என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா, இஷாந்த் கிஷன்
    X
    ரோகித் சர்மா, இஷாந்த் கிஷன்

    ஐபிஎல்: குஜராத் அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

    முதலில் விளையாடிய மும்பை அணியில் இஷாந்த் கிஷன், ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது
    மும்பை:

    மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  முதலில் விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரர்கள் இஷாந்த் கிஷன், ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இஷாந்த் கிஷன் 29 பந்துகளில் 45 ரன்களும், ரோகித் 28 பந்துகளில் 43 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 

    சூரிய குமார் யாதவ் 13 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். திலக் வர்மா 21 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.  அதிரடி காட்டிய டிம் டேவிட்  21 பந்துகளில் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 177  ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 178  ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்குகிறது.

    Next Story
    ×