search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமஸ் கோப்பை"

    • ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது.

    தாமஸ் கோப்பை பேட்மிண்டன் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா, இந்தியா ஆகியவை ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இந்த நிலையில் குரூப்பில் யார் முதல் இடம் பிடிப்பதற்கான கடைசி லீக்கில் இரு நாடுகளும் மோதின. இதில் இந்தோனேசியா 4-1 என வெற்றி பெற்றது.

    2022-ல் நடைபெற்ற தாமஸ் கோப்பை போட்டியில் இந்தோனேசியாவை 3-0 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது இந்தோனேசியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

    ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1-0 (13-21 21-12 21-12) என முன்னிலைப் பெற்றது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது. இதனால் இந்தியா- இந்தோனேசியா ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது.

    லக்ஷயா சென் 18-21 21-16 17-21 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தோனேசியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

    4-வது போட்டியில் த்ருவ் கபிலா- சாய் பிரதீக் ஜோடி 20-22, 11-21 என நேர்செட் கேமில் தோல்வியடைந்தது. கடைசி போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் முதல் கேம்-ஐ 21-19 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களை 14-21, 22-24 இழந்தார். இதனால் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது.

    ×