என் மலர்
விளையாட்டு
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பை:
ஐபிஎல் 15-வது சீசனின் லீக் ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
மும்பை அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 3ல் மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளதால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.
சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், நேற்று சென்னை அணியை தோற்கடித்து அந்த அணியையும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தடுத்துள்ளது.
இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார்.
பாங்காக்:
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் லீ ஜியாவிடம் 23-21, 21-9 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.
2வது போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபே மற்றும் நூர் இசுதீனை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேஷியாவின் நாங் டிசே யோங்கை 21-11, 21-17 என்ற செட்களில் விழ்த்தி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
4-வது ஆட்டத்தில் இந்திய ஜோடி கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன், மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யியை எதிர்த்து விளையாடிது.
இதில் ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யி ஜோடி 21-19, 21-17 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.
எனினும் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார்.
இதன் மூலம் காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா, அரையிறுதியில் நுழைந்ததுடன் 43 ஆண்டிற்கு பிறகு தனது முதல் தாமஸ் கோப்பை பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 16 முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமை நோவக் ஜோகோவிச்சிற்கு கிடைத்துள்ளது-
ரோம் :
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்
இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆயிரமாவது மாஸ்டர் போட்டி ஒற்றையர் பிரிவில் 16வது முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறி உள்ளது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியில், தொடக்க வீரர் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ,ராபின் உத்தப்பா 1 ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் களம் இறங்கிய கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டோனி 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் இசான் கிஷன் 6 ரன்னுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். திலக் வர்மா 34 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஹிருத்திக் ஷோக்கீன் 18 ரன் அடித்தார். டிம் டேவிட் 16 ரன் எடுத்து களத்தில் இருந்தார்.
மும்பை அணி 14.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் தோனி 36 ரன்கள் எடுத்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 33 பந்துகளின் இரண்டு 6, 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, பிராவோ 12 ரன்கள், அம்பதி ராயுடு மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 10 ரன்களும் எடுத்தனர். ருத்துராஜ் 7 ரன்கள், முகேஷ் சவுதரி 4 ரன்கள், சிமர்ஜீத் சிங் 2 ரன்கள், உத்தப்பா ஒரு ரன் எடுத்தனர்.
மும்பை அணி தரப்பில் டேனியல் சேம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து, ரிலே மெரெடித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், பும்ரா மற்றும் ரமன்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்.. கே.எல் ராகுல் திருமணம் எப்போது? - மனம் திறந்த காதலியின் தந்தை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 33 பந்துகளின் இரண்டு 6, 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, பிராவோ 12 ரன்கள், அம்பதி ராயுடு மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 10 ரன்களும் எடுத்தனர். ருத்துராஜ் 7 ரன்கள், முகேஷ் சவுதரி 4 ரன்கள், சிமர்ஜீத் சிங் 2 ரன்கள், உத்தப்பா ஒரு ரன் எடுத்தனர்.
மும்பை அணி தரப்பில் டேனியல் சேம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து, ரிலே மெரெடித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், பும்ரா மற்றும் ரமன்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்.. கே.எல் ராகுல் திருமணம் எப்போது? - மனம் திறந்த காதலியின் தந்தை
கே.எல்.ராகுல், அத்தியா செட்டி இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், நடிகர் சுனில் செட்டியின் மகள் அத்தியா செட்டியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. அந்த செய்தி உண்மையில்லை என அத்தியா செட்டி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கே.எல்.ராகுல், அத்தியா செட்டி திருமணம் எப்போது என அத்தியாவின் தந்தை நடிகர் சுனில் செட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு கே.எல் ராகுல் என்றால் விருப்பம். என் மகள் எப்படி இருந்தாலும் ஒரு நேரத்தில் திருமணம் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் விரைவாக திருமணம் நடைபெற்றால் நல்லது. ஆனால் அது அவர்களுடைய விருப்பம். எனக்கு அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் கவலை இல்லை. என்னுடைய ஆசிர்வாதம் அவர்களுடன் எப்போதுமே இருக்கும்.
இவ்வாறு சுனில் செட்டி தெரிவித்துள்ளார்.
தற்போது 15-வது ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் விராட் கோலி, 3 போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ‘கோல்டன் டக்’-கில் அவுட்டானார்.
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
விராட் கோலி கடைசியாக சதம் அடித்த 2 ஆண்டுகள் ஆகிறது.
தற்போது 15-வது ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் விராட் கோலி, 3 போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ‘கோல்டன் டக்’-கில் அவுட்டானார். இதில் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து டக் அவுட் ஆனார்.
அவரது ஐபிஎல் வாழ்க்கையில் முதன்முறையாக கோலி மூன்று கோல்டன் டக் அவுட்டுகளை பெற்றார்.
இதுகுறித்து சமீபத்தில் விராட் கோலி பேட்டி ஒன்றை பேசியிருந்தார்.
