என் மலர்
விளையாட்டு
முதலில் விளையாடிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
மும்பை:
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி லக்னோ அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கே.எல் ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு வீரர் டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார்.
தீபக் ஹூடா 41 ரன்னும், க்ருனால் பாண்ட்யா 25 ரன்னும் அடித்தனர். பதோனி 15 ரன்னும், ஸ்டோய்னிஸ் 28 ரன்னும், ஹோல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து.
அதிகபட்சமாக ஆன்ட்ரு ரஸ்ஸல் 45 ரன்கள் அடித்தார். ஆரன் பிஞ்ச் 14 ரன்னும், சுனில் நரேன் 22 ரன்னும் அடித்தனர். அந்த அணியின் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், பிற வீரர்கள் ஒற்றை இலக்குடன் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கொல்கத்தா அணி 14.3 ஓவர் முடிவில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணி தரப்பில் அதிபட்சமாக அவிஷ்கான் 3 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்...உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும்- ஹர்பஜன் சிங் விருப்பம்
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் சீசனில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர்தான் உம்ரான் மாலிக். ஐதராபாத் அணியை சேர்ந்த இவர் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர். இவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
உம்ரான் மாலிக் குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
உம்ரான் மாலிக் எனக்கு மிகவும் பிடித்த வீரர். சிறந்த பந்து வீச்சாளரான அவரை இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். உம்ரான் மாலிக் அதிவேகப்பந்து வீச்சாளராக அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு அனைத்து திசைகளிலும் இருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. 2022 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் பும்ராவுக்கு துணையாக உம்ரான் மாலிக்கை களமிறக்க வேண்டும்.
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை. எனவே, இது ஒரு பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் நான் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை தேர்வு செய்திருப்பேன்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ அரை சதம் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 52-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பஞ்சா அணி வீரர்கள் களமிறங்கி ஆடினர்.
தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ-தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவான் 12 ரன்னில் இருக்கும் போது அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 47 ரன்களை எடுத்தது. அடுத்து வந்த ராஜபக்சா 27 ரன்னில் சாஹல் பந்தில் போல்ட் ஆனார்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் அகர்வால் 15 ரன்னில் சாஹல் பந்தில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேர்ஸ்டோ அரை சதம் அடித்து சாஹல் பந்தில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நான் ராஜஸ்தான் அணி கேப்டன் பதவியை விட்டு விலகும் போது அப்படி தான் நினைத்தேன் என ஷேன் வாட்ஸன் கூறினார்.
மும்பை:
நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து 6 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலின் 9வது இடத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு சென்னை அணி தனது பிராதன கேப்டனான தோனியை நீக்கிவிட்டு ஜடேஜாவை நியமித்தது தான் என கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்த பிறகு ஜடேஜா மீண்டும் தன் கேப்டன் பொறுப்பை தோனியிடமே தந்துவிட்டார்.
தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்த முடியாதது தான் அதற்கு காரணம் என கூறினார். இந்நிலையில் ஜடேஜா கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறித்து முன்னாள் சென்னை வீரர் ஷேன் வாட்ஸன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜடேஜா குறித்து ஷேன் வாட்ஸன் கூறியதாவது:-
முதன் முதலில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஏற்றார் என்றவுடன் எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் தோனியை பற்றி அனைவருக்கும் தெரியும். மைதானத்தில் அவரது கட்டுப்பாடு, மரியாதை மற்றும் பிற வீரர்களுக்கு தலைவனாக அவர் அளிக்கும் உத்வேகம் ஆகியவை மிகப்பெரியுது. ஜடேஜாவிற்கு அந்த இடத்தை ஈடு செய்வது கடினம். அது அவருக்கும் தெரியும். முதலில் தோனி காயம் அல்லது ஓய்வு காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக நினைத்தேன். பிறகு இது ஜடேஜாவிற்கு தரப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு என தெரிந்தது.
