என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை வீரர் தோனி கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி வெற்றியை தேடி தந்தார்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் தொடர் தோல்வியை சந்தித்து கடைசி இரு இடங்களில் இருந்ததால் இந்த போட்டி முக்கியம் வாய்ந்த போட்டியாக கருதப்பட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே ரன்களை சேர்த்து வைந்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இந்நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கேவுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் தோனி 6,4,2, மற்றும் 4 ரன்களை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

    ஆனந்த் மகிந்திரா

    இதையடுத்து தோனிக்கு பல்வேறு நபர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் ஆட்டத்தை பகிர்ந்த இந்திய தொழிலதிபரும், மகிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா, ‘எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்’ என மகிந்திர சிங் தோனியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

    அவரைப் போலவே ரசிகர்களும், சர்வதேச வீரர்களும் தோனியை சிறந்த ஃபினிஷர் என பாராட்டி வருகின்றனர்.

    ரஷிய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவ்வுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 56-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு ரஷிய மக்களில் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷிய அதிபர் புதினையும், உக்ரைன் மீதான படையெடுப்பையும் ஆதரவையும் தெரிவித்து கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷியாவை சேர்ந்த நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவ் பேரணியில் பங்கேற்றார்.

    இதையடுத்து வரை 9 மாதங்களுக்கு தடை விதித்து FINA எனப்படும் சர்வதேச நீச்சல் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் ரைலோவ் பிற பதக்கங்கள் வென்ற வீரர்களுடன் மேடையில் ‘Z’ என்ற எழுத்தை கொண்ட ஆடையை அணிந்திருந்தார்.  இது ரஷிய படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் எழுத்து என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய ஃபினா அமைப்பு, ரைலோவை தொடர்ந்து பிற ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களை அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யவுள்ளோம். தற்போது ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகியவை ஹங்கேரியில் நடைபெறவுள்ள சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அழைக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது.
    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் ஹெட்மயர் சஞ்சு சாம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளது. பந்து வீச்சில் சாஹல், டிரெண்ட் போல்ட், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். இதில் கடந்த ஆட்டத்தில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார். டெல்லி அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் டேவிட் வார்னர் பிரித்விஷா, கேப்டன் ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், கலில் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை 115 ரன்னில் சுருட்டியதால் டெல்லி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    டெல்லி அணி 4-வது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை தான் மோதிய 7 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்த சீசனில் மும்பை அணி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    இந்த நிலையில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியும், 2019-ம் ஆண்டு பெங்களூரு அணியும் தங்களது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருந்தன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்திப்பது 11-வது முறையாக நிகழ்ந்துள்ளது. ஆனால் சாம்பியன் பட்டம் பெற்ற அணி தொடர்ந்த 7 தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை.

    ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை டோனி உலகுக்கு காட்டி இருக்கிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தது. கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது.

    ஜெய்தேவ் உனட்கட் அந்த ஓவரில் டோனி 3 மற்றும் 4-வது பந்துகளை முறையே சிக்சர், பவுண்டரி விளாசினார். 5-வது பந்தில் இரண்டு ரன் எடுத்தார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் டோனி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதி வரை பரபரப்புடன் சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்பதை டோனி மீண்டும் நிரூபித்தார்.

    வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஜடேஜா கூறியதாவது:-

    ஆட்டம் செல்லும் விதத்தால், உண்மையில் நாங்கள் மிகவும் பதற்றமாக இருந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் களத்தில் விளையாட்டின் சிறந்த பினி‌ஷர் (டோனி) இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் கடைசி பந்து வரை விளையாடினால், நிச்சயமாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவிடுவார் என்பது எங்களுக்கு தெரியும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது டோனி உலகுக்கு காட்டி இருக்கிறார். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

    இதனால் எப்போது செயல்பட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். நாங்கள் போட்டியை வெல்லவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். எங்களின் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ஆட்டத்திலும் கேட்ச்களை தவறவிட முடியாது என்றார்.

    மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, இறுதிவரை எங்களிடம் இருந்து சிறந்த போராட்டம் வெளிப்பட்டது. பேட்டிங் சரியில்லாத பிறகு பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை தக்க வைத்ததாக நினைத்தேன். ஆனால் இறுதி கட்டத்தில் டோனி எவ்வாறு அமைதியானவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் தனது அணியை வெற்றி பெற வைத்துவிட்டார்.

    ஆடுகளம் நன்றாக இருந்தது. நாங்ள் அதிக ரன்கள் எடுத்திருக்க முடியும். ஆனால் தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்த பிறகு சுதந்திரமாக விளையாடுவது எப்போதும் கடினமாக இருக்கும் என்றார்.

    டோனிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. ஸ்ரீகாந்த், ஷேவாக், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, முகமது கைப், ரஷித்கான் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

    மைக் டைஸன் ஏற்கனவே அவருடைய வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர், 1997ம் ஆண்டு ஒருவரது காதை மைக் டைசன் கடித்து துப்பியது குறிப்பிடத்தக்கது.
    சான் பிரான்ஸிகோ:

    பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மைக் தைசன் சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போல பேசிகொண்டே இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மைக் டைசன் தன் சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையை நோக்கி குணிந்து பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். அதன்பின் முகத்தின் ரத்தத்துடன் பயணி சில முக பாவனைகளை வெளியிடுகிறார். 

    இதுகுறித்து சக பயணிகள் கூறுகையில், மைக் டைஸன் அந்த பயணியை அமைதியாக இருக்கும்படி கூறிவந்தார். ஆனால் அந்த பயணியோ அவரை தொந்தரவு செய்யும்படி காதில் கத்தியபடியே இருந்தார். இதனால் டைசன் அவரை தாக்கினார். பின்னர் விமானம் கிளம்புவதற்கு முன் மைக் டைசன் விமானத்தில் இருந்து வெளியேறினார் என கூறியுள்ளனர்.

    மைக் டைஸன் ஏற்கனவே அவருடைய வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர், 1997ம் ஆண்டு ஒருவரது காதை மைக் டைசன் கடித்து துப்பியது குறிப்பிடத்தக்கது.


    ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஆடம் மில்னே விலகியுள்ளார். 

    சிஎஸ்கே அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு உள்ளார்.
    மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் சென்னை அணியின் சார்பில் பந்து வீசிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 
    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இது ஐ.பி.எல். போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14-வது டக் அவுட்டாகும். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் உத்தப்பா, ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    சென்னை அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முதல் பந்தில் ருத்ராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
    அடுத்து இறங்கிய சாண்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய உத்தப்பா 30 ரன்னிலும், ஷிவம் டுபே 13 ரன்னிலும் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். டோனியுடன், பிரெடோரியஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி வரை போராடினர். பிரெடோரியஸ் 22 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், சென்னை அணி 156 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டோனி 13 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மும்பை அணி சார்பில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டு, உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்தார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, துவக்கத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகினர். அவர்களின் விக்கெட்டை முகேஷ் சவுத்ரி கைப்பற்றினார். பிரெவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 32 ரன்கள் சேர்த்தார். இதனால் 47 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை.

    ஹிருத்திக் ஷாக்கீன் 25 ரன்களிலும், கிரன் பொல்லார்ட் 14 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 5 ரன்களிலும் வெளியேறினர். அதேசமயம், மறுமுனையில் விக்கெட்டை காப்பாற்ற போராடிய திலக் வர்மா அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை எட்டியது. திலக் வர்மா 51 ரன்களுடனும், ஜெய்தேவ் உனாத்கட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட் வீழ்த்தினார். பிராவோ 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.
    சென்னை அணியில் மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    ரிலே மெரிடித், ஹிருத்திக் ஷாக்கீன் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியின் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் வியூகத்துடன் ஆப்ஸ்பின்னராக ஷாக்கீன் களமிறக்கப்பட்டுள்ளார்.
    மங்கோலியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
    உலான்பாதர்: 

    மங்கோலியாவின் உலான்பாதர் நகால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், நடப்பு சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த சரிதா மோர், வெண்கலப் பதக்கம் வென்றார். 

    59 கிலோ எடைப்பிரிவில் சரிதா உள்ளிட்ட 5 பேர் பதக்கத்துக்கான சுற்றில் களமிறங்கினர். இதில் ஜப்பான் மற்றும் மங்கோலிய வீராங்கனைகளிடம் தோல்வியைத் தழுவிய சரிதா, அதன்பின்னர் உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தியதால் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    போட்டி நிறைவடைந்த பின்னர் பேசிய சரிதா கூறுகையில், ‘மங்கோலிய வீராங்கனைக்கு எதிரான போட்டியில் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் சொந்த மண்ணில் விளையாடியதால் நடுவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர் ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றார், ஆனாலும் அவருக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவருக்கு சாதகமாக முடிந்தது’ என்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா, 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். 5 வீராங்கனைகள் பங்கேற்ற பதக்க சுற்றில் சுஷ்மா 2 வெற்றியுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதேபோல் மனிஷாவுக்கு வெண்கலம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பதக்கத்துக்கான கடைசி போட்டியில் தோல்வியடைந்தார்.  சோனிகா ஹூடா (68 கிலோ), சுதேஷ் குமாரி (76 கிலோ) ஆகியோர் பதக்கச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முதல் இரண்டு நாட்களில் கிரேக்க ரோமன் மல்யுத்த பிரிவில் 5 வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
    ×