பேட்டியின்போது நெறியாளர் உங்கள் வீட்டில் விலங்குகள் எதுவும் வளர்க்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு கோலி பதிலளிக்கும் முன்பே, உங்களுக்கு சமீபத்தில் 2 டக்குகள் கிடைத்ததே என கோலி டக் அவுட் ஆனதை கிண்டலாக குறிப்பிட்டார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த கோலி, ‘நான் 2 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆனேன். இரண்டாவது முறை அவுட் ஆன பிறகு, உதவியில்லாமல் கைவிடப்பட்டது போல தவித்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததே இல்லை. அதனால் தான் நான் சிரித்தேன்.
நான் இப்போது அனைத்தையும் பார்த்துவிட்டேன். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வரும் நான், இந்த விளையாட்டு எனக்கு காட்டிய ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் பார்த்துவிட்டேன்’ என உருக்கமாக கூறினார்.
காயம் காரணமாக ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் அறிவித்தது.
மும்பை:
நடைபெற்று வரும் ஐபிஎல் 15-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவிந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின் தொடர் தோல்வி அடைந்ததால், கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் கேப்டன் பதவி மீண்டும் தோனிக்கே தரப்பட்டது.
தற்போது காயம் காரணமாக ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாகவும் அணி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமி பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஜடேஜா அணியில் இருந்து விலகியது காயம் காரணமாக அல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏற்பட்ட மோதலால் தான் என பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
தொடர் தோல்வி காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து மீண்டும் தோனிக்கு கொடுத்திருக்கலாம், ஜடேஜாவாக விருப்பப்பட்டு கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் பலர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடக்கிறது.
ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு சேட்டன் சர்மா தலைமையிலான குழு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்படலாம். அவர் அதிகமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருகிறார். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் இருந்துள்ளார். கோலி மற்றும் சீனியர் வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்படுவது கொள்கை முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்கா தொடரில் ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி இங்கிலாந்து பயணத்தில் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குவார். இந்திய அணி ஜூன், ஜூலையில் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டெஸ்டில் ஆடுகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். 12 ஆட்டங்களில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 19.63 ஆகும்.
விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு சேட்டன் சர்மா தலைமையிலான குழு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்படலாம். அவர் அதிகமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருகிறார். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் இருந்துள்ளார். கோலி மற்றும் சீனியர் வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்படுவது கொள்கை முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்கா தொடரில் ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி இங்கிலாந்து பயணத்தில் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குவார். இந்திய அணி ஜூன், ஜூலையில் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டெஸ்டில் ஆடுகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். 12 ஆட்டங்களில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 19.63 ஆகும்.
விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளிலும் போடப்பட்ட டாஸில் சஞ்சு சாம்சன், 11 முறை தோற்றுள்ளார்.
மும்பை:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் வினோதமான சாதனை ஒன்றை முறியடிக்கவுள்ளார்.
இதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளிலும் போடப்பட்ட டாஸில் சஞ்சு சாம்சன், 11 முறை தோற்றுள்ளார்.
நடந்து முடிந்த 12 போட்டிகளில் சஞ்சு சாம்சனின் டாஸ் முடிவுகள் தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, வெற்றி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி என்றே வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சன் டாஸ் வென்றார். இருப்பினும் அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், டாஸ் தோல்வி அடைந்தாலும், எங்கள் அணி வெற்றி பெற்று வருகிறது எனவும் கூறினார்.
இவ்வாறாக தொடர் டாஸ் தோல்வி அடைந்து வரும் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் டாஸ் தோல்வி சாதனையை முறியடிக்கவுள்ளார்.இதன்படி, கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனி 12 டாஸ்களில் தோற்றுள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டாஸ் தோற்ற வீரர் என்ற மோசமான சாதனையை தோனி படைத்துள்ளார். இன்னும் ஒருமுறை சஞ்சு சாம்சன் டாஸ் தோற்றால், தோனியின் சாதனையை அவர் சமம் செய்வார். இரண்டு முறை தோற்றால், தோனியின் சாதனையை முறியடிப்பார்.
டாஸ் தோல்வியில் 2008-ல் தோனியும் 2013-ல் கோலியும் தலா 11 முறை டாஸில் தோற்றுள்ளார்கள். அவர்களுடன் சஞ்சு சாம்சன் தற்போது இணைந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, மொத்தம் 116 ரன்கள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் 15-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தற்போதுவரை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை.
இந்நிலையில், சென்னை அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த மே 8-ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை .
காயத்திலிருந்து ஜடேஜா இன்னும் மீளாததால் அவர் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது .
இதையும் படியுங்கள்...ரிஷப் பண்ட் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும்- ரவி சாஸ்திரி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து அசத்தியது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி 50 ரன்னும், தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி சார்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நோர்ஜே, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் பரத் டக் அவுட்டானார்.
அடுத்து டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மிட்செல் மார்ஷ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது டெல்லி அணிபெற்ற 6-வது வெற்றி ஆகும்.






