என் மலர்
விளையாட்டு
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி- 20 இந்திய அணியில் ருத்துராஜ் கைக்வாண்ட், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ரவி பிஷ்னோய், புவேனஸ்வர் குமார், ஹர்சல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்.. தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன்
தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற லீக் சுற்று போட்டிகளில் சென்னை விளையாட்டு விடுதி அணி மற்றும் டெல்லி விமான படை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தொடர்ந்து விறுவிறுப்பாக அதிக புள்ளிகளை சேர்த்தனர். கடைசி 5 நிமிடத்தில் சென்னை விளையாட்டு விடுதி அணி வீரர்கள் அதிக புள்ளிகளை எடுத்தனர். மேலும் 87க்கு 83 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற சென்னை விளையாட்டு விடுதி அணிக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சுழற்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கினார். மேலும் 2-ம் இடம் பிடித்த டெல்லி விமான படை அணிக்கு கோப்பை மற்றும் ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதில் தொடர்ச்சியாக அதிக புள்ளிகளை அணிக்காக சேர்த்த சிறந்த விளையாட்டு வீரருக்கு இருசக்கர வாகனம் வழங்கினர். இதில் பெரியகுளம் சரவணக்குமார் எம்.எல்.ஏ., தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, அருண் மோட்டார்ஸ் பவுன்கோயபல்ஸ் மற்றும் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தாமஸ் கோப்பையை இந்தியா வென்ற பிறகு பேட்மிண்டன் விளையாட்டை நாடு கவனிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சந்தித்தனர்.
இதேபோல் உபேர் கோப்பையை வென்ற இந்திய மகளிர் பேட்மிண்டன் வீராங்கனைகளும் பிரதமரை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர், நீங்கள் செய்துள்ளது சிறிய சாதனை அல்ல என்றார். ஒட்டுமொத்த அணிக்கும் தேசத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
எங்களால் முடியும் என்ற மனப்பான்மை இன்று நாட்டில் புதிய பலமாக மாறியுள்ளதாகவும், வீரர்களுக்கு அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு மக்கள் இந்த போட்டிகளை ஒருபோதும் பொருட்படுத்தவில்லை, ஆனால் தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு பேட்மிண்டன் விளையாட்டை நாடு கவனித்து வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அப்போது பேசிய இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகில் வேறு எந்த விளையாட்டு வீரரும் இதைப் பற்றி பெருமையாக சொல்ல முடியாது, நான் மிகவும் பெருமையுடன் சொல்ல முடியும், வெற்றி பெற்ற உடனேயே உங்களிடம் பேசும் பாக்கியம் எங்களுக்கு மட்டுமே கிடைத்தது இதற்கு மிக்க நன்றி என்று தெரிவித்தார்
பிரதமருடனான சந்திப்பு குறித்து பின்னர் பேசிய இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், இந்திய வீரர்களையும், விளையாட்டையும் பிரதமர் கவனித்து வருகிறார். அவரது எண்ணங்கள் வீரர்களுடன் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர்- ரிக்கி பாண்டிங் நம்பிக்கை
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதால் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துள்ளது.
மும்பை:
போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பேட்டி அளித்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், டிம் டேவிட் அடித்த பந்து பேட்டில்
உரசியதாக நான் உணர்ந்தேன் என்றும், ஆனால் இறுதியில் நான் ரீவ்யூ கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தனது தவறு காரணமாக அணிக்கு பிளே-ஆஃப் சுற்றில் இடம் கிடைக்கவில்லை என ரிஷப் உணர்கிறார், அவர் இன்னும் இளமையாக இருக்கிறார், கேப்டன்ஷிப் பற்றி கற்றுக்கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஒரு சிறந்த கேப்டன், அவர் தனது அணியை எப்படி வழி நடத்துகிறார் என்பதை கடந்த சீசனில் நாங்கள் பார்த்தோம். சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கு உங்கள் வழியில் செல்லாது, நான் இதுபோன்ற சூழ்நிலைகளை கடந்து விட்டேன், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று பாண்டிங் கூறினார்.
ரிஷப் விளையாட்டை பின்னால் இருந்து நிறைய கற்றுக் கொள்வார் என்றும், அவர் சிறந்த மனம் கொண்டவர் என்றும் குறிப்பிட்ட பாண்டிங்,
இது போன்ற தடுமாற்றங்கள் விளையாட்டில் ஏற்படலாம், அப்போது உங்களை சந்தேகிக்காமல் இருப்பது முக்கியம், ரிஷப் வலுவாக திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
மும்பை:
மும்பையில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 4-வது வெற்றி ஆகும்.
