என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடி என்ற சாதனையை கே.எல் ராகுல் – டி காக் இணை நிகழ்த்தியுள்ளது.
மும்பை:
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் - டி காக் ஜோடி, 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.
இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் இணை முதல் இடத்தில் உள்ளது.
இதற்குமுன் 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் (ஐதராபாத் அணி ) கூட்டணி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராகுல் - டி காக் இணை முறியடித்துள்ளது.
இதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிராக 210 ரன்கள் என்பது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 167 ரன்கள் எடுத்து இருந்தது.
மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடி என்ற சாதனையைம் கே.எல் ராகுல் – டி காக் இணை படைத்துள்ளது.
மேலும் நேற்றைய ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் அடித்ததன் மூலம் டி காக், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகபட்ச ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்லின் 175 ரன்களுடன் முதலிடம் மற்றும் பிரண்டன் மெக்கல்லத்தின் 158 ரன்களுடன் 2 வது இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்திருந்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே எல் ராகுல் - குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது..
இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. டி காக் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் - டி காக் ஜோடி 4 சிக்சர்கள் அடித்தார். ரசல் வீசிய ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்தார். இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது.
டி காக் 70 பந்துகளில் 140 ரன்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். மற்றொரு வீரர் தோமர் 4 ரன்னுடன்
வெளியேறினார்.
நிதிஷ் சர்மா 42 ரன்களும் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 50 ரன்களும் குவித்தனர். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் அடித்தார். ரிங்கு சிங் 40 ரன்கள் அடித்தார். சுனில் நரேன் 21 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார்.
20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மொஹ்சின் கான், மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையும் படியுங்கள்...
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகின்றன.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை டாக்டர் டிஒய் பாட்டில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக குவின்டன் டி காக் 70 பந்துகளில் பத்து 6, 10 பவுண்டரிகள் எடுத்து 140 ரன்களை விளாசினார். கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்.. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை டாக்டர் டிஒய் பாட்டில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக குவின்டன் டி காக் 70 பந்துகளில் பத்து 6, 10 பவுண்டரிகள் எடுத்து 140 ரன்களை விளாசினார். கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்.. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.
பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இவர், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டெசை, 18-21 21-10 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். அடுத்து அயர்லாந்து வீரர் நிகுயென்னை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 14 முறை சாம்பியன் பட்டம் வெற்ற இந்தோனேசிய அணியை இறுதிச்சுற்றில் இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்து.
தாய்லாந்து ஓபன், மகளிர் ஒற்றையர் பிரிவில் தகுதி சுற்று மூலம் பங்கேற்ற இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிகா, தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனிடம் 10-21 15-21 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப், கனடாவின் மிச்செல்லியிடம் 13-21 18-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஜோடியும் முதல் சுற்றை தாண்டவில்லை. இவர்கள் முதல் சுற்றில் ஜப்பானின் யுகி கனேகோ- மிசாகி மட்சுடோமோ ஜோடியிடம் 17-21 17-21 என தோல்வியடைந்தது.
லக்னோ அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 10 அணிகளுக்கும் தலா 13 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஒவ்வொரு அணியும் இன்னும் ஒரு போட்டியில் ஆட வேண்டும். மொத்தம் இன்னும் 5 லீக் ஆட்டம் எஞ்சி உள்ளன.
லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 3 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 7 அணிகள் உள்ளன.
இதில் ராஜஸ்தானும், லக்னோவும் கிட்டத்தட்ட தகுதி பெறும் நிலையில் உள்ளன. இரு அணிகளும் தலா 16 புள்ளிகளுடன் இருக்கின்றன. கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முன்னேறும்.
ராஜஸ்தான் அணி சி.எஸ்.கே.வையும், லக்னோ அணி கொல்கத்தவையும் கடைசி ஆட்டத்தில் எதிர் கொள்கின்றன. இந்த ஆட்டங்களில் தோற்றாலும் அந்த அணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் மிகவும் மோசமாக தோற்றால் மட்டுமே தகுதி பெற முடியாத நிலை ஏற்படும். ராஜஸ்தானும், லக்னோவும் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ளன.
டெல்லி, பெங்களூரு அணிகள் 14 புள்ளிகளுடனும், கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத், அணிகள் 12 புள்ளிகளுடனும் உள்ளன.
