என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின்.

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார். 14 ஆட்டத்தில் 10 இன்னிங்சில் ஆடி 183 ரன்கள் எடுத்தார். டெஸ்டில் ஸ்டிரைக்ரேட் 146.40 ஆகும். ஒரு அரை சதம் அடித்துள்ளார். 11 விக்கெட் வீழ்த்தினார்.

    35 வயதான அவர் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன் (அவுட் இல்லை) எடுத்து ராஜஸ்தான் அணி 2-வது இடத்தை பிடிக்க காரணமாக திகழ்ந்தார்.

    இந்த நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். 5 சதம் எடுத்துள்ளார். எந்த வரிசையில் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்.

    அஸ்வின்

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அஸ்வின் தேவையானவர். அவரை தேர்வு செய்ய வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதிக்கும் அவர் நீக்கப்படக்கூடியவர் அல்ல.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
    மிர்புர்:

    இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் டக் அவுட்டாகினர். கேப்டன் மொமினுல் ஹக் 9 ரன்னிலும், நஜ்முல் ஹூசைன் 8 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நேற்றைய போட்டியில் 23-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறிய அவர், டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை, தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என தெரிய வந்ததால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.
    பெண்கள் சேலஞ்ச் கோப்பை டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது.
    புனே:

    3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முதல் லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல்பிளேசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த சூப்பர்நோவாஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன், ஹர்லின் தியோல் 35 ரன், டாட்டின் 32 ரன்கள் எடுத்தனர்.

    அதன்பின், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரையல் பிளேசர்ஸ் ஆடியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் டிரையல் பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூப்பர் நோவாஸ் சார்பில் பூஜா வஸ்த்ராசாகர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
    பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.

    இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
    அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி, கடின உழைப்பு தொடரும் என இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூன் 9-ந் தேதி டெல்லியில் தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, முன்னணி வேகப்பந்து வீரர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாகவும், ரிஷப்பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.

    ஐ.பி.எல்.லில் அதிவேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் முதல்முறையாக இடம் பெற்று உள்ளனர். காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ், ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை.

    தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை அரை இறுதியில்ஆடினார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகி இருக்கிறார்.

    36 வயதான தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தினேஷ் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில்கூறி இருப்பதாவது:-

    உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி, கடின உழைப்பு தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல்.லில் பெங்களூர் அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 287 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 191.33 ஆகும்.

    தினேஷ் கார்த்திக் 2004- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவரில் 32 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

    குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றுடன லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின.

    புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 18 புள்ளிகளும் (9 வெற்றி, 5 தோல்வி) பெற்று முறையே 2-வது , 3-வது இடங்களை பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 6 தோல்வி) 4-வது இடத்தை பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 5-வது இடத்தையும் (7வெற்றி, 7 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் 6-வது இடத்தையும் (7 வெற்றி 7 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தன.

    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று முறையே 9-வது, 10-வது இடங்களில் உள்ளன.

    இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆப் சுற்று நாளை (24- ந் தேதி) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ-பெங்களூரு மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ போட்டியில் மோதும்.

    எலிமினேட்டர் 25- ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ‘குவாலிபையர் 2’ ஆட்டம் 27-ந் தேதியும், இறுதிப்போட்டி 29-ந் தேதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

    நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல்அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத் அணி ‘லீக் முடிவில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (413 ரன்), சுப்மன்கல் (403 ரன்), மில்லர் (381 ரன்), விர்த்திமான் சஹா, ராகுல்திவேதியா, ரஷித்கான், முகமது ஷமி (தலா 18 விக்கெட்), போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ரஷித்கான் ‘ஆல்ரவுண்டு’ பணியில் நல்ல நிலையில்இருக்கிறார்.

    ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 629 ரன்கள் குவித்து இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் (374 ரன்), படிக்கல்(337 ரன்), ஹெட்மயர் (297 ரன்), ரியான் பராக் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் 26 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா (15 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். அஸ்வின் ஆல்ரவுண்டு பணியில் ஜொலித்து வருகிறார்.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதின. இதில் ராஜஸ்தானை 37 ரன்னில் குஜராத் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
    மும்பை:

    இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

    இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இதையடுத்து தான் இந்திய அணி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட தினேஷ் கார்த்திக்,

     ‘உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களையே நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தேடி வரும்’ 

    என தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
    பெங்களூரு நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
    மும்பை:

    ஐ.பி.எல். 15வது சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

    நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் டெல்லி ஜெயித்திருந்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால் டெல்லி தோல்வி கண்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளே ஆப் அதிர்ஷ்டம் கிட்டியது.

    இந்நிலையில், மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை திரில்லிங்கோடு பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு வீரர்கள் மும்பை அணி வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கொண்டாடினர். 

    இதுதொடர்பாக, பெங்களூரு வீரர் விராட் கோலி கூறுகையில், இது நம்ப முடியாத ஒன்று. நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பை அணிக்கு நன்றி. இந்த ஆட்டத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என தெரிவித்தார்.

    பெங்களூரு அணி நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை பிரெஞ்ச் ஓபன் முகுருசா தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்பின் முகுருசா, எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கையா கனேபியை எதிர்கொண்டார்.

    முதல் சுற்றை முகுருசா 6-2 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட கனேபி இரண்டாவது சுற்றை 6-3 என கைப்பற்றினார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் சிறப்பாக ஆடிய கனேபி 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இதன்மூலம் கனேபி 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    கடந்த 5 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி 4 முறை சாம்பியன் லீக் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    லண்டன்:

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். நடப்பு சீசனுக்கான ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.

    நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. தொடக்கம் முதல் ஆஸ்டன் அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 2-0 என ஆஸ்டன் வில்லை முன்னிலை பெற்றிருந்தது.
     
    இறுதியில், மான்செஸ்டர் சிட்டி அணி அதிரடியாக ஆடியது. இதனால் கடைசி கட்டத்தில் 3 கோல்களை அடித்து அசத்தலாக வெற்றி பெற்றது. அத்துடன், சாம்பியன் லீக் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
     
    மான்செஸ்டர் சிட்டி அணி 38 போட்டிகளில் 29 வெற்றி, 6 டிரா, 3 தோல்விகள் என மொத்தம் 93 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டோன் 22 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 43 ரன்னும், ஷெப்பர்ட் 26 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னும் எடுத்தனர்.

    பஞ்சாப் கிங்ஸ் சார்பில் நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார் தலா 3 விக்கெட்டும், ரபாடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 23 ரன்னும், ஷாருக் கான் 19 ரன்னும், கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஷிகர் தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆட பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    இந்த வெற்றியின் மூலம் 7 வெற்றிகள் பெற்ற பஞ்சாப் புள்ளிப் பட்டியலில் 6வது இடம் பிடித்தது.
    158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    மும்பை வாங்கடே  மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதனால், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பில் 157 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 32 பந்துகளில் இரண்டு 6, 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்ட் 26 ரன்கள் (நாட் அவுட்), வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள், மர்க்ராம் 21 ரன்கள், திருப்பதி 20 ரன்கள், பிரியம் கார்க் 4 ரன்கள் மற்றும் புவனேஷ்வர் ஒரு ரன் எடுத்தனர்.

    பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஹார்ப்ரீட் பிரார் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகின்றன.

    இதையும் படியுங்கள்..  இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
    ×