என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.
    மும்பை:

    மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். 

    அதன்படி, முதலில் பேட்ட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்தார். 

    ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹல், மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், படிக்கல் 3 ரன்னிலும், ஹெட்மயர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அஸ்வின் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அஸ்வின் 40 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
    சென்னை அணி வீரர் மொயின் அலி, ராஜஸ்தான் வீரர் டிரென்ட் போல்ட் வீசிய ஓவரில் 26 ரன்கள் குவித்தார்
    மும்பை:

    மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 

    டிரென்ட் போல்ட் வீசிய ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார்.  தொடர்ந்து விளையாடி அவர், 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    எனினும்  ராயுடு 3 ரன்னுக்கும், ஜெகதீசன் ஒரு ரன் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.  கேப்டன் தோனி 26 ரன்கள் அடித்து அவுட்டானார். 

    ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் 2 விக்கெட்களையும், ஓபேட் மெக்காய் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 6  விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 151 ரன்கள் என்றை இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்குகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்த தோனியின் முடிவை சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.
    மும்பை:

    ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் எம்.எஸ்.தோனி, மும்பையில் இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் வர்ணனையாளர் இயான் பிஷப் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

    அப்போது,  சென்னையில் விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறுவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அநீதி இழைத்து போல் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.  

    மேலும் அவர் பேசியதாவது:

    இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது, மும்பை மீது எனக்கு ஒரு அணியாகவும் தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. 

    அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்,
    அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம். இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. 

    ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தோனியின் முடிவை வரவேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இது ஒரு அற்புதமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். 

    அவர் கூறியது போல, தனது அணிக்கும் அவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறார் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார், அவர் இந்தியாவை இதுவரை கண்டிராத உயரத்திற்கு கொண்டு சென்றார் என்றும் தோனி குறித்து கவாஸ்கர் பாராட்டு தெரிவித்தார்.

    சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் 2-வது இடத்துக்கு முன்னேறும். 2-வது இடத்துக்கு முன்னேறினால் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.
    முப்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி 13 ஆட்டத்தில் 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் ராஜஸ்தான் அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 5 தோல்வி பெற்று 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளேஆப்சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

    இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் 2-வது இடத்துக்கு முன்னேறும். 2-வது இடத்துக்கு முன்னேறினால் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் வெற்றிக்காக ராஜஸ்தான் போராடும் ஒரு வேளை இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் தோற்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மிகவும் மோசமாக தோற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    வங்காளதேசம், இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ், வங்காளதேசத்தின் தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்தனர்.
    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 விக்கெட், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமீம் இக்பால் சதமடித்து 133 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்னிலும், லிட்டன் தாஸ் 88 ரன்னிலும், ஹசன் ஜாய் 58 ரன்னிலும் வெளியேறினர்.

    இலங்கை சார்பில் காசன் ரஜிதா 4 விக்கெட், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 68 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி 2வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், 5ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெலா 61 ரன்னுடனும், சண்டிமால் 39 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.
    ஆட்ட நாயகன் விருது ஏஞ்சலோ மேத்யூசுக்கு அளிக்கப்பட்டது. 

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.
    குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி 54 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 73 ரன்களை குவித்தார்.
    மும்பை:

    மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்னும், டேவிட் மில்லர் 34 ரன்னும், விரித்திமான் சஹா 31 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூரு சார்பில் ஹேசிவுட் 2 விக்கெட், மேக்ஸ்வெல், ஹசாரங்கா தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடினர். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.

    அணியின் எண்ணிக்கை 115 ஆக இருந்தபோது டூ பிளசிஸ் 44 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து 73 ரன்னில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 40 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், பெங்களூரு அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது. 
    மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.
    உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார்.

    52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார்.

    உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. மாமல்லபுரத்தில் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிக்கு கூடுதல் அரங்கம்- பணிகள் தீவிரம்
    169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

    மும்பை வாங்கடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதனால், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் மூன்று 6, 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, டேவிட் மில்லர் 34 ரன்கள், விரிதிமான் சாஹா 31 ரன்கள், ராஷித் கான் 19 ரன்கள், வேத் 16 ரன்கள், ராகுல் திவாதியா 2 ரன்கள் மற்றும் ஷூப்மான் கில் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூரு அணி தரப்பில் விளையாடிய ஹசல்வூட் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் மற்றும் ஹசாரங்கா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.

    இதையும் படியுங்கள்..  மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை - பழனிவேல் தியாகராஜன்
    தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்கப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ந் தேதி வரை 44வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” விளையாட்டு போட்டி நடக்கிறது.

    இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். விளையாட்டு அரங்கம் அமைக்க 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் மற்றும் மின் ஒளி விளக்குகள் அமைக்க 2,000 கி.வா, மின்சாரமும் தேவைப்படுகிறது.

    தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்க அரசால் உத்தரவிட்டுள்ளது.

    இதை அடுத்து “போர் பாய்ண்ட்ஸ்” வாகன நிறுத்தம் பகுதியை அரங்கமாக மாற்றும் பணி துவங்கியது. அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணிகளையும் மின் வாரியத்தினர் துவங்கி உள்ளனர்.

    போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் தலைமை நிர்வாக இயக்குனர் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது.
    இந்த கடிதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஃபிரேம் செய்து வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு 4-வது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணி, இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணியின் புதிய கேப்டனாக இந்த ஆண்டு பொறுப்பேற்ற ஜடேஜா தனது பதவியை துறந்தார். பின் அவர் தொடரில் இருந்தும் வெளியேறினார். முன்னாள் கேப்டன் டோனி மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இருப்பினும் தொடரில் இருந்து வெளியேறியதால் சென்னை அணி வீரர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டோனிக்கு உணர்ச்சிமிகு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    இருளாக இருக்கும்போது நீங்கள் ஒளியை கொண்டு வருவீர்கள். நாம் அனைவரும் வேறுபாடு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களது வாழ்க்கையை ஒன்றாக இணைத்துள்ளீர்கள்.

    நீங்கள் சிறப்பாக ஆடும்போது நான் சிறப்பாக ஆடியதுபோல் உணர்கிறேன். நீங்கள் தொல்வியடையும்போது நானும் தோல்வி அடைகிறேன். நீங்கள் உணர்ச்சியை வெளிகாட்ட மாட்டீர்கள். ஆனால் நான் உங்கள் போட்டியின்போது சிரிக்கிறேன். அழுகிறேன். சண்டையிடுகிறேன். கொண்டாடுகிறேன்.

    உங்கள் கிரிக்கெட் வாழ்வு, எனது வாழ்வில் ஒரு அங்கம்.  கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் நீங்கள் எனது வாழ்க்கையை தொட்டிருக்கிறீர்கள்.

    டோனி என்ற மனிதர் எனக்கு நிறைய கற்றுத்தந்திருக்கிறார். உங்களை யாராவது சந்தித்தால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  

    சாதனைகளுக்கு அப்பால் உங்களை கண்டபோதுதான், நான் உங்களின் தொண்டன் ஆனேன். நீங்கள் எனது அதீத மகிழ்ச்சியாகவும், அதீத சோகமாகவும் இருக்கிறீர்கள்.

    16 வயதாகும் நான் நீங்கள் நேர்காணலில் பேசியதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். அடக்கமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதையும், அவமானங்களை தாங்கிக்கொண்டு, சாகசங்களை கணக்கிட்டு எதிர்கொள்வது தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் உங்களிடம் இருந்து தான் தெரிந்துகொண்டேன். 

    அந்த நாளில் தான் என் வாழ்க்கை மாறியது. உங்களுடைய தன்மை எனக்கு 7 சதவீதம் இருந்தால் கூட நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவேன். இந்திய கிரிக்கெட்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வரை நீங்கள் செய்த சாதனைகளுக்கு நான் நன்றி சொல்லாத நாளே இல்லை.

