search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20cricket"

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது. #T20cricket #indvswi #kohli #rohitsharma

    கொல்கத்தா:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது. இதனால் இந்திய அணியின் அதிரடி நாளையும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கேப்டன் வீராட்கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், அணியின் சீனியர் வீரருமான டோனி நீக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    அதே நேரத்தில் தேர்வு குழுவினர் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. இளம் வீரர் ரிசப்பண்டுக்கு வழி விடும் வகையில் டோனியே 20 ஓவர் ஆட்டங்களில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார் என்று வீராட்கோலி தெரிவித்து இருந்தார்.

    கேப்டன் ரோகித்சர்மா, தவான், ராகுல், ஷிரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப்பண்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், குல்தீப் யாதவ், பும்ரா, யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த தினேஷ்கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்டில் மோசமாக விளையாடிய அந்த அணி ஒருநாள் தொடரில் 3 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாட கூடியது.

    இதனால் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது. அந்த அணியில் கேப்டன் பிராத் வெயிட், ஹெட்மயா, லீவிஸ், ரஸ்சல், டாரன் பிராவோ, போல்லார்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #T20cricket #indvswi #kohli #rohitsharma

    ×