என் மலர்

  விளையாட்டு

  பேட்ரிக் பர்ஹர்ட்
  X
  பேட்ரிக் பர்ஹர்ட்

  எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடந்துவிட்டது - ஐபிஎல்லில் நுழைந்தது கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 24 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. டெல்லி அணி தங்கள் அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்கிறது.
  மும்பை:

  ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ - பபிள் முறையில் உள்ளனர்.

  இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி அணியின் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து, டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  வீரர்கள் அனைவரும் பயோ பபிளில் இருப்பதால் மற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளியானது.

  Next Story
  ×