என் மலர்
விளையாட்டு
- டி20 போட்டிகளில் அதிவேக அரை சதமத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடம் பெற்றார்.
- ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
கவுகாத்தி:
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து, நேற்று 2-வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராகுல், ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 237 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் (573 பந்துகள்) ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றுள்ளார்.
குறைவான பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
573 பந்துகள் - சூர்யகுமார் யாதவ்
604 பந்துகள்- கிளென் மேக்ஸ்வெல்
635 பந்துகள்- கொலின் மன்றோ
640 பந்துகள்- எவின் லூயிஸ்
654 பந்துகள்- திசர பெரேரா.
இதேபோல், டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த (இன்னிங்ஸ் அடிப்படையில்) வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடம். விராட் கோலி 27 இன்னிங்சிலும், கே.எல்.ராகுல் 29 இன்னிங்சிலும் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுலுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 209 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்ததில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 7வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் டுகெட் 19 பந்தில் 30 ரன்னும், புரூக் 29 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். இதனால் அந்த அணி 200 ரன்களை கடந்தது.
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.
அந்த அணியில் ஷான் மசூத் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இதன்மூலம் டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
- முதலில் ஆடிய இந்தியா 237 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. சிறப்பாக தொடக்கம் கொடுத்த கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார்.
அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 5சிக்சர், 5 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார்.
இதையடுத்து, 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. கேப்டன் பவுமா, ரூசோவ் டக் அவுட்டாகினர். மார்கிராம் 33 ரன்னில் அவுட்டானார்.
டி காக், டேவிட் மில்லர் பொறுமையுடன் ஆடினர். டி காக் அரை சதமடித்தார். டி காக் 69 ரன் எடுத்தார். டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ௧௬ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
- டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ரோகித் சர்மா.
- டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலுக்கு முதலிடம்.
கவுகாத்தி:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் விளையாடிய விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் அவர் 19 ரன்களை எடுத்த போது 11,000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
354 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 11,030 ரன்களை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ரோகித் சர்மா (10,587 ரன்கள்), அடுத்தபடியாக ஷிகர் தவான் (9,235 ரன்கள் ) ரன்கள் உள்ளார்.
டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். 463 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 14,562 ரன்கள் எடுத்துள்ளார்.
அடுத்ததாக அதே அணியை சேர்ந்த கீரன் பொல்லார்ட் 614 போட்டிகளில் 11,915 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 481 போட்டிகளில் விளையாடி 11,902 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
- பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
- பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
கவுகாத்தி:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர்.

மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
- அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்
- தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 57 ரன் அடித்தார்.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கே.என்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.
அவருடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி 49 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. இதையடுத்து 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.
- ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.
அதன்படி இன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் , ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாகர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் அறிமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி லக்னோவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
- 2014-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 8 ஆண்டு காலத்திற்கு பிறகு முறியடித்தார்.
- தமிழக வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ், 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. 8 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்த சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டிய தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளிப்பதக்கமும், 3.90 மீட்டர் உயரம் தாண்டிய பாரனிகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தூத்துக்குடியை சேர்ந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் (தகுதி இலக்கு 8.25 மீட்டர்) தகுதி பெற்றார்.
- குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்குவங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், கர்நாடக வீராங்கனை திலோத்தமாவை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.
இதில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்கு வங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.
- இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
- வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.
வெற்றி பெற்ற அணியின் ரசிகர்களும், தோல்வி அடைந்த அணியின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 127 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 2 பேர் போலீஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கலவரத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
- நமன் ஓஜா இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
ராய்ப்பூர்:
இந்தியாவில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என 8 நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. நமன் ஓஜா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் இஷான் ஜெயரத்னே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லைஅ.
இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய லெஜெண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.