    எனது அருமை கேப்டன் அவர்களே, உங்களை போல் யாரும் இல்லை.

    இப்படிக்கு, உங்கள் வாழ்நாள் தொண்டன்.

    இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்தார். 

    இவற்றை படித்துவிட்டு டோனி, சிறப்பாக எழுதியுள்ளீர்கள் என கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபிரேம் செய்து வெளியிட்டுள்ளது.
    யாமக் ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    மூனிச்:

    தோல்வியே கண்டிராதா குத்துச்சண்டை வீரர் மூசா யாமக், போட்டியின்போது மாரடைப்பால் விழுந்து உயிரிழந்தார்.

    ஜெர்மனியை சேர்ந்த 38 வயதான மூசா யாமக், மூனிச்சில் நடைபெற்ற போட்டியில் உகாந்தா வீரர் ஹாம்சா வாண்டதராவை எதிர்கொண்டார். 

    போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது 3வது சுற்றுக்கு முன் மூசா யாமக் குத்துச் சண்டை வளையத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கே மருத்துவ குழு வந்து பார்த்தபோது அவருக்கு மாரடைப்பு என தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார்.

    இந்த மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மூசா யாமக் 8-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்தார். மேலும் இவரது அனைத்து வெற்றிகளும் நாக்-அவுட் மூலம் பெற்றவை என்ற புகழும் இவருக்கு உண்டு.

    யாமக் ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் லக்னோ பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    மும்பை டி.ஒய்.படேல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 210 ரன் குவித்தது.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டி காக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 70 பந்துகளில் 10 பவுண்டரி 10 சிக்சருடன் 140 ரன்கள் குவித்தார். ஐ.பி.எல். போட்டியில் இது 3-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான லோகேஷ் ராகுல் 51 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் தொடக்க ஜோடியின் அதிக ரன் இதுவாகும். இதன் மூலம் குயின்டன் டி காக்கும், ராகுலும் சாதனை படைத்துள்ளனர்.

    பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்னில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்தில் 50 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) நிதிஷ் ராணா 22 பந்தில் 42 ரன்னும் (9 பவுண்டரி), ரிங்கு சிங் 15 பந்தில் 40 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), சாம் பில்லிங்ஸ் 24 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். மோஷின்கான், ஸ்டோனிஸ் தலா 3 விக்கெட்டும், கிருஷ்ணப்பா, ரவி பிஸ்னோய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    ஆட்டத்தின் கடை ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டது. ஸ்டோனிஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் சிக்சரும் 3-வது பந்தில் சிக்சரும் அடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார். இதனால் 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது.

    கொல்கத்தா இந்த ரன்னை எடுத்து வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 5-வது பந்தில் ரிங்கு சிங் ஆட்டம் இழந்தார். அவர் தூக்கி அடித்த பந்தை இவின் லீவிஸ் ஓடி வந்து இடது கையில் அபாரமாக பிடித்தார். ஒற்றை கையில் பிடித்த இந்த கேட்ச் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த கேட்சாக கருதப்படுகிறது.

    கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் உமேஷ் யாதவை ஸ்டானிஸ் போல்டு செய்தார். இதனால் கொல்கத்தா 2 ரன்னில் தோற்றது.

    இந்த வெற்றியின் மூலம் லக்னோ பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:

    நாங்கள் இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருப்போம். தோற்று விட்டதாகவே உணர்வு ஏற்பட்டது. இந்த சீசனில் இது போன்ற ஆட்டங்களை தவறவிட்டோம். பல ஆட்டங்கள் கடைசி ஓவர் வரை சென்றதில்லை. சில போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று இருக்கலாம். வெற்றியுடன முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கிரிக்கெட்டின் சிறப்பான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்திய பெருமை உண்டு. கடைசியில் எங்களுக்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது.

    கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார். அவர் புத்திசாலிதனமாக வீசினார். எங்களது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த தோல்வி மூலம் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

    ×