என் மலர்

  விளையாட்டு

  ,
  X
  ,

  நாமக்கல் செய்தி விளையாட்டுத் துறைக்கான புதிய ஆடுகளம் செயலி அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல்லில் விளையாட்டுத் துறைக்கான புதிய ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
  நாமக்கல்:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், TNSPORTS என்ற  புதிய ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

  பொதுமக்கள், விளையாட்டு வீரா்கள் விளையாட்டு தொடா்பான செய்திகளை அறிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும், இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு சம்மந்தமான செய்திகளை  http://www.tnsports.org.in/webapp/login.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

  இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரா்களின் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், பிறந்த தேதி மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். 

  விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவா்கள் மற்றும் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே டிஜி லாக்கா் மூலம் வழங்கப்படவுள்ளது. 

  எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆா்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×