வி இயக்குனர் கே.பிரதீப்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது.
    • முதல் பரிசான தங்கப் பதக்கத்தை மாணவிகள் வென்றனர்.

    திருப்பூர் :

    தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவிகளான சத்யா, நிஷாந்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவரும், தாளாளருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பிவிஎஸ் பி.முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே எம்.கந்தசாமி, இணை செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் தமிழக வீரர் சதயன் ஞானசேகரன், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
    • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

    முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • நியூசிலாந்து மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குத்துச்சண்டை போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ளனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்கால்-லியம் பிட்ச்போர்டு ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-8, 8-11, 3-11, 11-7, 4-11 என தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றனர்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதேசமயம், நியூசிலாந்து இன்று மேலும் ஒரு தங்கம் வென்று 18 தங்கப் பதக்கங்களுடன், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
    • டேபிள் டென்னிசில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை

    இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    ×