என் மலர்
விளையாட்டு
டாப் வரிசையில் மூன்று முதல் நான்கு வீரர்களில் ஒருவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. கேப்டன் டுபெலிசிஸ் 64 பந்தில் 96 ரன் எடுத்தார்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. அந்த அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்னே எடுக்க முடிந்தது. குர்னால் பாண்ட்யா 42 ரன்னும், கேப்டன் லோகேஷ் ராகுல் 30 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.
வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் டுபெலிசிஸ் கூறியதாவது:-
மைதானம் பெரிதாக இருப்பதால் நீங்கள் நிறைய இரண்டு ரன்களை ஓடி எடுக்க வேண்டும். இது கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஆனால் உங்கள் உடற் தகுதியை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். எனது ஐ.பி.எல். சதம் இன்னும் இருப்பதாக உணர்கிறேன்.
இப்போட்டியில் நாங்கள் சிக்கலில் இருந்தோம். கடந்த மூன்று அல்லது நான்கு ஆட்டங்களில் இருந்ததை போலவே இருந்தோம். ஆனால் யாராவது ஒருவர் நிலைத்து நின்று இன்னிங்சை உறுதிப்படுத்துகிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கிறோம். இன்று என்னால் அணிக்காக அதை செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நான் ரன்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். சில ஆட்டங்களில் ரன் குவிக்காததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன் என்றார்.
லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நாங்கள் நன்றாக தொடங்கினோம் என்று நினைக்கிறேன். பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் 180 ரன் இலக்கு என்பது 15 முதல் 20 ரன் வரை கூடுதலாக இருந்தது. இந்த கூடுதல் ரன்களை நாங்கள் கொடுத்து விட்டோம். தொடக்கத்தில் நல்ல முன்னேற்றங்களை பெற்றோம். ஆனால் மிடில் ஓவரில் அதை தக்க வைக்க முடியவில்லை.
டாப் வரிசையில் மூன்று முதல் நான்கு வீரர்களில் ஒருவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.அவருடன் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும். ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை. எங்களால் பாட்னர்ஷிப்களை உருவாக்க முடியவில்லை.
நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். நாங்கள் விளையாடும் விதத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். சில ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். தொடக்கத்தில் எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினோம். ஆனால் அதை சிறிது நேரம் தக்க வைக்க முடியவில்லை.
பெங்களூரு அணி 5-வது வெற்றியை (7 ஆட்டம்) பெற்றது. லக்னோ 3-வது தோல்வியை (7 ஆட்டம்) சந்தித்தது.
இதையும் படியுங்கள்...ஒருநாள் இந்திய அணிக்கு விளையாடுவார்- ஐதராபாத் வீரர் குறித்து சுனில் கவாஸ்கர் பேச்சு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 துறைமுகங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய கபடி, கேரம், செஸ் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கின.
பெருந்துறைமுகங்கள் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஏப்ரல் 21 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 துறைமுகங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் உடல் மற்றும் மனநல மேம்பாட்டுக்காக இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் எஸ் பாலாஜி அருண் குமார், காமராஜர் துறைமுகத்தின் பொது மேலாளர் சஞ்சய் குமார், இருதுறைமுகங்களின் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள பிரக்ஞானந்தாவுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஸ்பெயின் நாட்டின் லா ரோடா செஸ் தொடரில் 15 வயதே ஆன நம் சென்னைச் சிறுவன் குகேஷ் அபாரமான வெற்றியைப் பெற்றிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
தான் வென்றுள்ள முதல் திறந்த சுற்றுத் தொடரிலேயே, மிகவும் கடினமான போட்டியாளர்களுக்கு எதிராக, ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் வென்றிருப்பது கட்டாயம் அவருக்குச் சிறப்பானதொரு உணர்வை அளித்திருக்கும்.
போலவே, இத்தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள பிரக்ஞானந்தாவுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் டூ பிளசிஸ்,ஷாபாஸ் அகமது ஜோடி 70 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட் செய்தது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக் அவுட்டானார். மேக்ஸ்வெல் 23 ரன்னிலும், பிரபு தேசாய் 10 ரன்னிலும் வெளியேறினர்.
கேப்டன் டூ பிளசிஸ் தனி ஆளாக போராடினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின்னர் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஷாபாஸ் அகமது ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்னில் அவுட்டானார். 4 ரன்னில் சதத்தை தவறவிட்ட டூ பிளசிஸ் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர் டி காக் 3 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ராகுல் 30 ரன்கள் அடித்தார். மனிஷ் பாண்டே 6 ரன்னுக்கும், தீபக் கூடா 13 ரன் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். குருனால் பாண்டியா 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். ஆயுஷ் படோனி 13 ரன்னுக்கும், ஸ்டோனிஸ் 24 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்...
ஒருநாள் இந்திய அணிக்கு விளையாடுவார்- ஐதராபாத் வீரர் குறித்து சுனில் கவாஸ்கர் பேச்சு
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் டூ பிளசிஸ், ஷாபாஸ் அகமது ஜோடி 5வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக் அவுட்டானார். மேக்ஸ்வெல் 23 ரன்னிலும், பிரபு தேசாய் 10 ரன்னிலும் வெளியேறினர்.
கேப்டன் டூ பிளசிஸ் தனி ஆளாக போராடினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின்னர் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஷாபாஸ் அகமது ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்னில் அவுட்டானார். 4 ரன்னில் சதத்தை தவறவிட்ட டூ பிளசிஸ் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.
லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் 6 போட்டிகளில் விளையாடி தலா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற அணி லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.
