என் மலர்

  விளையாட்டு

  தமிழக முதல்வர் ஸ்டாலின்
  X
  தமிழக முதல்வர் ஸ்டாலின்

  தாமஸ் கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
  சென்னை:

  தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை, முதன்முறையாக இந்தியா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

  இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 
  Next Story
  ×