search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    3 விக்கெட் வீழ்த்திய பாட் கம்மின்ஸ்
    X
    3 விக்கெட் வீழ்த்திய பாட் கம்மின்ஸ்

    பாட் கம்மின்ஸ், ரசல் அசத்தல் - 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது கொல்கத்தா

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா தலா 43 ரன்கள் எடுத்தனர். அஜிங்கியா ரகானே 25 ரன், ரிங்கு சிங் 23 ரன் எடுத்தனர்.

    மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களும் விரைவில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷண் அரை சதமடித்தா. அவர் 51 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மும்பை அணி 17.3 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. இது கொல்கத்தா அணியின் 5-வது வெற்றி ஆகும்.


    மும்பை அணியின் பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    Next Story
    ×