என் மலர்
விளையாட்டு
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய பிவி சிந்து ஆன் சீ யங்கிடம் 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவை எளிதில் தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது. முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை வென்று இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய பிவி சிந்து ஆன் சீ யங்கிடம் 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
அதன்பின் ஆடிய ஸ்ருதி மிஸ்ரா சிம்ரான் சிங்கி ஜோடி ஜீ ஜோஹி மற்றும் ஷின் சேவ்சென் ஆகியோரிடம் 21-13, 21-12 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
மற்றொரு போட்டியில் அக்ஷாரி காஷ்யாப் கிம் குவேனிடம் 21-10 மற்றும் 21-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இறுதியாக ஆடிய தானிஷா கிராஸ்டோ, ஜாலி திரிஷா ஜோடி 21-14, 21-11 என்ற கணக்கில் கிம் ஹே ஜியோங், கோங் ஹீயோங்கிடம் தோல்வி அடைந்தது.
இந்திய இளம் வீராங்கனை யுஜின் சிம்மிடம் 21-18, 21-17 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது என குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. சுப்மன்கில் 49 பந்தில் 63 ரன் எடுத்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. குஜராத்தின் அபார பந்துவீச்சால் லக்னோ 13.5 ஓவரில் 83 ரன்னுக்குள் சுருண்டது. குஜராத் தரப்பில் ரஷித்கான் 4 விக்கெட்டும், யஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
குஜராத் 9-வது வெற்றியை (12 ஆட்டம்) பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. புதுமுக அணியான குஜராத், தனது முதல் போட்டி தொடரிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம்.
ஆனால் 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன்.
இந்த ஆட்டத்தில் எதிரணி 8 விக்கெட் இழந்து இருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன். அவர்கள் கீழே சரிந்ததால் இன்னும் தாழ்த்துவோம். அதை செய்து விட்டு போட்டிக்கு பின் ஓய்வெடுப்போம் என்று கூறினேன்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் ஒரு தொழில்நுட்ப பந்து வீச்சாளர். அவரது உயரம், வேகம் காரணமாக விக்கெட் எடுப்பதில் கூடுதல் வாய்ப்பில் உள்ளார். வேகப்பந்து வீச்சு இருந்ததால் அவரை விளையாட வைக்க முடியவில்லை.
ஆனால் இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது வலது கை பேட்ஸ்மேன்களுக்காக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்தோம். அதன்படி சாய்கிஷோரும் சிறப்பாக செயல்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, இந்த ஆடுகளம் தந்திரமானது மற்றும் சவாலானது என்பதை அறிவோம்.
நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
சில மோசமான ஷாட் தேர்வுகள் மற்றும் ரன் அவுட் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து சில நல்ல பாடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டாக்கா:
வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால் வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத் கான் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
மும்பை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி 63 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். டேவிட் மில்லர் 26 ரன் எடுத்தார். ராகுல் திவாட்டியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. குஜராத் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், லக்னோ அணி 13.5 ஓவரில் 82 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீபக் ஹூடா அதிகமாக 27 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட், யாஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஷுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது.
முதலில் விளையாடிய குஜராத் அணியில், அதிரடி காட்டிய கில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார்.
மும்பை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
சாகா 5 ரன்னுடன் வெளியேற, மாத்யூ வேட் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன் அடித்த நிலையில் அவுட்டனார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தார். ராகுல் தெவாடியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி
லக்னோ அணி களம் இறங்குகிறது.
இதையும் படியுங்கள்....
ஆசிய கோப்பை ஹாக்கி- இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்
இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள்.
ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார்.
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா 10 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஐ.பி.எல். சீசனில் இது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஒட்டு மொத்த ஐ.பி.எல்.லில் 5-வது சிறந்த பந்து வீச்சாகும்.
அல்ஜாரி ஜோசப் 12 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த நிலையாகும். அதற்கு அடுத்த படியாக சோகைல் தன்வீர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 19 ரன் கொடுத்து 6 விக்கெட்டும், கும்ப்ளே 5 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.
இதையும் படியுங்கள்...காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கை பெருவிரலில் காயம் அடைந்ததால் முதல் 2 லீக் ஆட்டங்களை தவற விட்டவர் என்பது நினைவு கூரத்தக்கது.
மும்பை:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 8 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் இடதுகையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் காயமடைந்தார். அவரது உடல் நிலைமை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதிநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், நேற்றைய ஆட்டத்திற்கு முன் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது.
ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்டருமான அலிசா ஹீலி ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி-யின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர்களின் பரிந்துரை பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர், ஓமன் பேட்டர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம்பிடித்தனர்.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபாசி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது. சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தினார் கேசவ் மகாராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...கேப்டன் பதவியில் சாதனை படைத்த எம்எஸ் டோனி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா தலா 43 ரன்கள் எடுத்தனர். அஜிங்கியா ரகானே 25 ரன், ரிங்கு சிங் 23 ரன் எடுத்தனர்.
மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களும் விரைவில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷண் அரை சதமடித்தா. அவர் 51 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 17.3 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. இது கொல்கத்தா அணியின் 5-வது வெற்றி ஆகும்.
மும்பை அணியின் பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ரன்கள் எடுத்தனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ரன்கள் எடுத்தனர். இதில், இருவருமே தலா நான்கு 6, 3 பவுண்டரிகளை எடுத்தனர். தொடர்ந்து, அஜிங்கியா ரகானே 25 ரன்கள், ரிங்கு சிங் 23 ரன்கள், ஆந்திரே ருசெல் 9 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள், ஜாக்சன் 5 ரன்களை எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ரா 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்.. கொல்கத்தா அணிக்கு 5-வது வெற்றி கிடைக்குமா? மும்பையுடன் இன்று மோதல்
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் அணியும் ஸ்ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டியின் 56வது ‘லீக்’ ஆட்டம் மும்பை .ஒய். பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் ஸ்ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. கொல்கத்தா வெற்றி நெருக்கடியில் உள்ளது. அந்த அணி 5வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...கேப்டன் பதவியில் சாதனை படைத்த எம்எஸ் டோனி