ஆனால் தோல்விக்கு பிறகு அவர் பதவி விலகியது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் சிறந்த வீரர், நுட்பம் வாய்ந்த விளையாட்டை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர். ஆனால் பொதுவில் இதுபோன்ற நிலையில் ஜடேஜாவை வைத்து பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. அவர் கேப்டன் பதவியை துறப்பதாக சொல்லியிருக்க கூடாது. ஆனால் அவர் மீண்டும் தோனிக்கு தலைமையை கொடுத்தது சரி என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் கேப்டனாக இருக்கும் ஒருவர் தன் பொறுப்பை மற்றொரிடம் தருகிறார் என்றால் அது உங்களுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கும். பொது இடத்தில் வைத்து உங்களை அவமானப்படுத்தியது போல தோன்றும். நான் ராஜஸ்தான் அணி கேப்டன் பதவியை விட்டு விலகும் போது அப்படி தான் நினைத்தேன். இவை அனைத்தும் இருந்தும் ஜடேஜா கேப்டன் பதவியை விட்டு விலகியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
இவ்வாறு வாட்ஸன் கூறினார்.
18 வது மின்னொளி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இன்று தொடங்குகிறது.
சென்னை:
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 18 வது மின்னொளி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 14 ந் தேதி வரை 8 நாட்கள் இந்தப்போட்டி நடக்கிறது.
இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க், துறைமுகம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ், சத்யபாமா, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட், லயோலா உள்பட 40 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், சங்கம், நேஷனல், எத்திராஜ் கல்லூரி உள்பட 10 அணிகளும் பங்கேற்கின்றன.
நாக்அவுட் மற்றும் லீக் முறையில் மாலை 3.30 மணி முதல் இரவு வரை போட்டி நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்படும். பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி பரிசுத்தொகைக்கு ஸ்பான்சர் செய்கிறது.
இன்று மாலை இந்தப் போட்டியை கவுதம் சிகாமணி எம்.பி, சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஏ.எம் செல்வராஜ், கே.எத்திராஜ் யாதவ், மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கே. கோபி, செயலாளர் எம்.கனகசுந்தரம், துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனதன் மூலம் ஐ.பி.எலி.ல் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆன 14-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார்.
குஜராத் அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுகிறார். மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 14 ரன்னில் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.
ஐ.பி.எல். போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆன 14வது வீரர் சாய் சுதர்சன் ஆவார். முஷாவிர் கோட்டே, மிஸ்பா உல்ஹக் (2008), சுவனபில் அஸ்னோகர் (2009), ரவீந்திர ஜடேஜா, சவுரப் திவாரி (2012), யுவராஜ் சிங், தீபக் ஹூடா, டேவிட் வார்னர் (2016), ஷெல்டன் ஜேக்சன் (2017), ரியான் பராக் (2019), ஹர்திக் பாண்ட்யா, ரஷீத்கான் (2021), பேர்ஸ்டோவ் (2021) ஆகியோர் இதே முறையில் அவுட் ஆகி இருந்தனர்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை ரோகித்சர்மா பெற்றார்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார். ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5வது வீரர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி, டி வில்லியர்ஸ், கிறிஸ்கெய்ல், பொல்லார்ட் ஆகியோருடன் அவர் இணைந்தார்.
ரோகித்சர்மா ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல்லில் 236 சிக்சர்கள் (218 ஆட்டம்) அடித்துள்ளார். அவர் டெக்கான் சார்ஜஸ் அணிக்காவும் விளையாடி இருந்தார்.
டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்களை எடுத்தது அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2வது வெற்றியை பெற்றது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.
6 வது வீரராக ஆடிய டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி , 4 சிக்சர்), இஷான் கிஷன் 29 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 28 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், பெர்குசன், சங்வான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விர்த்திமான் சஹா 40 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன்கில் 36 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி , 2 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 14 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.
முருகன் அஸ்வின் 2 விக்கெட்டும், பொல்லார்ட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை இந்தியன்ஸ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. களத்தில் அதிரடி வீரர்களான டேவிட் மில்லர், திரிவேதியா இருந்தனர். டேனியல் சாம்ஸ் அந்த ஓவரை வீசினார். அவர் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பையை வெற்றிபெற வைத்தார்.
3-வது பந்தில் ராகுல் திரிவேதியா ரன் அவுட் ஆனார். சாம்ஸ் 3 பந்தில் ரன் எதுவும் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசினார். மில்லரால் அவரது பந்தை அடிக்க இயலவில்லை.