டெல்லி கடைசி ஆட்டத்தில் மும்பையையும் (21-ந் தேதி), பெங்களூர் அணி குஜராத்தையும் (நாளை) சந்திக்கின்றன. டெல்லி, பெங்களூர் அணிகளில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றாலே கொல்கத்தா, பஞ்சாப், ஜதராபாத் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விடும்.
இந்த 3 அணிகளும் வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் பெங்களூர், டெல்லி அணிகள் தோற்க வேண்டும். அதே நேரத்தில் கடைசி ஆட்டத்தில் 3 அணிகளும் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் 5 அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்கும். ஒரு அணி ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறும்.
டெல்லி அணி ரன் ரேட்டில் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. பெங்களூர் அணி ரன்ரேட்டில் மோசாக இருப்பதால் அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
மும்பை டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோது கின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணி 14 புள்ளியுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் வெளியேற்றப்படும்.
லக்னோ அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 75 ரன்னில் கொல்கத்தாவை தோற்கடித்து இருந்தது.
டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
மும்பை:
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
அதன்படி, அஷ்வின் (274 விக்கெட்), சாஹல் (271 விக்கெட்), புயூஷ் சாவ்லா (270 விக்கெட்), அமித் மிஷ்ரா (262 விக்கெட்) ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் டி20-யில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில், 250 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் , மும்பை வேகப்பந்த வீரர்பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் 2-வது இடத்தில் உள்ளார்.
முதலில் விளையாடிய ஐதராபாத் அணியில் ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 65-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரியுடன் 76 ரன்களை குவித்து அவுட்டானர்.
பிரியம் கார்க் 26 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து, 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா36 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேனியல் சாம்ஸ் 15 ரன்னும், திலக் வர்மா 8 ரன்னுடனும் வெளியேறினர்.
அபாரமாக விளையாடிய திம் டேவிட் 18 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட்டானார். ரமன்தீப் சிங் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள்....காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரகானே
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் ஐதராபாத் அணியின் ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
ஐபிஎல் 15வது சீசனின் 65-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி பிரியம் கார்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.
பிரியம் கார்க் 26 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து இறங்கிய நிகோலஸ் பூரன், திரிபாதியுடன் ஜோடி சேர்ந்து மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தார். சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி அரை சதம் கடந்தார். நிகோலஸ் பூரன் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரியுடன் 76 ரன்களை குவித்து அவுட்டானர்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
மும்பை அணி சார்பில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர்.
சட்டோகிராம்:
வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார். நேற்று 2-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வங்காளதேச அணி தொடக்க வீரர் ஹசன் ஜாய் அரை சதமடித்து 58 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹொசைன் சாண்டோ மற்றும் மோமினுல் ஹக் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் சிறப்பாக ஆடிய தமீம் இக்பால் சதமடித்து அசத்தினார். 133 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹீம் 53 ரன்னும், லிட்டன் தாஸ் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணியை விட வங்காளதேச அணி 79 ரன்கள் பின்தங்கியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அஜிங்கியா ரகானே 7 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மும்பை:
ஐபிஎல் 15-வது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பரமத்திவேலூரில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கபாடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். கபாடி போட்டியில் , நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 முன்னணி கபாடி அணிகள் கலந்துகொண்டன.
போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் குமாரபாளையம் அன்னை தெரசா அணியானது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அணிச்சம்பாளையம் பிரதர்ஸ் அணியை 20:16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கபாடி அணிகளுக்கு, சுழற்கோப்பையுடன் முதல் பரிசு குமாரபாளையம் அன்னை தெரசா அணிக்கு ரூ. 10,001, 2-ம் பரிசு அணிச்சம்பாளையம் அனிச்சை பிரதர்ஸ் அணிக்கு ரூ. 7,001-, 3,4-ம் பரிசுகள், கண்ணீர் துளி மற்றும் திருச்செங்கோடு முரளி பிரதர்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 4001- ஆகிய பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி , நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் முத்துகுமார், பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் அருண், கட்சி நிர்வாகிகள், மாவட்ட அமெச்சூர் கபாடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் விளையாட்டுத் துறைக்கான புதிய ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், TNSPORTS என்ற புதிய ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விளையாட்டு வீரா்கள் விளையாட்டு தொடா்பான செய்திகளை அறிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும், இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு சம்மந்தமான செய்திகளை http://www.tnsports.org.in/webapp/login.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரா்களின் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், பிறந்த தேதி மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவா்கள் மற்றும் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே டிஜி லாக்கா் மூலம் வழங்கப்படவுள்ளது.
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆா்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






