என் மலர்
விளையாட்டு
மும்பை, சென்னை இரு அணிகளும் இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகின்றன.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இந்த சீசனில் முதல் முறை நேருக்கு நேர் மோதுகின்றன. இதுகுறித்து ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவது, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போன்ற உணர்வை தருகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
நான் மும்பை அணியிலும் விளையாடி இருக்கிறேன். சென்னை அணியிலும் விளையாடி இருக்கிறேன். இரண்டுமே எனக்கு முக்கியமான அணிகள். நான் மும்பையில் இருந்து வெளிவந்து சென்னையில் இணைந்து விளையாடியபோது, இரண்டு அணிகளும் மோதினால் அத்தனை பிரஷராக இருக்கும். இப்போதும் அது தொடர்கிறது.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசைப்பட்டியலில் 89 வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து 6வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அர்ஜூன் டெண்டுல்கர் யார்க்கர் வீசி மும்பையில் அதிக விலைமதிப்புள்ள வீரரான இஷான் கிஷானை கிளின் போல்ட் ஆக்குகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சென்னைக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
You ain't missing the 🎯 if your name is 𝔸ℝ𝕁𝕌ℕ! 😎#OneFamily#DilKholKe#MumbaiIndians MI TV pic.twitter.com/P5eTfp47mG
— Mumbai Indians (@mipaltan) April 20, 2022
ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 பேர் பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் 3-இடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் அதிக ரன் குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ்பட்லர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டத்தில் 2 சதம், 2 அரை சதத்துடன் 375 ரன்கள் எடுத்துள்ளார். லோகேஷ் ராகுல் (லக்னோ) ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்னுடன் 2-வது இடத்திலும், டுபெலிசிஸ் 2 அரை சதம், 250 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் முதல் இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் வீரரான அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார். குல்தீப்யாதவ் (டெல்லி) 13 விக்கெட்டும், நடராஜன் (ஐதராபாத்) 12 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
கோவை கிங்ஸ் அணியில் டி.நடராஜன், ஷாருக்கான், சாய் சுதர்சன், அபிஷேக் தன்வார் உள்பட 17 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சேலம், நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், அருண், அருண்குமார், ஹரீஷ் குமார், என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியன், பிரசித் ஆகாஷ், ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், ஆர்.சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜயகுமார் ஆகிய 20 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் கோவை கிங்ஸ் அணியில் டி.நடராஜன், ஷாருக்கான், சாய் சுதர்சன், அபிஷேக் தன்வார் உள்பட 17 வீரர்களும், திருப்பூர் தமிழன் அணியில் தினேஷ் கார்த்திக், எம்.முகமது, ராஜ்குமார், எஸ்.அனிருதா உள்பட 15 வீரர்களும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஆர்.அஸ்வின், ஹரி நிஷாந்த், விவேக் உள்பட 17 பேரும், மதுரை பாந்தர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி, அருண் கார்த்திக், சிலம்பரசன் உள்பட 17 வீரர்களும், திருச்சி வாரியர்ஸ் அணியில் முரளிவிஜய், அந்தோணி தாஸ், ரஹில்ஷா, நிதிஷ் ராஜகோபால் உள்பட 15 வீரர்களும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பாபா அபராஜித், பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன், ஷாஜகான் உள்பட 14 வீரர்களும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், பெரியசாமி, முருகன் அஸ்வின் உள்பட 15 பேரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் நெல்லை அணி செந்தில் நாதனை மதுரை பாந்தர்சுக்கு கொடுத்து அந்த அணியில் இருந்து எம்.ஷாஜகானை பரஸ்பரம் பரிமாற்றம் அடிப்படையில் பெற்றிருப்பதும், திருச்சி அணியில் இருந்து எஸ்.அனிருதாவை திருப்பூர் தமிழன் வாங்கியிருப்பதும் அடங்கும்.
அணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி மே 14-ந் தேதி நடக்கிறது. ஒதுக்கீடு பட்டியலில் இடம்பெற விரும்பும் புதிய வீரர்கள் www.tncacricket என்ற இணையதளத்தில் விண்ணப்பிங்களை பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி நாளை முதல் 30-ந் தேதிக்குள் இ-மெயில் வாயிலாக சமர்பிக்க வேண்டும். இதே போல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் சி.எஸ்.கே. உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது. 5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்றது. 6-வது போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் 3 விக்கெட்டில் தோற்றது.
சி.எஸ்.கே. அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று சந்திக்கிறது. இந்தப்போட்டி மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் சி.எஸ்.கே. உள்ளது.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் சென்னை அணி வீரர்கள் கோட்டை விட்டனர். கடைசி நேரத்தில் பந்துவீச்சு மோசமாக அமைந்தது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தான் மோதிய 6 ஆட்டங்களிலும் தோற்று உள்ளது. 5 முறை சாம்பியனான அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 13-ல், மும்பை 19-ல் வெற்றி பெற்றுள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக 22 ந்தேதி தேதி டெல்லி -ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி நிறைவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், தமது அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், குழப்பமும் பதட்டமும் இருந்தது என்றார். ஆனால் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்துவீச்சுக்குப் பிறகு டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா அணியை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றதாகவும், இருவருக்குமே தேவையில்லாத அறிவுரைகளை வழங்க தாம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை என்றும், பண்ட் குறிப்பிட்டார்.
