என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.
    • ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார்.

    ஆமதாபாத்:

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்றனர்.

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.

    அவர் ஸ்னாட்ச் முறையில் 84 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 107 கிலோ என்று மொத்தம் 191 கிலோ எடை தூக்கி முதலிடத்தை பிடித்தார். மற்றொரு மணிப்பூர் வீராங்கனை சஞ்சிதா சானு (187 கிலோ) வெள்ளிப்பதக்கமும், ஒடிசாவின் சினேகா சோரன் வெண்கலப்பதக்கமும் (169 கிலோ) பெற்றனர்.

    பின்னர் மீராபாய் சானு கூறுகையில் 'சமீபத்தில் பயிற்சியின் போது இடது கைமணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் 'ரிஸ்க்' வேண்டாம் என்று தான் இந்த போட்டியில் 3-வது முயற்சியை பயன்படுத்தவில்லை. அடுத்து டிசம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக வேண்டி இருக்கிறது' என்றார்.

    தடகளத்தில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் 2015-ம் ஆண்டு ரஞ்சித் மகேஷ்வரி 16.66 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.

    அதனை முறியடித்து அசத்திய 21 வயதான பிரவீன் திருவாரூர் மாவட்டம் செட்டிசத்திரம் அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆவார். கேரளாவின் ஏ.பி.அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் (16.08 மீட்டர்), பஞ்சாப்பின் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் (15.97 மீட்டர்) கைப்பற்றினர்.

    ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். வாள்வீச்சு சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் 15-3 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

    சென்னையில் வசிக்கும் 29 வயதான பவானிதேவி ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய விளையாட்டிலும் வாகை சூடியிருக்கிறார். இதன் ஆண்கள் பாயில் பிரிவில் தமிழக வீரர் வினோத்குமாருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் வீராங்கனை இளவேனில் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இளவேனில் குஜராத் அணிக்காக களம் இறங்கினாலும் அவரது சொந்த ஊர் கடலூர் என்பது நினைவு கூரத்தக்கது.

    பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஸ்வப்னா பர்மன் (மத்தியபிரதேசம்) 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபினயா ஷெட்டி வெள்ளிப்பதக்கமும் (1.81 மீட்டர்), தமிழகத்தின் கிரேஸ் மெர்லி (1.81 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். கிரேஸ் மெர்லி கன்னியாகுமாரியைச் சேர்ந்தவர்.

    20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் உத்தரபிரதேச வீராங்கனை முனிதா பிரஜபதி போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் இலக்கை அடைய 1 மணி 38.20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

    பெண்களுக்கான கபடியின் அரைஇறுதியில் தமிழக அணி 25-45 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது.

    பதக்கப்பட்டியலில் மேற்கு வங்காளம் 5 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என்று 11 பதக்கத்துடன் முதலிடத்திலும், அரியானா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 2 தங்கம், 4 வெண்கலம் வென்று 6 பதக்கத்துடன் 8-வது இடம் வகிக்கிறது.

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

    சில்கெட்:

    7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-தாய்லாந்து, இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 113 ரன் இலக்கை வங்காளதேச அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து 'திரில்' வெற்றியை ருசித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, தாய்லாந்தை சந்திக்கிறது. நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தகுதி சுற்றில் சாம்பியன் பட்டத்தை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியில் களம் காணுகிறது. நருமோல் சைவாய் தலைமையிலான தாய்லாந்து அணி, வலுவாக உள்ள வங்காளதேசத்தின் சவாலை சமாளிப்பது கடினம் தான். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    இதில் 5 தடவையும் வங்காளதேச அணியே வென்று இருக்கிறது. பகல் 1 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி சூப்பர் பார்மில் இருக்கிறது.

    இலங்கை அணியை பொறுத்தமட்டில் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவையே அதிகம் நம்பி இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியின் கையே ஓங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்தியா 16 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    • பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    • கோலியும் பாபரும் இச்சாதனையை 81-வது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர்.

    லாகூர்:

    இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான 6-வது டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

    பாபர் அசாம் 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் . தொடர்ந்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பில் சால்ட் அதிரடியால் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.

