என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
    • டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.

    8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    டி 20 உலக கோப்பையில் பங்கேற்கச் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு பெர்த் மைதானத்தில் 13-ம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.
    • பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ரிஸ்வான் ஆசிய கோப்பை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    • மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்கள் உலக கோப்பை போட்டிக்கான பிரசாரத்தை முன்வைத்தனர்,
    • போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும்.

    நியோன்:

    உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், போரின் பயங்கரத்தை முறியடிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு உக்ரைன் அரசு ஆயத்தமாகி வருகிறது. 2030ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியை ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான கூட்டு முயற்சியை உக்ரைன் தொடங்கி உள்ளது.

    மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்களும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (உபா) தலைமையகத்தில் இணைந்து இதற்கான பிரச்சாரத்தை முன்வைத்தனர், இது விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆண்ட்ரி பாவெல்கோ, இது லட்சக்கணக்கான உக்ரைன் ரசிகர்களின் கனவு என்றார். மேலும் போரின் பயங்கரத்தில் இருந்து மீண்டவர்கள் அல்லது இனனமும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கனவு என்று கூறிய அவர், விரைவில் உக்ரைன் கொடி பறக்கும் என்றார். உலககோப்பை போட்டியை நடத்தும் திட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்திருப்தாகவும் கூறினார்.

    மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின்-போர்ச்சுகல் ஏலம், முன்னர் உபாவின் விருப்பமான போட்டியாளராக மாற்றப்பட்டது. போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும். போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் உக்ரைனில் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.

    • ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பிஞ்ச் அரை சதம் அடித்தார்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். டேவிட் வார்னர் 14, கீரின் 14, மிட்செல் மார்ஸ் 3, மெக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 0 என ஆட்டமிழந்தனர்.

    ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஞ்ச் 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 4 ரன்னில் போல்ட் ஆனார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை காட்ரேல் வீசினார். முதல் பந்தில் வேட் பவுண்டரி விளாச இன்னும் 5 பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அடுத்த பந்தில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் வேட் 1 ரன் எடுத்தார். 4-பந்தில் மீண்டும் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. அதில் ஸ்டார்க் 2 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.

    • டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடும்.
    • இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    லக்னோ:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இந்தியாவின் முன்னனி வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    அதன் படி இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் தொடங்குகிறது. டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடும்.

    அதே வேளையில் இந்திய முன்னணி வீரர்கள் இல்லாததால் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்கள் அணியில் தங்களது இடத்தை பிடிக்க தங்களது திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்ல கடுமையாக போராடுவர். இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    • மேயர்ஸ் அடித்த சிக்சர் வீடியோவை ஆகாஷ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடங்கும். இவர் அடித்த அந்த சிக்சர் நம்ப முடியாத அளவில் இருந்தது.

    3-வது ஓவரில் இந்த சிக்சர் அடிக்கப்பட்டது. அந்த ஓவரை கீரின் விசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை மேயர்ஸ் ஆப் திசையில் தூக்கி விட்டு சிக்சராக மாற்றினார். கைல் மேயர்ஸ் அடித்த அந்த சிக்சர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நம்ப முடியாத ஷாட் என குறிப்பிட்டிருந்தார்.

    • அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ்- ஜான்சன் சார்லஸ் களமிறங்கினர். 2-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டை இழந்தது. 2 பந்துகளை சந்தித்த அவர் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கிங் 12 ரன்னில் ஹசில்வுட் பந்தில் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய கைல் மேயர்ஸ் 36 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் முறையில் வெளியேறினார்.

    அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பூரன் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த வீரர்கள் ரெய்மான் ரெய்பர் 19, பவல் 7, ஹோல்டர் 13 என விக்கெட்டை இழந்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர். அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கிறது.

    • என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது.
    • ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்.

    சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓராண்டுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    ஐபிஎல் 2023 தொடருக்கு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு இணையப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ். ஆனால், அவர் வீரராக இணையப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

    சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்துக்குத் திரும்பும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்குத் தன்னுடைய ஆதரவைத் தரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

    சமூகதள உரையாடல் ஒன்றின் போது அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு நான் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு செல்லப் போகிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்.

    கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும். என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன். தான் அடுத்து தொடங்கப்போகும் யூடியூப் சேனல் பற்றி அறிவித்த டி வில்லியர்ஸ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

    இந்த உரையாடலின்போது இப்போதைக்குத் தான் பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய மகத்தான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த டி வில்லியர்ஸ் தற்போதைக்கு தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதே தன்னுடைய பிரதானம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே பகிர்ந்துகொள்ள நான் நிச்சயம் விரும்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் வரும். ஆனால் இப்போதைக்கு நான் எந்த அணியோடும் இணையத் தயாராக இல்லை. பயிற்சியாளரானால் மீண்டும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் மீண்டும் பயணம் மேற்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பல பயணங்கள் மேற்கொண்டுவிட்ட நான் இப்போதைக்கு சில காலம் என் குடும்பத்தோடு என் நேரத்தை செலவளிக்க நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

    ஐபிஎல் வரலாற்றில் முன்னணி வீரர்களில் ஒருவரான ஏபிடி வில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் 39.7 சராசரி மற்றும் 151 ஸ்டிரைக் ரேட்டுடன் 5,162 ரன்களை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவுக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி மூன்று வடிவங்களிலும் 18 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    • பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம்.
    • அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

    இந்தூர்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

    வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்பட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 23-ந்தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

    அவரது இடத்தில் மாற்று வீரர்களான முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தார். இது தொடர்பாக டிராவிட் கூறியதாவது:-


    பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். அக்டோபர் 15 வரை எங்களுக்கு நேரம் உள்ளது. முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் ஆடவில்லை.

    அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பதை அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும்.

    நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார். 

    • நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
    • இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும்

    இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 4-வது இடத்தில் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்பொழுதுமே புள்ளி விவரங்களை பற்றி யோசிப்பது கிடையாது. போட்டிக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டுமே தான் யோசிப்பேன். ஆனால் எனது நண்பர்கள் எனக்கு வாட்ஸ் அப் மூலம் என்னுடைய புள்ளி விவரங்களையும், சாதனைகளையும் அனுப்புவார்கள். ஆனால் அதை எல்லாம் நான் பெருசாக எடுத்துக் கொள்வதில்லை.

    என்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறேன். நான் எவ்வாறு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேனோ அதனை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது. இந்த போட்டியில் எனக்கு முன்னால் தினேஷ் கார்த்திக் களமிறங்க காரணம், அவருக்கு இன்னும் பேட்டிங் செய்ய நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தோம்.

    அதன்படி அவர் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும் என்பதனாலே அவருக்கு விளையாட ஒரு வாய்ப்பாக இந்த பிரமோஷன் வழங்கப்பட்டது. அவரும் நான்காவது இடத்தில் பிரமாதமாக விளையாடினார். தற்போது என்னுடைய இடம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் அதைப்பற்றி நான் யோசிக்க போவதில்லை. இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும்

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
    • ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் பெற்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 23.06 வினாடியில் கடந்தார்.

    இதில் பங்கேற்ற மற்ற தமிழக வீராங்கனைகளான சந்திரலேகா 5-வது இடத்தையும், கிரிதரணி 8-வது இடத்தையும் பிடித்தனர்.

    இதே போல 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை வித்யாவும் தங்கம் வென்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 56.57 வினாடியில் கடந்தார். மற்ற தமிழக வீராங்கனைகளான திவ்யா 5-வது இடத்தையும், சுமித்ரா 6-வது இடத்தையும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சுரேந்தர் ஜெயக்குமார் வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.

    தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தடகளத்தில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கம் கிடைத்துள்ளது.

    டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் கிடைத்தது. மனிஷ் சுரேஷ் குமார், சாய் சமிதா ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.

    நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் தொடரில் பவன் குமார் இந்த பதக்கத்தை பெற்றார். ஸ்குவாஷ் பந்தயத்தில் ஹரீந்தர் பால்சிங் சிந்து வெண்கல பதக்கம் பெற்றுக் கொடுத்தார்.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணிக்கு 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 46 பதக்கம் கிடைத்தது. பதக்க பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. 

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
    • பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 37 முறை ஆட்டமிழந்துள்ளார்.

    இந்தூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு மோசமான சதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 43 முறை ஆட்டம் இழந்து முதல் இடத்தில் உள்ளார்.

    அவருக்கு அடுத்த படியாக அயர்லாந்தின் கெவின் ஓ பிரெய்ன் 2-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் ரோகித் சர்மா - 43 முறை, கெவின் ஓ பிரெய்ன் - 42 முறை, முஷ்பிகுர் ரஹீம் - 40 முறை, முகமது நபி - 39 முறை, ஷாகித் அப்ரிடி - 37 முறை ஆட்டமிழந்துள்ளனர்.

    ×