இதனிடையே, டெல்லி அணியில் உடல்தகுதி நிபுணர்கள், மருத்துவர், சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் மற்றும் வீரர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 22 ந்தேதி தேதி டெல்லி -ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழும் கெய்ரன் பொல்லார்ட் தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் அந்த அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் உள்ள அவர் விளையாடியதில்லை. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்தியாவில் நடைபெற்ற போடடியில் அவர் விளையாடி இருந்தார்.
34 வயதான பொல்லார்ட் டி20 போட்டிகளில் அதிரடி காட்டும் வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணி அணியை வழிநடத்தினார்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல்.போட்டிகளில் அவர் பங்கேற்று உள்ளார். பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் பொல்லார்ட், இக்கட்டான நிலைகளில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பதால் இந்திய ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி இடம் உண்டு.
இந்நிலையில் முக்கிய ஆலோசனைக்குப் பிறகு, நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என பொல்லார்ட் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றதை நினைத்து பெருமைப் படுவதாகவும், பிரைன் லாரா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...
விராட் கோலிக்கு ஓய்வு தேவை- ரவிசாஸ்திரி கருத்து
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் சிறப்பாக விளையாடினர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்கள், ஷாருக் கான் 12 ரன்கள், ராகுல் சாகர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக ஆடி, ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து 83 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். பிருத்வி ஷா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னருடன் சர்பராஸ் கான் இணைய, டெல்லி அணி 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை எட்டியது. ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்த டெல்லி அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 60 ரன்களுடனும், சர்பராஸ் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் அடித்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்கள், ஷாருக் கான் 12 ரன்கள், ராகுல் சாகர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி தரப்பில் கலீல் அகமது, லலித் யாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.
தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருந்தார்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மரியா ஷரபோவா 2018 ஆண்டு முதல் பிரிட்டிஷ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்தனர். அதே ஆண்டில் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது மரியா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய மரியா ஷரபோவா இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ’விலைமதிப்பற்ற தொடக்கங்கள். இரண்டு பேருக்கும் சேர்த்து பிறந்தநாள் கேக்கை உண்கிறேன்’ என கூறியுள்ளார்.
மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்க்கையில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தார். டென்னிஸில் 4 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்ற 10 வீராங்கனைகளில் இவரும் ஒருவர். இவர் 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். இதுவரை மரியா, 30 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிசுத்தொகைகளை வென்றுள்ளார்.
பெரும்பாலான டென்னிஸ் அமைப்புகள் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களை சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஏற்கனவே தடைவிதித்துள்ளன.
லண்டன்:
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதிப்பதற்கு அந்த போட்டியை நடத்தும் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் விம்பிள்டனில் பங்கேற்பது குறித்து பிரிட்டிஷ் அரசுடன் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அமைப்பு ஆலோசனை செய்தது. இதுகுறித்த முடிவை மே மாதம் மத்தியில் வெளியிடுவோம் என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஷிய வீரர்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் டேனில் மெத்வதேவ், 8-வது இடத்தில் உள்ள ஆண்ட்ரி ரூப்ளேவ் ஆகியோர் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. மேலும் மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 15-வது இடத்தில் உள்ள அனஸ்தேசியா பாவ்லிசென்கோவா ஆகியோரும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
அதேபோல் பெலராஸ் வீரர்களும் விம்பிள்டனில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷிய படையெடுப்புக்கு ஆரம்ப காலங்களில் உறுதுணையாக இருந்ததால் அந்த நாட்டு வீரர்களும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான டென்னிஸ் அமைப்புகள் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களை சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஏற்கனவே தடைவிதித்துள்ளன. ரஷிய வீரர்கள் தனிப்பட்ட முறையில் விளையாடலாம் ஆனால் அவர்களது நாடு அல்லது கொடியின் கீழ் விளையாடக்கூடாது என கூறியுள்ளது.
இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டி ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடப்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் மூளை கிரிக்கெட் குறித்தே அதிகம் சிந்தித்து தளர்ந்துவிட்டது என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
மேலும் அவர் சமீபத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறி வருகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விளாசவும் இல்லை.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு தற்காலிக ஓய்வு தேவை என தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி கூறியதாவது:-
விராட் கோலி அதிகம் விளையாடிவிட்டார். யாருக்காவது ஓய்வு அளிக்க வேண்டும் என்றால் அது விராட் கோலிக்கு தான். என்னுடைய அனுபவத்தில் விராட் கோலிக்கு இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் வாழ்க்கை மீதம் இருக்கிறது.
அதில் அவர் திறம்பட விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கட்டாயமாக சில நாட்கள் ஓய்வு தேவை. அவருடைய மூளை கிரிக்கெட் குறித்தே அதிகம் சிந்தித்து தளர்ந்துவிட்டது. மீண்டும் புத்துணர்வு பெறுவதற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் முதலில் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.






