என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஹெட்மயர் (கோப்பு படம்)
    X
    ஹெட்மயர் (கோப்பு படம்)

    ஐபிஎல்: லக்னோ அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 65 ரன்களை குவித்தார்
    மும்பை:

    ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது.

    டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் தொடக்க வீரர் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் படிக்கல்  29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

    தொடர்ந்து  சாம்சன் ,வான்டெர் டுசன் ஆகியோரும் அடுத்தடுத்து அவுட்டானதால், ராஜஸ்தான் 12 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    எனினும், ஹெட்மயர் அதிரடியாக விளையாடி, ஒரு பவுண்டரி 6 சிக்சர்கள் உள்பட 36 பந்துகளில் 50 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அஸ்வின் 28 ரன்கள் எடுத்தார். 

    20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடி வருகிறது.





    Next Story
    ×