என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2017ல் நடந்த ஷாங்காய் போட்டிக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி முதல் உலகக் கோப்பை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
    அன்டால்யா:

    துருக்கியில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி அடங்கிய இந்திய ஆண்கள் அணியினர் 232-231 என்ற கணக்கில் வென்று தங்கத்தை வென்றுள்ளனர்.

    2017ல் நடந்த ஷாங்காய் போட்டிக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி பெற்ற முதல் உலகக் கோப்பை தங்கப் பதக்கம் இதுவாகும். 

    வெண்கலப் பதக்கத்திற்கான பிளேஆஃப் போட்டியில் அபிஷேக் வர்மா மற்றும் முஸ்கன் கிரார் ஜோடி 156-157 என்ற கணக்கில் குரோஷிய ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியா இரண்டாவது பதக்க வாய்ப்பை இழந்தது.
    போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே பெங்களூரு அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் மார்கோ ஜான்சன்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பீல்டிங்கைத் தேர்வு  செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஐதராபாத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இரண்டாவது ஓவரிலேயே பெங்களூரு அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் மார்கோ ஜான்சன்.

    சற்று தாக்குப்பிடித்த கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களும், பிரபுதேசாய் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 16.1 ஓவர் தாக்குப்பிடித்த பெங்களூரு அணி 68 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் ஜான்சன்

    ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஜெகதீசா சுசித் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
    கொல்கத்தா அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், ரிங்கு சிங் 35 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 48 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தனர்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா- சகா ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சகா 25 ரன்களும், அதிரடியாக ஆடிய பாண்ட்யா 69 ரன்களும் சேர்த்தனர். டேவிட் மில்லர் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. 

    இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் துவக்கத்திலேயே தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், ரிங்கு சிங் 35 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 48 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தனர். எனினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிறகு 148 ரன்களே சேர்க்க முடிந்தது. 

    இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், யாஷ் தயாள் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 12 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 
    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து அசத்தினார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராள சுப்மன் கில் - சகா ஆடினார். 7 ரன்னில் கில் வெளியேறினார். அடுத்ததாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சகாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    குஜராத் அணி 83 ரன்கள் இருக்கும் போது உமேஷ் யாதவ் பந்து வீச்சில் சகா 25 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த டேவிட் மில்லர் 27 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பாண்ட்யா அரை சதம் அடித்தார். 69 ரன்களில் இருந்த அவர் சவுத்தி பந்து வீச்சில் வெளியேறினார்.

    அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தெவாட்டியா 17, ரஷித் கான் 0, அபினவ் மனோகர் 2, பெர்குசன் 0, டயல் 0 என அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும்.

    கொல்கத்தா அணி தரப்பில் ரசல் 4 விக்கெட்டும், சவுத்தி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.  


    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத் அணி வீரர்கள்

    விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி

    கொல்கத்தா அணி வீரர்கள்
    கொல்கத்தா அணி வீரர்கள்

    வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சவுத்தி, சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
    ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நோபால் குறித்து எழுந்த சர்ச்சையில் சிக்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    வான்கடே:

    ஐபிஎல் கிரிக்கெட் போடியில் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்கள் குவித்தது. 

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

     இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இறுதி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 

    கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் மெக்காய் வீசினார். இவர் முதல் 2 ஓவரில் மட்டும் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை பவல் சிக்சர் விளாசினார்.  3 -வது பந்து இடுப்புக்கு சற்று உயரமாக வந்ததாக வெளியில் இருந்த டெல்லி அணியினர் கூறினார். 

    ஆனால் அதை களத்தில் இருந்த நடுவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த 2 வீரர்களையும் வெளியே வருமாறு கை சைகை காட்டினார். 

    களத்தில் இருந்த நடுவரிடம் சென்று டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் முறையிட்டார். 

    இதனையடுத்து முடிவு டிவி நடுவரிடம் சென்றது. அதனை டிவி அம்பர் நோபால் இல்லை என அறிவித்தார். இதனையடுத்து டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு போட்டியில் இருந்து 50 சதவீதமும், உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரேவுக்கு 100 சதவீதம் அபராதமும் ஒரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற பேட்டியில் நடுவர் நோ பால் கொடுக்காததால் சர்ச்சை ஏற்பட்டது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 

    அப்போது களத்தில் இருந்த ரோவ்மேன் போவல் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார். இந்நிலையில் 3வது பந்தை அவர் எதிர்கொண்ட போது ஃபுல்டாஸுக்கும் மேல் வந்தது போல தெரிந்தது. இதனால் நோ பால் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர்கள் நோ பால் எதுவும் கொடுக்காமல், 3-வது நடுவரிடமும் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி கேப்பிடல் அணியின் துணை பயிற்சியாளர் பிரவின் அம்ரே நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய களத்திற்கு வந்தார்.

    இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த செயல் தனக்கு வருத்தத்தை தருவதாக டெல்லி அணியின் மற்றொரு துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி ஓவரில் நடந்த சம்பவம் வருந்ததக்கது. நடுவரின் முடிவு, அது சரியோ தவறோ அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும். நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய ஒருவர் களத்திற்கு வருவது ஏற்றுகொள்ளக்கூடியது அல்ல. நடுவர்கள் தான் விளையாட்டின் போது ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளனர். அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடாது.

