என் மலர்

  விளையாட்டு

  வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அமைச்சர் இ.பெரியசாமி சுழற்கோப்பையை வழங்கினார். அருகில் கலெக்டர் முரளிதரன் மற்றும்
  X
  வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அமைச்சர் இ.பெரியசாமி சுழற்கோப்பையை வழங்கினார். அருகில் கலெக்டர் முரளிதரன் மற்றும்

  தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  பெரியகுளம்:

  தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 15ஆம் தேதி  தொடங்கி நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது. 

  கடந்த 3 நாட்களாக நடைபெற்ற லீக் சுற்று போட்டிகளில் சென்னை விளையாட்டு விடுதி அணி மற்றும் டெல்லி விமான படை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

  நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தொடர்ந்து விறுவிறுப்பாக அதிக புள்ளிகளை சேர்த்தனர். கடைசி 5 நிமிடத்தில் சென்னை விளையாட்டு விடுதி அணி வீரர்கள் அதிக புள்ளிகளை எடுத்தனர். மேலும் 87க்கு 83 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற வைத்தனர்.

  இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற சென்னை விளையாட்டு விடுதி அணிக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சுழற்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கினார். மேலும் 2-ம் இடம் பிடித்த டெல்லி விமான படை அணிக்கு கோப்பை மற்றும் ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. 

  இதில் தொடர்ச்சியாக அதிக புள்ளிகளை அணிக்காக சேர்த்த சிறந்த விளையாட்டு வீரருக்கு இருசக்கர வாகனம் வழங்கினர். இதில் பெரியகுளம் சரவணக்குமார் எம்.எல்.ஏ., தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, அருண் மோட்டார்ஸ் பவுன்கோயபல்ஸ் மற்றும் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×