கடந்த 6-ந் தேதி டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன் கொடுத்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் வெறும் 3 ரன்களே கொடுத்து குஜராத் வெற்றியை தடுத்தார்.
இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
இந்த வெற்றி எப்போதுமே திருப்தியை அளிக்கும். எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்களை எடுத்தது அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது. அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது.
பந்து வீச்சாளர்களின் பணி பாராட்டும் வகையில் இருந்தது. டேனியல் சாம்ஸ் கடந்த போட்டிகள் மூலம் மிகுந்த அழுத்தத்தில் வீசினார். அவரிடம் உள்ள தரம் எனக்கு தெரியும். கடைசி ஓவரை அவர் புத்திசாலித்தனமாக வீசினார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
குஜராத் அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறும் போது எந்த நாளிலும் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுப்போம். இரண்டு ரன்அவுட் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 19.2 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாகவே ஆடினோம் என்றார்.
மும்பை அணி 11-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை 9ந் தேதியும், குஜராத் அடுத்த போட்டியில் லக்னோவை 10ந் தேதியும் எதிர்கொள்கின்றன.
இதையும் படியுங்கள்...கவுண்டி போட்டிகளில் அதிக சிக்சர்கள் - சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரரான ஜோகோவிச்சை எதிர்கொண்டு விளையாடுகிறார் கார்லஸ் அல்காரஸ்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனான ரபேல் நடால், இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ். ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-2, 1-6 ,6-3 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் சதம் விளாசி அசத்தியதுடன், முதல் தர போட்டியில் அதிவேக சதம் அடித்த துர்ஹாம் அணி வீரரானார்.
லண்டன்:
இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. வொர்செஸ்டரில் நடக்கும் லீக் போட்டியில் துர்ஹாம், வொர்செஸ்டர்ஷைர் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற துர்ஹாம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
துர்ஹாம் அணியின் பேட்டிங் வரிசையில் 6வது வீரராக இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
முதல் 47 பந்தில் அரை சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த 17 பந்தில் சதம் விளாசினார். வொர்செஸ்டர்ஷைர் அணியின் ஜோஷ் பேக்கர் வீசிய 117வது ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி என 34 ரன் எடுத்து சதம் கடந்தார்.
மொத்தம் 64 பந்தில் சதம் விளாசிய இவர், முதல் தர போட்டியில் அதிவேக சதம் அடித்த துர்ஹாம் அணி வீரரானார். இதற்கு முன், துர்ஹாம் வீரர் பால் கோலிங்வுட் 75 பந்தில் சதமடித்தது சாதனையாக இருந்தது.
அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் 88 பந்தில் 17 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 161 ரன் எடுத்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் துர்ஹாம் அணி 6 விக்கெட்டுக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தப் போட்டியில் 17 சிக்சர் பறக்கவிட்ட ஸ்டோக்ஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார்.
இதற்கு முன் குளோசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய சைமண்ட்ஸ், எசக்ஸ் அணிக்காக பங்கேற்ற கிரஹாம் நேப்பியர் ஆகியோர் தலா 16 சிக்சர் அடித்திருந்தது சாதனையாக இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தான் ஆடிய 10 ஆட்டங்களில் குஜராத் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் தொடரில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் கிஷன் 45 ரன், ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன் குவித்து களத்தில் இருந்தார்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா, ஷுப்மான் கில்லும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.
அணியின் எண்ணிக்கை 106 ஆக இருக்கும்போது ஷுப்மான் கில் 52 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் சஹா 55 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி 24 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மும்பை 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது மும்பை பெறும் 2வது வெற்றி ஆகும்.
முதலில் விளையாடிய மும்பை அணியில் இஷாந்த் கிஷன், ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது
மும்பை:
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரர்கள் இஷாந்த் கிஷன், ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷாந்த் கிஷன் 29 பந்துகளில் 45 ரன்களும், ரோகித் 28 பந்துகளில் 43 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
சூரிய குமார் யாதவ் 13 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். திலக் வர்மா 21 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். அதிரடி காட்டிய டிம் டேவிட் 21 பந்துகளில் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்குகிறது.
இதையும் படியுங்கள்...
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது- ரிஷப்பண்ட்






