என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவறவிட்டார்.
    • இதனால் அவர் டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    செயின்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களை போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

    இந்நிலையில், உலக கோப்பை போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை ஹெட்மயர் தவறவிட்டார். இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ஷிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக 34 வயதான ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் குவித்தது.
    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார்.

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் வெளியேற, மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும்.

    மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 27 ரன்னும், ஹர்சல் படேல் 17 ரன்னும், தீபக் சாகர் 31 ரன்னும் அடித்தனர். உமேஷ் யாதவ் 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • தென் ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார்.
    • குயின்டன் டி காக் 68 ரன்கள் எடுத்தார்.

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


    டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் வெளியேற, மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும். மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாட உள்ளது.

    • இன்றைய போட்டியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்பு

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா இந்தியாவிடம் தொடரை இழந்துவிட்டது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது.

    இந்தூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது.

    இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றிபெற முடிந்தது. டேவிட் மில்லரின் தடாலடியான சதத்தால் தென்ஆப்பிரிக்கா 221 ரன்கள் வரை நெருங்கி வந்து அச்சுறுத்தியது. இந்தியாவின் இறுதிக்கட்ட பந்து வீச்சு சொதப்பலாக இருந்தது.

    தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் நெருக்கடி இல்லை. ஒரு சில மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    சூப்பர் பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

    தென்ஆப்பிரிக்கவை எடுத்துக் கொண்டால் கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், குயின்டான் டி காக் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். ஆனால் கேப்டன் பவுமாவின் பேட்டிங் தான் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சாளர்கள் ரபடா, அன்ரிச் நோர்ஜியா ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் அவர்களுக்கும் இதுதான் உலக கோப்பை போட்டிக்கு முந்தைய கடைசி டி20 போட்டியாகும்.

    • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 12-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

    துபாய்:

    ஐசிசி சார்பில் மகளிர்க்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்க மண்ணில் பிப்ரவரி 10 முதல் 26ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

    இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன.

    குரூப் 1-ல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் உள்ளன.

    இந்திய அணி பிப்ரவரி 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப்ரவரி 15), இங்கிலாந்து (பிப்ரவரி 18), அயர்லாந்து (பிப்ரவரி 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

    23 பிப்ரவரி அரை-இறுதி 1 கேப் டவுன், 24 பிப்ரவரி- ரிசர்வ் டே கேப் டவுன்

    24 பிப்ரவரி அரை-இறுதி 2 கேப் டவுன், 25 பிப்ரவரி- ரிசர்வ் டே கேப் டவுன்

    26 பிப்ரவரி- இறுதி கேப் டவுன், 27 பிப்ரவரி ரிசர்வ் டே கேப் டவுன்.

    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார்.
    • பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் பிசிசிஐ ஆலோசனை.

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பயிற்சின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

    இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார். மேலும், உலகக்கோப்பை டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பி.சி.சி.ஐ. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
    • இந்திய வீராங்கனை மேகனா 69 ரன்கள் குவித்தார்.

    சில்கெட்:

    ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் தொடர் வங்களாதேசத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்று உள்ள இந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மலேசிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது.

    அதிகபட்சமாக இந்திய தொடக்க வீராங்கனை சபனேனி மேகனா 69 ரன்கள் குவித்தார். ஷபாலி வர்மா 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் அடித்தனர். பின்னர் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மலேசிய அணி களம் இறங்கியது. 5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.

    மழை தொடர்ந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இதன் மூலம் இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. நாளை ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

    • யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் யூசுப்பைத் தள்ளி விட்டார்.

    ஜோத்பூர்:

    லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்றது.

    ஆட்டத்தின்போது, யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

    அப்போது ஜான்சன் யூசுப்பைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இவர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டோனி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13.10 ரன் ரேட்டில் 100 ரன்களை எடுத்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. வெற்றிக்காக போராட்டிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் மில்லர் சதமும், டிகாக் அரை சதமும் அடித்தனர்.

    ஆனார் 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டோனி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபாரமான பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்துள்ளனர்.

    டோனி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13.10 ரன் ரேட்டில் 100 ரன்களை எடுத்தனர். அதற்கு அடுத்தப்படியாக கேஎல் ராகுல்-ரோகித் சர்மா ஜோடி 13.02 ரன் ரேட்டில் 100 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விராட் கோலி - சூர்ய குமார் ஜோடி 14.57 ரன் ரேட்டில் 100 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

    இந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 சிக்சர் 5 பவுண்டரி அடங்கும். விராட் கோலி 28 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.

    • இந்திய அணி பேட்டிங் செய்த போது சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 19-வது ஓவர் வரையில் 28 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார்.
    • 20-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் நேராக கோலியிடம் சென்று ஸ்ட்ரைக் கொடுக்கவா? என்பது போல் கேட்டார்.

    இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்த போது சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 19-வது ஓவர் வரையில் 28 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார். அரைசதம் அடிக்க கடைசி ஓவரில் இன்னும் ஒரு ரன் தேவை என்ற சூழலில் தான் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.

    20-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் நேராக கோலியிடம் சென்று ஸ்ட்ரைக் கொடுக்கவா? என்பது போல் கேட்டார். ஆனால் கோலியோ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எனது அரைசதத்தை விட அணியின் ஸ்கோரே நமக்கு முக்கியம். நீ அடித்து விளையாடு என்பது போல சைகை காட்டினார். இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    விராட் கோலி கூறியதை போலவே தினேஷ் கார்த்திக் தனது பணியை சரியாக செய்து முடித்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 237 ரன்களை குவித்தது.

    தினேஷ் கார்த்திக் கேட்டதற்கு விராட் கோலி சைகை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தொடக்கத்தில் விக்கெட் கைப்பற்றிய அர்ஷ்தீப்சிங் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி கொடுத்தார்.
    • அக்‌ஷர்படேல் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 20 ரன் கொடுத்தார்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி ‌வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப் புக்கு 237 ரன் குவித்தது.

    சூர்யகுமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), லோகேஷ் ராகுல் 28 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி , 4 சிக்சர்), விராட் கோலி 28 பந்தில் 49 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 37 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 பந்தில் 17 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகராஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடியே தோற்றனர்.

    5-வது வீரராக களம் இறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 47 பந்தில் 106 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), குயின் டன் டி காக் 48 பந்தில் 69 ரன்னும் (3பவுண்டரி, 4சிக்சர்), மர்கிராம் 19 பந்தில் 33 ரன்னும் (4 பவுண் டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, கடைசி ஆட்டத்தில் பந்து வீச்சு நன்றாக அமையவில்லை" என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். ஆனால் கடந்த சில ஆட்டங்களாக அணியின் பந்து வீச்சுகள் சரியில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    கடந்த 5 அல்லது 6 ஆட்டங்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. கடைசி ஆட்டத்தில் (டெத்ஓவர்) பந்து வீச்சு நன்றாக அமையவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க விரும்புகிறோம். டெத் ஓவர்களில் பந்து வீசுவது சவாலானதே. ஆனால் அதுதான் ஆட்டத்தை முடிவு செய்கிறது. இது கவலைக்குரியது இல்லை. ஆனால் நமது செயலை ஒன்றிணைக்க வேண்டும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    தொடக்கத்தில் விக்கெட் கைப்பற்றிய அர்ஷ்தீப்சிங் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி கொடுத்தார். அவர் 19-வது ஓவரில் 26 ரன்களை வழங்கினார். அவர் 4 ஓவரில் 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். அக்‌ஷர்படேல் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 20 ரன் கொடுத்தார். அவர் 4 ஓவரில் 53 ரன்களை வழங்கினார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

    ×