என் மலர்
விளையாட்டு

வாசிம் ஜாபர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீடியோ மூலம் கிண்டலடித்த வாசிம் ஜாபர்
வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.
நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு அருகே சென்று தோல்வியடைந்தது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அந்த அணி வீரர் டேவிட் மில்லர் சி.எஸ்.கே அணியின் பந்துகளை சிதறடிக்கத் தொடங்கினார்.
இறுதியில் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் குஜராத் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் ஆட்டமிளக்காமல் 94 ரன்கள் எடுத்தார். வெற்றி பெற்றுவிடும் தருணத்தில் இருந்த சென்னை அணியின் கனவை டேவிட் மில்லர் களைத்தார். இந்த போட்டியை தொடந்து சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்தார்.
அதில், சாலையில் செல்லும் ஆண் தன்னை நோக்கி ஒரு பெண் வருவதாக தவறுதலாக கருதி கைகளை நீட்டுகிறார். ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு அருகில் உள்ள ஒருவரிடம் சென்று அணைத்துகொள்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாபர். இவ்வாறு தான் சென்னை அணியின் வெற்றியை குஜராத் டைடன்ஸ் திருடிக்கொண்டது என கூறியுள்ளார்.
வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.
This is exactly how Miller stole the win from CSK! #GTvCSK#IPL2022pic.twitter.com/ASJHhBOytz
— Wasim Jaffer (@WasimJaffer14) April 17, 2022
Next Story