மும்பைஅணி வெற்றி பெற்றதால், டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி மும்பையை வென்றது. அப்போது ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
இதேபோல், 4 ஆண்டுக்குப் பிறகு மும்பை அணி டெல்லியை தோற்கடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளது. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தினார் பிவி சிந்து.
பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பெய் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
10 அணிகள் பங்கேற்ற ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
மும்பை:
15-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றது. மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
எனவே, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மட்டுமே இருந்தன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளுடனும் இருந்தன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறியது.
எனவே, புள்ளிகள் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் 4-வது அணியாக நுழைந்தது.
நாளை மறுதினம் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
25ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
27-ம் தேதி நடைபெறும் அகமதாபாத்தில் நடைபெறும் 2வது தகுதிச்சுற்றில், முதல் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
29ம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்றில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.
இதையும் படியுங்கள்...டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷண், பிரெவிஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது.
மும்பை:
மும்பையில் இன்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ராவன் பவல் 43 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன், பிருத்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட், ரமன்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பிரெவிஸ், இஷான் கிஷணுடன் ஜோடி சேர்ந்தார். பிரெவிஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் இஷான் கிஷண் வெளியேறினார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா, டிம் டேவிட் ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. டிம் டேவிட் 11 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 4வது வெற்றி ஆகும்.
மும்பைஅணி வெற்றி பெற்றதால், டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இன்றைய போட்டியின் முடிவு, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா? என்பதை தீர்மானிக்கிறது.
மும்பை:
மும்பையில் இன்று நடைபெறும் 69 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி பேட்டிங் செய்தது.
முதலில் களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்ன்ர் 5 ரன்னுக்கும், பிருத்வி ஷா 24 ரன்களும், ஆட்டமிழந்தனர்.
மிக்சேல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காத நிலையில், விக்கெட்டை இழந்தார். கேப்டன் ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்தார்.சர்பராஸ்கான் 10 ரன்னுடன் வெளியேற, ராவன் பவல் 43 ரன்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்குகிறது.
இன்றைய போட்டியின் முடிவு, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா? என்பதை தீர்மானிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...
செஸ் போட்டி: உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா
காது கேளாருக்கான டெப்லிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றது.
புதுடெல்லி:
பிரேசில் நாட்டின் காக்சியாஸ் டோ சுல் நகரில் மே 1ஆம் தேதி தொடங்கிய, காது கேளாதோர் டெப்லிம்க்ஸ் போட்டிகள் நடைபெற்றன.
மே 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டிகளில்
72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் 65 தடகள வீரர்களைக் கொண்ட அணி இந்த போட்டிகள் பங்கேற்றது.
மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில் டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.
அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
நமது வீரர்கள் தங்களது விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்த முறை டெப்லிக்ம்ஸ் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதாகவும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் அதிவேக செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்துகொண்டு செஸ் ஆடி வருகின்றனர்.
இதில் 5வது சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இந்த போட்டி சமனில் முடிய இருந்த நிலையில், 40வது சுற்றுக்கு பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறினை புரிந்துகொண்ட பிரக்ஞானந்தா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டில் 2வது முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் 2வது நாள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.
சீனாவின் வேய் யி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டேவிட் ஆண்டன் 15 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் என்று டோனி அறிவித்திருப்பது அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்த ஐ.பி.எல். சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 10 ஆட்டத்தில் தோற்றது.
கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய போட்டிக்கு பிறகுஅவர் அடுத்த ஐ.பி.எல். (2023) போட்டியிலும் ஆடுவேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக டோனி கூறும்போது
நிச்சயமாக அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன். எனது கடைசி போட்டியை சென்னையில் விளையாடாமல் விலகினால் நியாயமாக இருக்காது. சென்னையில் ஆடாமல் விடைபெற்றால் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு நன்றாக இருக்காது என்றார்.
டோனியின் இந்த முடிவை கவாஸ்கர் வரவேற்று உள்ளார். முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் என்று டோனி அறிவித்து இருப்பது சிறந்ததாகும். இதை ஒரு அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன்.
அவர் அந்த அணிக்கும், ஆதரவளித்தவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறார். டோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து இதுவரை காணாத அளவிற்கு உச்சத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.
அடுத்த ஆண்டு அவர் விளையாடும் போட்டிகளில் ராஞ்சி மைதானமும் ஒன்றாக அமையலாம். 10 மைதானங்களில் விளையாடுவார். இதனால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பை பெறுவார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.






