என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சுப்மன் கில்
    X
    சுப்மன் கில்

    ஐபிஎல் கிரிக்கெட்- லக்னோ வெற்றி பெற 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

    முதலில் விளையாடிய குஜராத் அணியில், அதிரடி காட்டிய கில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார்.
    மும்பை

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும்  57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

    இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  

    அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்  சிறப்பாக விளையாடி 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

    சாகா 5 ரன்னுடன் வெளியேற, மாத்யூ வேட் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன் அடித்த நிலையில் அவுட்டனார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தார். ராகுல் தெவாடியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

    20 ஓவர் முடிவில் குஜராத் அணி  4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.  இதையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி
    லக்னோ அணி களம் இறங்குகிறது.

    Next Story
    ×