என் மலர்tooltip icon

    விளையாட்டு

    திண்டுக்கல்லில் கராத்தே வீரர்களுக்கு நடந்த தேர்வில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    திண்டுக்கல் அருகே மரியநாதபுரம் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கான பட்டயத் தேர்வு நடைபெற்றது.இதற்கு மாஸ்டர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். இதில் பட்டய தேர்வில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பட்டயம், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் வக்கீல் ஜான் கென்னடி, ஆசிரியர் அமல்ராஜ், வீர தமிழர் விளையாட்டுக்கழக பயிற்சியாளர்கள் ஜோசப் செந்தில்குமார், சரவணன் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கராத்தே பயிற்சியாளர்கள் ஞானகுமார், ஆலன் சிபு ஆகியோர் செய்திருந்தனர்.
    இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் மே 23-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    மும்பை:

    ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கள் நடைபெறும் அதேவேளையில், மகளிருக்கான டி20 சேலஞ்ச் போட்டியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த போட்டிகளில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சூப்பர் நோவாஸ், ஸ்மிரிதி மந்தானா தலைமையில் டிரையல் பிளேசர்ஸ், தீப்தி ஷர்மா தலைமையில் வெலாசிட்டி ஆகிய அணிகளில் மோதும்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் மே 23-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

    இந்த போட்டிகளில் விளையாடும் அணிகளில் இடம்பெறும் வீராங்கனைகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து பிசிசிஐ கூறுகையில், இந்த தொடரில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா  உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறந்த வீராங்கனைகள் ஆடுகின்றனர். மொத்தம் 12 சர்வதேச வீராங்கனைகள் இந்த ஆண்டு மகளிர் டி20 சேலஞ்சில் பங்கு பெறுவர் என கூறியுள்ளது.
    பெரியகுளத்தில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது
    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான  61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் துவங்கிய போட்டிகள் காலை மற்றும் மாலை இரவு வேளைகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற முதல் போட்டியை ரவீந்திரநாத் எம்.பி., பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    முதலாவதாக நடைபெற்ற போட்டியில் நாகர்கோவில் ஏசியன் பிபிசி அணியும், கரூர் டெக்ஸ் சிட்டி அணியும், போட்டியிட்டதில் நாகர்கோவில் ஏசியன் பிபிசி அணி 83க்கு 78 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இதனை தொடர்ந்து 2-வதாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும் ,  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியுடன் நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 90க்கு 66 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    3-வதாக நடைபெற்ற போட்டியில் கேரள காவல்துறை அணியும் திருநெல்வேலி அணிக்கும், இடையே நடைபெற்ற போட்டியில் கேரள காவல்துறை அணி 73க்கு 35 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    4-வது நடைபெற்ற போட்டியில் சென்னை மாணவர் விடுதி அணியும் சேலம் பிபிசி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை மாணவர் விடுதி அணி 69க்கு 56 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செயலாளர்சூரியவேல், பொருளாளர் செல்வராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
    ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகள் மீதம் உள்ளன.
    மும்பை:

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்விற்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து விலகினார்.

    அவரது உடல்நிலை குறித்து உடல் தகுதி நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது. 

    இதையடுத்து சூர்யகுமார் யாதவிற்கு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் மும்பை அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

    மும்பை அணியின் நெட் பந்துவீச்சாளராக இருந்து வந்த அவரை மும்பை அணி தற்போது ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

    நடப்பு தொடரில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை அணி இழந்துவிட்டது. இருப்பினும் அந்த அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    முதலில் விளையாடிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 63 ரன்கள் குவித்திருந்தார்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 64-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அணியின் எண்ணிக்கை 51 ஆக இருந்தபோது சர்பராஸ் கான் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 63 ரன்னில் வெளியேறினார்.  டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

    பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டையும், ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களும், ஷிகர் தவான் 19 ரன்களும் அடித்தனர். பானுகா ராஜபக்சே 4 ரன்னுடன், லிவிங்ஸ்டோன் 3 ரன்னுடன் வெளியேறினர். 

    கேப்டன் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காத நிலையில் விக்கெட்டை இழந்தார்.  பொறுப்புடன் விளையாடிய ஜிதேஷ் சர்மா  44 ரன்கள் எடுத்தார். ராகுல் சாஹர் 25 ரன்கள் அடித்து களத்தி இருந்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது. 

    இதையடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.  அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும், அக்சர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


    பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து அசத்தினார்.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 64-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 51 ஆக இருந்தபோது சர்பராஸ் கான் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 63 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

    பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட், ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஏஞ்சலோ மேத்யூஸ், சண்டிமால் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது.
    சட்டோகிராம்:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கருணரத்னே 9 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஓஷாடா பெர்னாண்டோ 36 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார். சண்டிமால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மேத்யூஸ் நிதானமாக ஆடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 153 ஓவரில் 397 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
    தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது.

    நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தியது. 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.

    ஒற்றையர் பிரிவில் லக்சயா சென்னும், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்சிரக் ஷெட்டி ஜோடியும், மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர்.

    புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் அணிக்கு ரூ.1 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

    இதே போல் இந்திய பேட்மிண்டன் சங்கமும் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்து இருக்கிறது. அணியின் உதவி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும் இந்திய பேட்மிண்டன் அணியை பாராட்டி உள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
    ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்' என கூறினார்.
    இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 
    அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
    தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    மும்பை:

    தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது.

    நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தியது. 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.

    ஒற்றையர் பிரிவில் லக்சயா சென்னும், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்சிரஜ்ஷெட்டி ஜோடியும், 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர்.

    புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் அணிக்கு ரூ.1 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

    இதே போல் இந்திய பேட்மிண்டன் சங்கமும் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்து இருக்கிறது.

    தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும் இந்திய பேட்மிண்டன் அணியை பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியர்கள் அனைவருக்கும் இது வரலாற்று தருணமாகும். இந்திய பேட்மிண்டனுக்கு மறக்க முடியாத நாளாகும். முதல் முறையாக தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
    பெங்களூர் அணி கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. நிகர ரன் ரேட்டில் மோசமாக இருப்பதால் அந்த அணி குஜராத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும்.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 63 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

    ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 2-வது இடத்திலும், லக்னோ 3-வது இடத்திலும் உள்ளன.

    ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் +0.304 ஆகவும், லக்னோ அணியின் ரன் ரேட் +0.262 ஆக இருக்கிறது. 14 புள்ளியுடன் இருக்கும் பெங்களூர் அணியின் ரன் ரேட் 0.323 ஆக இருக்கிறது.

    இதன் காரணமாக ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்கு கிட்டதட்ட தகுதி பெறுவது உறுதியாகி விட்டது.

    ராஜஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் சி.எஸ்.கே.வையும், லக்னோ அணி கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவையும் சந்திக்கின்றன.

    தற்போதுள்ள நிலையில் 5 அணிகளால் மட்டுமே 16 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற முடியும்.

    பிளேஆப் சுற்றின் ஒரு இடத்துக்கு 5 அணிகள் போட்டியில் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் காத்திருக்கின்றன.

    16 புள்ளிகள் வரை வந்தால் பெங்களூர், டெல்லி அல்லது பஞ்சாப் இடையே மட்டுமே போட்டி நிலவும். 14 புள்ளிகள் வரை அளவு வந்தால் மட்டுமே 5 அணிகள் இடையே போட்டி நிலவும்.

    பெங்களூர் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. நிகர ரன் ரேட்டில் மோசமாக இருப்பதால் அந்த அணி குஜராத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும். தோற்றால் பிளேஆப் சுற்றில் நுழைவது மிகவும் கடினமாகிவிடும். அடுத்த அணிகள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    12 புள்ளியுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் எஞ்சிய ஆட்டங்களில் பஞ்சாப் (இன்று), மும்பை (21ந் தேதி), அணிகளுடன் மோதுகின்றன.

    அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் இந்த 2 ஆட்டங்களிலும் வென்றால் தகுதி பெற்றுவிடும். இதில் ஒரு ஆட்டத்தில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    பஞ்சாப் அணியும் இதே நிலையில் இருக்கிறது. ஆனால் டெல்லியை விட நிகர ரன் ரேட்டில் குறைவாக உள்ளது. டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளேஆப் சுற்று வாய்ப்பை அதிகரித்து கொள்ளும். தோல்வி அடையும் அணிக்கு வாய்ப்பு குறையும்.

    கொல்கத்தா, ஐதராபாத் அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகள் வரை மட்டுமே பெற இயலும். பெங்களூர், டெல்லி, பஞ்சாப் அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெற இருந்தால் மட்டுமே இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு என்பது மிக கடினமாகும்.

    12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா கடைசி ஆட்டத்தில் லக்னோவை 18-ந் தேதி சந்திக்கிறது. 10 புள்ளியுடன் இருக்கும் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளது. அந்த அணி மும்பையை நாளையும், 22-ந் தேதி பஞ்சாப்பையும் எதிர் கொள்கிறது.
    ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஆண்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஆண்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    அந்த சிற்பத்தின் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், 'ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் காலமானதை அறிந்து வருந்துகிறேன். இது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு' என பதிவிட்டுள்ளார்.
    ×