என் மலர்
நீங்கள் தேடியது "Manika Patra"
- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3-1 என வென்றது.
- ஒற்றையர் பிரிவின் 2 சுற்றிலும் மணிகா பத்ரா வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனிய ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-0 என வென்றார். இதன்மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
4வது சுற்றில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 1-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகித்தன.
இறுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இந்தியா ருமேனியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
- டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
- காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.