    இவ்வாறு ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்டின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.
    மும்பை:

    ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் கோபத்துடன் காணப்பட்டார். ‘நோ பால்’ கொடுக்காததால் அவர் அதிருப்தி அடைந்து ஆடுகளத்தை விட்டு வீரர்களை வெளியே வருமாறு சைகை செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ரி‌ஷப்பண்ட் நடந்து கொண்ட செயலுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ரி‌ஷப்பண்ட் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இது கிரிக்கெட், கால்பந்து அல்ல. நீங்கள் (ரி‌ஷப்பண்ட்) வீரர்களை அழைத்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது. உங்களால் அதை செய்ய முடியாது. பயிற்சியாளர் பாண்டிங் இருந்து இருந்தால் இப்படி நடந்து இருக்காது” என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறும்போது, “ரி‌ஷப்பண்டின் விளையாட்டில் மோசமான செயலை ஏற்படுத்தி விட்டார். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு, இதனால் அவரது நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

    நடுவரின் முடிவு சரியோ அல்லது தவறோ அதை ஏற்க வேண்டும் என டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணி டெல்லியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்தார். இந்த தொடரில் அவர் 3 வது செஞ்சூரி அடித்து முத்திரை பதித்தார். பட்லர் 65 பந்தில் 116 ரன்னும் (9 பவுண்டரி, 9 சிக்சர்), படிக்கல் 35 பந்தில் 54 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 15 ரன்னில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ரி‌ஷப் பண்ட் 24 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி , 2 சிக்சர்), லலித் யாதவ் 24 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ராவ்மேன் போவெல் 15 பந்தில் 36 ரன்னும் (5 சிக்சர்) எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும், சாஹல், மெக்காய் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    டெல்லி அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 36 ரன் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்தில் போவெல் 3 சிக்சர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் 3-வது பந்து இடுப்பு உயரம் அளவுக்கு வீசப்பட்டதாகவும், இதற்கு நோபால் கொடுக்க வேண்டும் என்றும் டெல்லி அணியினர் முறையிட்டனர்.

    இதற்கு ஆடுகள நடுவர் நோபால் கொடுக்க மறுத்தார். இதனால் மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் விரக்தி அடைந்தார். தனது பேட்ஸ்மேன்களை ஆடுகளத்தை விட்டு வெளியே வருமாறு சைகை செய்ததால் பரபரப்பு நிலவியது.

    டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் அமரேயை களத்துக்கு அனுப்பினார். 3-வது நடுவரின் முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஆடுகள நடுவர் நிராகரித்தார். இது தவிர பவுண்டரி லைனில் இருந்த பட்லர், ரி‌ஷப்பண்ட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.

    பின்னர் எஞ்சிய 3 பந்துகளில் டெல்லி அணியால் 2 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 15 ரன்னில் தோற்றது.

    நோபால் கொடுக்கப்பட்டதால் டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் அதிருப்தி அடைந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் இறுதியில் போவெல் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். நோபால் எங்களுக்கு விலை மதிப்பற்றதாக இருந்து இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

    நோபால் கொடுக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அனைவருக்கும் நோபால் என்று தெரிந்தது. இதில் 3-வது நடுவர் தலையிட்டு அது நோபால் என்று கூறி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    ஆனால் நான் விதியை மாற்ற முடியாது. எனது குழுவை களத்திற்கு அனுப்பியது வெளிப்படையாக சரியானது இல்லை. அது பதற்றமான நேரமாகும். இது இரு தரப்பினரின் தவறு என்று நான் நினைக்கிறேன்.

    நாங்கள் இலக்கை நெருங்கி வந்ததால்தான் இந்த முடிவு கொஞ்சம் வலிக்கிறது. எங்களது பவுலர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும்.

    இவ்வாறு ரி‌ஷப்பண்ட் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “நடுவரின் முடிவு சரியோ அல்லது தவறோ அதை ஏற்க வேண்டும்” என்றார்.

    டெல்லி அணி 4-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8-வது போட்டியில் கொல்கத்தாவை 28-ந் தேதி சந்திக்கிறது. ராஜஸ்தான் 5-வது வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை 26-ந் தேதி எதிர்கொள்கிறது. 
    ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த போட்டிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    மும்பை:

    ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 34 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 
    குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஐதராபாத் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.

    டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களை பெற்றுள்ளது.

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் இருவரும் அதிரடியாக ஆடினர்.

    படிக்கல் 35 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்தார். ஜாஸ் பட்லர் சதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 116 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 28 ரன்னிலும், பிரித்வி ஷா 37 ரன்னிலும் அவுட்டாகினர். சர்ப்ராஸ் கான் ஒரு ரன்னில் வெளியேறினார்.  

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் ஒரு ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 10 ரன்னிலும் அவுட்டாகினர். லலித் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா சிறப்பாக வீசினார். மெய்டனாக வீசியதுடன், ஒரு விக்கெட்டும் எடுத்தார். 

    கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசிய பாவெல், 36 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், டெல்லி அணி 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் அணி பெறும் 5வது வெற்றி இதுவாகும்.

    ராஜஸ்தான் சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட், அஸ்வின் 2விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாங்காக்கில் வரும் மே மாதம் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். 

    சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், வெளியேறிய வீராங்கனைகளுக்குப் பதிலாக, சிம்ரன் சிங் மற்றும் ரித்திகா தக்கார் ஆகியோரை சேர்க்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
    ×