என் மலர்
விளையாட்டு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர் வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கனை வரவேற்க வரவேற்பு குழு சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களின் தலைவர்களாக சம்மபந்தப்பட்ட துறைகளை சேர்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வரவேற்பு குழுவுக்கு டி.ஜெகநாதனும், போக்குவரத்துக்கு கே.கோபாலும், ஸ்பான்சர் ஷிப்புக்கு எஸ்.கிருஷ்ணனும், தொடக்க மற்றும் நிறைவு விழா குழுவுக்கு டி.கார்த்திகேயனும், சாலை, குடிநீர் சப்ளை, தூய்மை பணிக்கு சிவ்தாஸ் மீனாவும், விருந்தோம்பல் நிகழ்ச்சி மேலாண்மை, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவற்றின் குழுவுக்கு பி.சந்திரமோகனும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஊடகம், விளம்பரத்துக்கு வி.பி.ஜெயசீலனும், பாதுகாப்புக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும், தங்குமிடம், உணவுக்கு குமார் ஜெயந்தும், சுகாதாரம், மருத்துவ பணிக்கு பி.செந்தில்குமாரும், அரங்கு ஏற்பாடுக்கு தயாளந்த் கட்டாரியாவும், நிதி, டெண்டருக்கு பிரசாந்த் வாட்நேரையும், மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானியும், சாலை மேம்பாட்டுக்கு தீரஜ்குமாரும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கான குழுவுக்கு காகர்லா உஷாவும், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு ஆர்.ஆனந்த குமாரும், செஸ் ஒலிம்பியாட் கட்டுப்பாட்டு அறைக்கு ஏ.கே.கமல்கிஷோரும், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு நீரஜ் மித்தலும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக லிவிங்க்ஸ்டன் 42 பந்துகளில் நான்கு 6, 5 பவுண்டரிகள் விளாசி 70 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ 66 ரன்கள், தவான் 21 ரன்கள், மயங்க் அகர்வால் 19 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 9 ரன்கள், பிரார் மற்றும் ரிஷிஷ் தவான் தலா 7 ரன்கள், ராகுல் சஹார் 2 ரன்கள் மற்றும் பனுக்கா ராஜபக்சே ஒரு ரன்னும் எடுத்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் அபாரமாக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வநிந்து ஹசாரங்கா 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்.. ஐபிஎல் 2022 - தான் வெளியேறிய கையோடு சென்னையையும் வெளியேற்றியது மும்பை






