என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் வாஷிங்டன் சுந்தர்
    X
    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் வாஷிங்டன் சுந்தர்

    ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு- சிஎஸ்கே அணிக்கு எதிராக தமிழக வீரர்கள் சிறப்பான பந்து வீச்சு

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர், நடராஜன் சிறப்பாக பந்து வீசி உள்ளனர்.
    சென்னை அணிக்கு எதிரான 17-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களான உத்தப்பா-ருதுராஜ் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். உத்தப்பா 11 பந்தில் 15 ரன்னிலும் ருதுராஜ் 13 பந்தில் 16 ரன்னிலும் வெளியேறினர். 

    ருதுராஜ் ஆட்டம் இந்த சீசனில் மிகவும் சொதப்பலாகவே உள்ளது. இதனையடுத்து மொயின் அலி-ராயுடு ஜோடி பவுண்டரி சிக்சர்களுடன் ரன்களை உயர்த்தினர். சென்னை அணி 98 ரன்கள் இருக்கும் போது அம்பதி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆனார். சென்னை அடுத்த 10 (108) ரன்கள் எடுப்பதற்குள் மொயின் அலி அவுட் ஆனார். 

    மொயின் அலி- அம்பதி ராயுடு

    அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிவம் துபே 3, டோனி 3, ஜடேஜா 23 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இதனால் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கும்.

    ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×