என் மலர்
விளையாட்டு
மாட்ரிட் இறுதி போட்டிக்குள் நுழைவதற்காக இவர் உலகின் சிறந்த வீரர்களான ரஃபேல் நடால், ஜோகோவிக் ஆகியோரையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் பட்டம் வென்றார்.
62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் 6-3, 6-1 என்ற கணக்கில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தினார். 19 வயதாகும் அல்காரஸ் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றுள்ளார்.
மேலும் மாட்ரிட் இறுதி போட்டிக்குள் நுழைவதற்காக இவர் உலகின் சிறந்த வீரர்களான ரஃபேல் நடால், ஜோகோவிக் ஆகியோரையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி 8 பந்தில் 21 ரன் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் அவர் 6 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார். விராட்கோலிக்கு அடுத்தபடியாக டோனி 6 ஆயிரம் ரன்னை கேப்டன் பதவியில் எடுத்தார். விராட் கோலி கேப்டன் பதவியில் 6,451 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 4764 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார்.
மேலும் 20 ஓவர் போட்டிகளில் 200 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் டோனி படைத்தார். ஷர்துல் தாகூரின் கேட்சை பிடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை தொட்டார். தினேஷ் கார்த்திக் 182 கேட்ச்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்...பிளேஆப் சுற்றுக்கு நுழையாவிட்டால் உலகம் முடிந்து விடாது- டோனி
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எந்த பந்து போட வேண்டும் என்பதை விட எந்த பந்தை வீசக்கூடாது என்பதைதான் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் டோனி கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வது வெற்றியை பெற்றது.
மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது.
தொடக்க வீரர் கான்வே ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 49 பந்தில் 87 ரன்னும் ( 7 பவுண்டரி , 5 சிக்சர்), மற்றொரு தொடக்க ஆட்டக்காரரர் ருதுராஜ் கெய்க்வாட் 33 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே 19 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி , 2 சிக்சர்) , கேப்டன் டோனி 8 பந்தில் 21 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர் எடுத்தனர். நோர்க்யா 3 விக்கெட்டும் ,கலீல் அகமது 2 விக்கெட்டும் , மிச்சேல் மார்ஷ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.4 ஓவரில் 117 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை அணி 91 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மிச்சேல் மார்ஷ் அதிகபட்சமாக 20 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) , கேப்டன் ரிஷப் பண்ட் 11 பந்தில் 21 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். மொய்ன் அலி 3 விக்கெட்டும், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 4வது வெற்றியாகும். டோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்ற பிறகு 2 வது வெற்றி கிடைத்துள்ளது.
இந்த வெற்றி மூலம் சி.எஸ்.கே. 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியது. வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-
நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பேட்ஸ்மேன்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டார்கள். மிகப் பெரிய வெற்றி உதவுகிறது. இது மாதிரியான வெற்றி முன்னதாக வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். டாஸ் வென்றால் பந்துவீசலாம் என்று விரும்பினோம். ஆனால் டாஸ் தோற்க வேண்டும் என்று தோன்றியது.
ரன்களை அதிகமாக குவிக்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் திறமையானவர்கள். முதிர்ச்சி அடைய நிறைய போட்டியில் ஆட வேண்டும்.
விளையாட்டு உணர்வு முக்கியமானது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எந்த பந்து போட வேண்டும் என்பதை விட எந்த பந்தை வீசக்கூடாது என்பதைதான் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
பிளே ஆப் சுற்று குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. பிளேஆப், நிகர ரன் ரேட் பற்றி நினைத்தால் தேவையில்லாத அழுத்தம் தான் ஏற்படும். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் செலுத்த விரும்புகிறோம்.
இப்போதைக்கு அதுதான் தேவை. நான் கணக்கு பாடத்தை பெரிதாக விரும்புபவன் அல்ல. பள்ளியில் படிக்கின்ற நாளில் இருந்தே நான் இப்படிதான் உள்ளேன். எனக்கு கணக்கு வராது.
நெட் ரன் ரேட் பற்றி சிந்திப்பது உதவாது. போட்டிகளை அனுபவித்து ஆட வேண்டும். பிற அணிகள் விளையாடும் போது அதனை நினைத்து நெருக்கடி அடைய தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் நல்லது. முன்னேறாவிட்டால் உலகம் ஒன்றும் முடிந்து விடாது.
இவ்வாறு டோனி கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 12-ந் தேதி எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 11ந் தேதி சந்திக்கிறது.
இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரசை, ஸ்வெரெவ் எதிர்கொள்கிறார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று
நடைபெற்ற அரை இறுதி போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் ஸ்வெரெவ் மோதுகிறார்.
முதலில் விளையாடிய சென்னை அணியில் டெவான் கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் டெவன் கான்வேயும் - ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர்.
