என் மலர்

  விளையாட்டு

  நோவக் ஜோகோவிச்
  X
  நோவக் ஜோகோவிச்

  சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து ஜோகோவிச் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும்.
  ரோம்:

  இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. 

  இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை 6 - 4, 6 - 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

  நோவக் ஜோகோவிச் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 5-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

  இந்த சாதனைப் பட்டியலில் முதல் 4 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் இவான் லென்டில், ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் உள்ளனர்.
  Next Story
  ×