என் மலர்tooltip icon

    விளையாட்டு

    26 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்
    X
    26 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்

    சென்னையில் இன்று தொடக்கம்: 26 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்

    சென்னையில் 26 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கல்லூரி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    சென்னை:

    குருநானக் கல்லூரி சார்பில் பவித்சிங் நாயர் நினைவு அகில இந்திய கல்லூரிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 8-வது பவித்சிங் நாயர் நினைவு கல்லூரிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

    வருகிற 23-ந் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. குருநானக்கல்லூரி மற்றும் அருகே உள்ள 5 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் குருநானக்கல்லூரி, லயோலா, பச்சையப்பா, ஆர்.கே.எம். கேரளா கிறிஸ்ட் கல்லூரி, அரியானா எஸ்.டி.கல்லூரி, மும்பை சி.கே.டி., ஐதராபாத் டி.கே.ஆர்., கேரளா மகாத்மா கல்லூரி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

    பெண்கள் பிரிவில் என்.எஸ்.ஜெயின், எத்திராஜ், ஜே.பி.ஏ.எஸ்.குருநானக், ராணி மேரி உள்பட 10 கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

    இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் ஆண்கள், பெண்கள் அணிக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும்.

    ஆட்ட நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர், பீல்டர், விக்கெட் கீப்பர் ஆகியோருக்கும் பரிசு தொகை வழங்கப்படும். தொடர் நாயகன் விருதை பெறுபவருக்கு ஹீரோ எக்ஸ்டீரிம் மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைக்கும்.
    Next Story
    ×