என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvSRH"

    • முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்னும், கிளாசன் 28 பந்தில் 37 ரன்னும், டிராவிஸ் ஹெட் 28 ரன்னும் எடுத்தனர். அனிகெட் வர்மா 8 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா 26 ரன்னும், ரிக்கல்டன் 31 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வில் ஜாக்ஸ் 36 ரன் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 21 ரன் எடுத்தார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் அணி 200 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 201 ரன்கள் எடுத்து வென்றது.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் விவாந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் அரை சதம் கடந்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில், விவாந்த் சர்மா 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து மயங்க் அகர்வால் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.

    2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் சதமடித்து 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், மும்பை அணி 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி அடுத்து நடைபெற உள்ள ஆர்.சி.பி. அணியின் முடிவுக்காக காத்திருக்கிறது.

    ×