என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நேற்றைய போட்டியில் உம்ரான் மாலிக் இந்த போட்டியில் 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    15-வது ஐபிஎல் சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் ஐதராபாத்தின் உம்ரான் மாலிக் ஆட்டத்தின் 20வது ஓவரை வீசினார்.

    அந்த ஓவரின் 4 வது பந்தில் பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசினார். அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் அந்த பந்தை அவர் வீசினார்.  இந்த பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் பவுண்டரி விளாசினார் .
    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதற்கு முன் 154 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய  உம்ரான் மாலிக் தற்போது மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார் .
    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட்செய்த டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    அடுத்து ஆடிய ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார். மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 89-வது அரை சதம் கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 88 அரை சதம், விராட் கோலி 77 அரை சதம் அடித்துள்ளனர்.

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் நிகோலஸ் பூரன், மார்கிராம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ஐதராபாத் சார்பில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ரன், கேப்டன் வில்லியம்சன் 4 ரன், ராகுல் திரிபாதி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய மார்கிராம், பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஷஷாங்க் 10 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டி அரை சதம் கடந்து, 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி ஆகும்.
    மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்ய, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    டெல்லி அணியின் துவக்க வீரர் மன்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 34 பந்துகளில் அரை சதம் கடந்த வார்னர், தொடர்ந்து சதத்தை நோக்கி முன்னேறினார். 

    அதேசமயம் மறுமுனையில் மிட்செல் மார்ஷ் 10 ரன்கள், கேப்டன்  ரிஷப் பண்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வார்னருடன் பாவெல் இணைய, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. பந்துகளை  சிக்சர்களாக விரட்டிய பாவெல் அரை சதம் கடக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 

    வார்னர் 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. 
    இதனால் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார்.

    இதனால் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோப்ரா ஆர்சர் கூறியதாவது:-

    முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு முதல் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்பின் கிரிக்கெட் விளையாடலாம் என நம்பிக்கையாக நான் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என நான் பந்துவீசும் போது தான் தெரிந்தது. உடனே போட்டியில் இருந்து வெளியேறினேன். அதன்பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பரில் நடந்தது.

    5 மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். இப்போது தான் குணமடைந்து வருகிறேன். ஒரு கட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது என அஞ்சினேன். ஆனால் இப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை வருகிறது. 

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விரைவில் கிரிக்கெட்டில் பங்கேற்பேன்.

    இவ்வாறு ஜோஃப்ரி ஆர்ச்சர் கூறினார்.
    ரோவ்மன் பாவெல் தனது குடும்பம் குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
    மும்பை:

    15-வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வரும் வீரர் ரோவ்மன் பாவெல். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.80 கோடி கொடுத்து  டெல்லி அணி விலைக்கு வாங்கியது.

    இந்நிலையில் ரோவ்மன் பாவெல் தனது குடும்பம் குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

    நான் எனது தந்தையை நேரில் பார்த்தது  இல்லை. என் தாயின் வயிற்றில் நான் கருவாக இருந்தபோதே, அவற்றை கலைக்குமாறு எனது தந்தை என் தாயை துன்புறுத்தினார். ஆனால், என் தாய் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் என் தந்தை எங்களை விட்டு சென்றுவிட்டார்.

    ஜமைக்காவில் உள்ள பழைய துறைமுகத்துக்கு அருகே பானிஸ்டர் மாவட்டத்தில் 2 அறைகள் மட்டுமே இருக்கும் சிறிய வீட்டில்தான் நான் பிறந்தேன். என்னையும், என் சகோதரியையும் என் தாய் ஜோன் மிகவும் கஷ்டங்களுக்கு இடையில் வளர்த்தார். என் தாயைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் போதாது.

    நான் எப்போதெல்லாம் மனம் தளர்ந்து இருப்பேனோ அப்போதெல்லாம் என் தாயை மனதில் நினைத்துகொள்வேன்.  நான் எனக்காக  எதையும் செய்யவில்லை. நான் என்  தாய்க்காகவும், சகோதரிக்காகவும் செய்கிறேன் என்பதை மட்டும் நினைத்துக்கொண்டே இருப்பேன்.

    இவ்வாறு ரோவ்மன் போவல் கூறினார்.
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தோல்வி விளம்பில் இருந்த ரியல் மாட்ரிட் கடைசி நிமிட கோல்களால் வென்று மான்செஸ்டர் அளிக்க அதிர்ச்சி அளித்தது.
    மாட்ரிட்:

    கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த அரை இறுதியின் 2வது சுற்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. 73வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரியாத் மக்ரேஸ் கோல் அடித்தார். ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் 89வது நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. 90வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ரோட்ரிகோ கோல் அடித்தார். நேரம் விரயத்துக்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ரோட்ரிகோ (91வது நிமிடம்) மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் இருந்தது. அரை இறுதியின் முதல் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இருந்தது. அரை இறுதி சுற்று முடிவில் 5-5 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    95வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கரிம் பென்சிமா கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

    அரை இறுதியின் இரு சுற்று ஆட்டங்களின் முடிவில் ரியல் மாட்ரிட் 6-5 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வி விளம்பில் இருந்த ரியல் மாட்ரிட் கடைசி நிமிட கோல்களால் வென்று மான்செஸ்டர் அளிக்க அதிர்ச்சி அளித்தது. மே 29-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் லிவர்பூல் அணியுடன் (இங்கிலாந்து) ரியல் மாட்ரிட் மோதுகிறது.
    மரடோனா டீசர்ட் லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த டீசர்ட், 9.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
    லண்டன்:

    பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினாவை சேர்ந்த அவர் கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். 1986ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து கால் இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா 2 கோல் அடித்தார். இதில் முதல் கோலை மரடோனா தலையால் அடிக்க முயற்சிக்கும் போது அவரது கையில் பந்துபட்டு கோல் கம்பத்துக்குள் சென்று விட்டது.

    இதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். பின்னர் இந்த கோலை, ‘கடவுளின் கை” என்று மரடோனா கூறினார். அப்போட்டியின் போது வீரர்கள் தங்களது டீசர்ட்டுகளை (ஜெர்சி) பரிமாறி கொண்டபோது மரடோனாவின் டீசர்ட்டை இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் பெற்றார்.

    இந்த மரடோனா டீசர்ட் லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த டீசர்ட், 9.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் ரூ.71 கோடி ஆகும்.
    50-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரிஷப்பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 50வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி 5வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ்ரோ, மன் பாவெல், அக்‌ஷர் பட்டேல் ஆகிய வீரர்கள் உள்ளனர். அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய சூழலில் டெல்லி அணி உள்ளது.

    ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி கடந்த 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும்.

    ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, திரிபாதி, மார்க்ராயம், நிகோலஸ் பூரன்டி, நடராஜன், உம்ரான் மாலிக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    விராட் கோலி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன அறிவுரை கூறுவீர்கள் என டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 
    முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். 

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே விராட் கோலி அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் விளையாடிய சர்வதேச போட்டிகளிலும் விராட் கோலி சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வருகிறது. அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன அறிவுரை கூறுவீர்கள் என டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த வார்னர்,  ‘விராட் கோலிக்கு ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன். "ஃபார்ம்" என்பது தற்காலிகமானது. "கிளாஸ்" என்பது தான் நிரந்தரம். எனவே அதை நீங்கள் தவற விடாதீர்கள். உங்களுக்கு இப்போது நடப்பது அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான். இன்னும் 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மேலும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்’ என கூறினார்.
    பேட்ஸ்மேன்ஷிப் சற்று சிறப்பாக இருந்திருந்தால் கடைசி சில ஓவர்களில் எங்களுக்கு அதிக ரன் தேவைப்பட்டிருக்காது என சென்னை அணி கேப்டன் டோனி கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோற்றது.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது. மஹிபால் லோம்ரோர் 42 ரன்னும், டுபெலிசிஸ் 38, விராட் கோலி 30 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தீக்சனா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில் தொடக்கம் நன்றாக இருந்தது. தொடக்க ஜோடி பிரிந்ததும் சீரான இடைவெளியில் விக்கெட் டுகள் சரிந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்னே எடுக்க முடிந்தது.

    தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:

    நாங்கள் அவர்களை (பெங்களூர் அணி) 170 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது நன்றாக இருந்தது. உண்மையில் எங்களை வீழ்த்தியது பேட்ஸ்மேன்ஷிப். இலக்கை சேசிங் செய்யும்போது ரன் எவ்வளவு தேவை, பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் உங்கள் உள்ளுணர்வை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் ஷாட்டை விளையாடுவதை விட நிலைமை என்ன கேட்கிறது என்பதை பார்க்க முயற்சிக்க வேண்டும்.

    பேட்ஸ்மேன்ஷிப் சற்று சிறப்பாக இருந்திருந்தால் கடைசி சில ஓவர்களில் எங்களுக்கு அதிக ரன் தேவைப்பட்டிருக்காது. நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து கொண்டே இருந்தோம்.

    இந்த விஷயங்களை நீங்கள் கவனித்து கொண்டால் சேசிங் என்பது கணக்கீடாகவும், முதலில் பேட்டிங் செய்வது உள்ளுணர்வு பற்றியதாகவும் இருக்கும். என்ன தவறு இருக்கிறது என்று நாம் தொடர்ந்து பார்க்க வேண்டும். உங்களிடம் எத்தனை புள்ளிகள் உள்ளன என்பதில் கவனம் சிதறுவது எளிது.

    புள்ளிகள் அட்டவணையில் எந்த இடத்தில் இருந்தீர்கள் என்பதை விட, உங்களது செயல்முறை முக்கியமானது. அந்த விஷயங்களை கவனித்து கொண்டால் புள்ளி அட்டவணை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்’ என்றார்.

    பெங்களூர் கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது, ‘சற்று சவாலான ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் எடுத்தோம். பேட்டிங் வரிசையில் நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். சென்னை அணி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடியது. அதன்பின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியவுடன் நாங்கள் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம்” என்றார்.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கி உள்ளது. எஞ்சிய 4 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினமாக இருக்கும். பெங்களூரு அணி 6வது வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது.

    மகளிர் கால் அரையிறுதி ஆட்டத்திற்கு துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் முன்னேறி உள்ளார்.
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில்  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் - செர்பியாவின் கெக்மனோவிச் .ஆகியோர் மோதினர் .

    காயத்தில் இருந்த மீண்டும் விளையாட்டிற்கு திரும்பிய நிலையில்  நடால் இந்த போட்டியில் பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-1 ,7-6  என்ற செட் கணக்கில் கெக்மனோவிச்- ஐ வீழ்த்திய ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் .

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.  

    இந்த போட்டியில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    ×