நாளை நடத்தப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி புனேவில் நடைபெற இருந்த நிலையில், மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி அணியில் மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்பே வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது புனேவில் நடைபெற இருந்த போட்டியை மும்பை மைதானத்திற்கு மாற்றியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியில் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற 4-வது சுற்று பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. நாளை காலை மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா இல்லை என உறுதி செய்தால் மட்டுமே டெல்லி கேப்பிடல்ஸ் அணி போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சுனில் கவாஸ்கரை தொடர்ந்து முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்களும் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து உம்ரான் மாலிக் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக் தனது வேகத்தாலும், பந்துவீசும் நுணுக்கத்திலும் அனைவரையும் கவர்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் நிச்சயமாக இந்திய அணிக்கு உம்ரான் மாலிக் விளையாடுவார். மற்ற வீரர்கள் அவரைப்போல 150 கி.மீ வேகத்துக்கு பந்துவீசினால் பந்து வைட்டை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் அவர் குறைந்த அளவே வைட் பந்துக்களை வீசுகிறார். லெக் சைட்டில் அவர் வைட் பந்துக்களை கட்டுப்ப்படுத்தினா. மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வருவார்.
இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கரை தொடர்ந்து முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்களும் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளனர்.
பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த வலியை அனைத்து பெற்றோர்களும் உணர முடியும். பெண் குழந்தைதான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது என ரொனால்டோ தெரிவித்தார்.
மான்செஸ்டர்:
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இவர் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகெஸ் கர்ப்பமாக இருந்தார். இந்த தம்பதி இரட்டை குழந்தையை எதிர்பார்த்தனர். பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்று இறந்துவிட்டது. நேற்று ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. ஆனால் ஆண் குழந்தை இறந்து விட்டது.
இதை ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது ஆண் குழந்தை இறப்பால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். இந்த வலியை அனைத்து பெற்றோர்களும் உணர முடியும். பெண் குழந்தைதான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது என்றார். ரொனால்டோவுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் தொடரில் 21-வது ஹாட்ரிக்- சாதனை படைத்த சாஹல்
லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. 25-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3- வது இடத்திலும், பெங்களூரூ 4-வது இடத்திலும் உள்ளன.இதனால் 5- வது வெற்றியை பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி, சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 12 ரன்னிலும், டெல்லியை 6 விக்கெட்டிலும், மும்பையை 18 ரன்னிலும் வீழ்த்தி இருந்தது. குஜராத் அணியிடம் 5 விக்கெட்டிலும், ராஜஸ்தானிடம் 3 ரன்னிலும் தோற்றது.
அந்த அணியில் கேப்டன் ராகுல், குயின்டன் டிகாக், ஸ்டோனிஸ், அவேஷ்கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
பெங்களூரூ அணி கொல்கத்தா (3 விக்கெட்), ராஜஸ்தான் (4 விக்கெட்), மும்பை (7 விக்கெட்), டெல்லி (16 ரன்) ஆகியவற்றை தோற்கடித்தது. பஞ்சாப்பிடம் 5 விக்கெட்டிலும், சென்னையிடம் 23 ரன்னிலும் தோற்றது.
அந்த அணியில் கேப்டன் டுபெலிசிஸ், தினேஷ் கார்த்திக், விராட் கோலி, மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஷபாஸ் அகமது போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 17-வது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார்.
இந்த ஐ.பி.எல்.லில் முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தவர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இது ஐ.பி.எல். வரலாற்றில் 21-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும்.
இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் 2 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்தார். 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டுமே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படவில்லை.
ஐ.பி.எல்.லில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த வீரர்கள் விவரம்:-
அமித் மிஸ்ரா ( 3 தடவை), யுவராஜ்சிங் (2 முறை), எல்.பாலாஜி, நிதினி, ரோகித் சர்மா, பிரவீண்குமார், அஜீத் சண்டிலா, சுனில் நரீன், பிரவீன் தாம்பே, வாட்சன், அக்ஷர்பட்டேல், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரூடை, ஜெயதேவ் உனட்கட், சாம்கரண், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்ஷல்படேல், யசுவேந்திர சாஹல் (தலா 1 தடவை).
வெற்றியை நெருங்கிய போதிலும் தன்னால் கடைசி வரை பேட் செய்ய முடியவில்லை என்று கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மும்பை
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
17வது ஓவரின்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், கம்மின்ஸ் , மாவி ஆகியோரது விக்கெட்களை அடுத்தடுத்து ஹாட்ரிக் முறையில் சாஹல் வீழ்த்தியது போட்டி ராஜஸ்தான் அணிக்கு சாதமாக மாற காரணமாக அமைந்தது.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சாஹல் கூறியுள்ளதாவது:
போட்டி முடிவை மாற்ற நான் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தது. நான் எனது பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன். எனது பந்து வீச்சு குறித்து பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் பேசினேன்.
எனக்கு கூக்லி நன்றாக வந்து கொண்டிருந்தது. அதை பயன்படுத்தி வெங்கடேஷ் ஐயரை ஸ்டம்பிங் செய்ய வைத்தேன். அது திட்டமிட்டு வீசப்பட்ட பந்தாகும். ஏனெனில் அவர் எனது லெக் பிரேக் பந்து வீச்சை நன்றாக விளையாடுவார்.
பாட் கம்மின்ஸுக்கு ஒரு கிளாசிக்கல் லெக் பிரேக் பந்து வீச்சை பயன் படுத்தினேன். அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய, கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், 51 பந்துகளில் 85 ரன்களை எடுத்த போதிலும் தன்னால் கடைசி வரை பேட் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
நாங்கள் தொடக்கத்தில் இருந்தே ரன்-ரேட்டிற்கு ஏற்ப விளையாடினோம். எனினும் எங்களால் அதை கடைசிவரை தொடர முடியவில்லை, ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