41 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கெய்க்வாட்
ஆட்டமிழந்தார். 49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவான் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துபே 32 ரன்களும், கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் 25 ரன்னும், ரிஷப் பந்த் 21 ரன்னும், சர்துல் தாக்கூர் 24 ரன்னும் அடித்தனர்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 3 விக்கெட்களும், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதையும் படியுங்கள்... ஹசாராங்கா அபாரம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி
இந்த போட்டியில் கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
தொடக்க ஜோடி 11 ஓவரில் 110 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, ருத்துராஜ் 41 ரன்களும், ஷிவம் துபே 32 ரன்களும், தோனி 21 (நாட் அவுட்) ரன்களும், அம்பதி ராயுடு 5, பிராவோ ஒரு ரன்னும் (நாட் அவுட்) எடுத்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும், மிட்சல் மார்ஷ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்.. ஹசாராங்கா அபாரம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
தொடக்க ஜோடி 11 ஓவரில் 110 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, ருத்துராஜ் 41 ரன்களும், ஷிவம் துபே 32 ரன்களும், தோனி 21 (நாட் அவுட்) ரன்களும், அம்பதி ராயுடு 5, பிராவோ ஒரு ரன்னும் (நாட் அவுட்) எடுத்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும், மிட்சல் மார்ஷ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்.. ஹசாராங்கா அபாரம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.
இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஹசாரங்கா டி சில்வா ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள்.. டூபிளெசிஸ் அதிரடி- ஐதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.
இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஹசாரங்கா டி சில்வா ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள்.. டூபிளெசிஸ் அதிரடி- ஐதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 48 ரன்கள், மேக்ஸ்வெல் 33 ரன்கள், தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் (நாட் ஒவுட்) எடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 48 ரன்கள், மேக்ஸ்வெல் 33 ரன்கள், தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் (நாட் ஒவுட்) எடுத்தனர்.
ஐதராபாத் அணி தரப்பில் ஜகதீஷா 2 விக்கெட், கார்த்திக் தியாகி ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
இதையும் படியுங்கள்.. இலங்கைக்கு அனுப்பும் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை
டோனி கேப்டன் பொறுப்புக்கு பிறகு சிஎஸ்கே 2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொன்றில் தோல்வி அடைந்தது.
மும்பை:
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 வெற்றி , 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் உள்ளது.
சி.எஸ்.கே. அணி பெங்களூர் (23 ரன்), மும்பை (3 விக்கெட்), ஐதராபாத் (13 ரன்) ஆகியவற்றை தோற்கடித்தது. பஞ்சாப் அணியிடம் இரண்டு முறையும் (54 ரன், 11 ரன்), கொல்கத்தா (6 விக்கெட்), லக்னோ (6 விக்கெட்), ஐதராபாத் (8 விக்கெட்) குஜராத் (3 விக்கெட்), பெங்களூரு (13 ரன்) ஆகியவற்றிடம் தலா ஒரு தடவையும் தோற்று இருந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இப்போட்டியில் சென்னை அணி டெல்லியை வீழ்த்தி 4வது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 7 ஆட்டத்தில் தோற்றதால் சி.எஸ்.கே.வின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு மங்கி விட்டது. கவுரமான இடத்தை பிடிக்க எஞ்சிய ஆட்டங்களில் வெற்றிபெறுவது அவசியமானதாகும்.
டோனி கேப்டன் பொறுப்புக்கு பிறகு சிஎஸ்கே 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொன்றில் தோற்றது. பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றியை கோட்டை விட்டது.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. அந்த அணி சி.எஸ்.கே.வை தோற்கடித்து 6 வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் வார்னர் , ரோவ்மென் பவெல் , மிச்சேல் மார்ஷ் , ஷர்துல் தாகூர் , குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 6வது வெற்றிக்காவும், பெங்களூரு அணி 7வது வெற்றிக்காவும் காத்திருக்கின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
நேற்று நடைபெற்ற அரைஇறுதியில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்திய கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் 7-6 (7-5), 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதனிடையே கால்இறுதி போட்டி ஒன்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
4வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள் பங்கேற்பார்கள் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பஞ்ச்குலா:
4 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 4 முதல் ஜூன் 13 வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிக்கான லோகோ, ஜெர்சி மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை பஞ்ச்குலாவில் உள்ள இந்திரதனுஷ் அரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 4வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 2% மட்டுமே உள்ள ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகளில் வீரர்கள் பங்கேற்று அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என்று கூறினார்.
கட்கா, களரிபயட்டு, தங்-டா, மல்லகம்பா மற்றும் யோகாசனம் ஆகிய ஐந்து பாரம்பரிய விளையாட்டுகள் வரவிருக்கும் கேலோ இந்தியா போட்டிகளில் இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் முடிவடைந்த கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி நிச்சயமாக இளைஞர்களை எதிர்காலத்தில் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் என்றும், விளையாட்டு வீரர்களை சிறப்பாக செயல்பட வைக்கும் முயற்சியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் மனோகர் லால், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, மத்திய ஜல் சக்தி துறை இணை மந்திரி
ரத்தன் லால் கட்டாரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.
தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ 56 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த ராஜபக்சே 27 ரன்னிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ரன்னிலும் வெளியேறினர்.
லிவிஸ்டோன் 22 ரன் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 38 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜாஸ் பட்லரும்16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், படிக்கல் 31 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் ஹெட்மையர் 16 பந்துகளில் 31 ரன் குவித்து களத்தில் இருந்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து 190 ரன்கள் அடித்ததுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






