என் மலர்
விளையாட்டு
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 41 ரன்களும், படிக்கல் 39 ரன்களும் அடித்திருந்தனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சாம்சன் 32 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ஜெய்ஸ்வால் 41 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரியான் பராக் 19, ஜேம்ஸ் நீஷம் 14 ரன்கள் அடித்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியில் டி காக் 7 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் கே.எல். ராகுல் 10 ரன்னுடன் வெளியேற, தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். குணால் பாண்ட்யா 25 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்...
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்குகிறது
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் , லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் ஒரு 6, 6 பவுண்டரிகள் எடுத்து 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 39 ரன்கள், சஞ்சு சாம்சன் 32 ரன்கள், ரியான் பராக் 19 ரன்கள், டிரென்ட் பௌல்ட் 17 ரன்கள் (நாட் அவுட்), ஜேம்ஸ் நீஷம் 14 ரன்கள், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன்கள் (நாட் அவுட்), ஜோஸ் பட்லர் 2 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளும், அவேஸ் கான், ஜோசன் ஹோல்டர் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்.. சொதப்பிய சென்னை- குஜராத் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்கு

குஜராத் அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக வ்ரித்திமான் சாஹா 57 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். தொடர்ந்து, மேத்யூவ் வாதே 20 ரன்களும், ஷூப்மான் கில் 18 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களும், ஹார்திக் பாண்டியா 7 ரன்களும் எடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.
தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ்-கான்வே களமிறங்கினர். கான்வே 5 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த மொய்ன் அலி 21 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தமிழக வீரர் ஜெகதீஷன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிகவும் பொறுமையாக ஆடிய ருதுராஜ் 49 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த டூபே 0, டோனி 7, என்று அடுத்தடுத்து வெளியேறினார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிறது.
இதில் அதிகபட்சமாக வ்ரித்திமான் சாஹா 57 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். தொடர்ந்து, மேத்யூவ் வாதே 20 ரன்களும், ஷூப்மான் கில் 18 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களும், ஹார்திக் பாண்டியா 7 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றிக்காக இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி:
தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை, முதன்முறையாக இந்தியா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், கோப்பை வென்ற இந்திய அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனையை போற்றும் வகையில் விதிகளை தளர்த்தி பரிசு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றிக்காக இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
வீரர்களுக்கான தொடர் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குவதன் மூலம் அணி இந்த சாதனை வெற்றியை பதிவு செய்திருப்பதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:
தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை, முதன்முறையாக இந்தியா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 49 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.
தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ்-கான்வே களமிறங்கினர். கான்வே 5 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த மொய்ன் அலி 21 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தமிழக வீரர் ஜெகதீஷன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிகவும் பொறுமையாக ஆடிய ருதுராஜ் 49 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த டூபே 0, டோனி 7, என்று அடுத்தடுத்து வெளியேறினார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர் ஜெகதீஷன் 33 பந்துகளில் 39 ரன்களுடனும் சாட்னர் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
குஜராத் தரப்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குஜராத் அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிறது.
14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பாங்காக்:
தாய்லாந்தில் நடைபெற்று வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை 6 - 4, 6 - 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நோவக் ஜோகோவிச் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 5-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்த சாதனைப் பட்டியலில் முதல் 4 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் இவான் லென்டில், ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் உள்ளனர்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் எடுத்ததுடன், 3 விக்கெட்களையும் கைப்பற்றிய ஆண்ட்ரூ ரசல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் 14-வது ரன் எடுத்தபோது குறைந்த பந்துகளில் 1,115 பந்துகளில் 2,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரசல் படைத்துள்ளார்.
ஆண்ட்ரூ ரசல் 97 போட்டிகளில் விளையாடி 2,030 ரன்களை எடுத்துள்ளார்.
பிரெட் லி, சோயப் அக்தர் இருவரும் அதிவேகமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய 157 கி.மீ வேகமான பந்து இந்த தொடரின் அதிவேகமான பந்துவீச்சு என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
22 வயதாகும் உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால், இந்நேரம் தேசிய அணியில் இடம்பெற்றிருப்பார். அவருடைய எகானமி அதிகமாக இருக்கிறது. ஆனால் அவருக்கு வேகமும், விக்கெட் எடுக்கும் சதவீதமும் அதிகமாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் அப்படி தான் பந்து வீசுவார்கள். ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ அதுபோல தான் இருந்தார். சோயப் அக்தரும் அவரைப்போல தான் இருந்தார்.
மேலும் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பையில் ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு வேகப்பந்துவீச்சு தேவை என கூறியுள்ளார்.
இவ்வாறு கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தை படிதார் அடித்த நிலையில் அந்த பந்து 102 மீட்டர் அளவில் சிக்ஸருக்கு சென்றது.
மும்பை:
கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ஆர்.சிபி வீரர் ராஜத் படிதார் அடித்த பந்து முதியவர் ஒருவர் தலையில் விழுந்ததில் அவர் வலி தாங்காமல் அழத்தொடங்கினார். இந்த காணொளி வைரலாகி வருகிறது.
அன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 210 ரன்கள் அடித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 8 ஓவரில் விளையாடிகொண்டிருந்த போது ராஜத படிதார் களத்தில் இருந்தார். பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தை படிதார் அடித்த நிலையில் அந்த பந்து 102 மீட்டர் அளவில் சிக்ஸருக்கு சென்றது.
பந்து விழும் இடத்தில் போட்டியை காண வந்த முதியவர் அமர்ந்திருக்கவே, அவரது தலையில் விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் முதியவர் அழுகத்தொடங்கினார். இதையடுத்து அவரை உடன் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர். முதியவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசை எதிர்கொள்ள உள்ளார்.
ரோம் :
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.