என் மலர்

  விளையாட்டு

  ருதுராஜ் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ரஷித்கான்
  X
  ருதுராஜ் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ரஷித்கான்

  சொதப்பிய சென்னை- குஜராத் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 49 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
  ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.

  தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ்-கான்வே களமிறங்கினர். கான்வே 5 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த மொய்ன் அலி 21 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தமிழக வீரர் ஜெகதீஷன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

  மிகவும் பொறுமையாக ஆடிய ருதுராஜ் 49 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த டூபே 0, டோனி 7, என்று அடுத்தடுத்து வெளியேறினார்.

  இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர் ஜெகதீஷன் 33 பந்துகளில் 39 ரன்களுடனும் சாட்னர் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

  குஜராத் தரப்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குஜராத் அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிறது.
  Next Story
  ×