search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் திரிபாதி"

    • இந்திய கிரிக்கெட் அணியில் திரிபாதி சிறப்பாக விளையாடுவார்.
    • பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தான் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என்று சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டிய நேரம் வரும் போதோ அல்லது அவர் இல்லாத போதோ அவருக்குப் பதிலாக 3-வது இடத்தில் விளையாடுவதற்கு ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் ராகுல் திரிபாதி விளையாடினார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருவரும் விளையாடியிருக்கின்றனர். அப்போது ராகுல் திரிபாதியின் பேட்டிங் திறமையை தினேஷ் கார்த்திக் கண்டுள்ளார். ஐபிஎல் சீசனில் அவர் நன்றாக விளையாடினாலும், சரி விளையாடாவிட்டாலும் சரி, இந்திய கிரிக்கெட் அணியில் அவர் சிறப்பாக விளையாடுவார்.

    விராட் கோலி விளையாடினார் என்றால் ஓகே. மற்றபடி அவரது இடத்தை நிரப்புவதற்க்கு முதல் வாய்ப்பாக ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார்.

    என்று கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

    • ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 26 மற்றும் 28-ந் தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடிய அவர் 413 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். முன்னணி வீரர் களுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு முதல் முறையாக இடம் பெற்றுள்ள ராகுல்திரிபாதி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எனது கனவு நனவானது. எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு இது வாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தேர்வாளர்கள் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இதை பார்க்கிறேன். எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

    இவ்வாறு ராகுல் திரிபாதி கூறி உள்ளார்.

    ×