    விராட் கோலியும் பாபரும் இந்த சாதனையை தங்களின் 81-வது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்டில் (101 இன்னிங்ஸ்) ரோகித் சர்மா (108 இன்னிங்ஸ்) உள்ளனர்.

    • வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது.
    • இந்திய ஜோடி மலேசியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

    ஹனோய்:

    வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுயில் மலேசியாவின் செய் யீ ஷி - சான் பெங் ஜோடியை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 170 ரன்களை எடுத்து வென்றது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 6வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் வில்லி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 41 பந்தில் 88 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்த தொடரில் தற்போது 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனிலை பெற்றுள்ளன.

    • பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
    • சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் எதிர்பார்த்தபடியே தங்கம் வென்று அசத்தினார். பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.

    இந்த பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும் (187 கிலோ), ஒடிசாவின் ஸ்னேகா சோரன் வெண்கலப் பதக்கமும் (169 கிலோ) வென்றனர்.

    சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது தனது இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மேலும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டதாகவும் மீராபாய் சானு கூறினார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பிரதிநிதியாக பங்கேற்றது பெருமையான தருணம். தொடக்க விழாவில் மணிப்பூர் குழுவை வழிநடத்தும்படி என்னைக் கேட்டபோது உற்சாகம் இரட்டிப்பானது என்றும் மீராபாய் சானு கூறினார்.

    • முதல் சுற்றில் 8 அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தும்
    • குரூப் சுற்றில் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

    முதல் சுற்றில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்று ஏ, பி என இரண்டு பிரிவுகளாக தலா ஆறு அணிகளுடன் பிரிக்கப்பட்டு விளையாடப்படும். இரண்டு சுற்றிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது.

    போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர் வழங்கப்படும். சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும். தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் ரூ. 45,67,17,240) ஆகும்.

    • பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    2-வது போட்டி நாளை மறுநாள் கவுகாத்தியில் நடக்கிறது. இந்த நிலையில் காயம் காரணமாக விலகியுள்ள பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். இதனை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தார்.

    முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. அதன்பின் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் தொடரில் விளையாடினார்.

    இந்த நிலையில் முதுகுவலி காயம் காரணமாக பும்ரா, 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்ததில் முதுகில் உள்ள எலும்பில் அழுத்தத்தினால் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக அவர் உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு இல்லை. தற்போது அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

    பும்ரா விலகுவதால் அவருக்கு பதில் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, தீபக் சாகர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம் பெற்றனர்.

    தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையாததால் அத் தொடரில் இருந்து விலகினார்.

    தென் ஆப்பிரிக்கா தொடரில் தீபக் சாகர் விளையாடி வருகிறார். இவர்களில் ஒருவர் பும்ராவுக்கு பதில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இருவர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் தீபக் சாகருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் உலக கோப்பை இந்திய அணியில் முகமது ஷமியை தேர்வு செய்யாததற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உம்ரான் மாலிக் 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசக் கூடியவர்.
    • ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி 14 போட்டியில் 22 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும், தங்களுடைய அணி வீரர்களை அறிவித்த நிலையில், தொடருக்கு தயாராகி வருகின்றன.

    இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம் பிடித்திருந்தார். அவருடன் புவனேஸ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    பும்ரா முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியபோது, மீண்டும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆகவே, பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவருக்குப் பதிலாக முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம். இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி தேர்வாளரான வெங்சர்க்கார், நான் தேர்வாளராக இருந்திருந்தால், இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ''உம்ரான் மாலிக் விஷயத்தில் மாற்றி யோசிக்க ஒன்றுமில்லை. நான் அவரை அணியில் தேர்வு செய்திருப்பேன். ஏனென்றால், அவரது வேகம். அவர் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். நீங்கள் அவரை தற்போது தேர்வு செய்ய வேண்டும். அவர் 130 கி.மீட்டர் வேக பந்து வீச்சாளராக இருந்தால், தேர்வு செய்ய இயலாது. துபாய் போன்ற இடங்களில் ஆடுகளம் பிளாட்டாக புற்கள் இன்றி காணப்படும். அங்கு பவுன்ஸ் இருக்காது. ஆகவே, அணிக்கு அதிவேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. நீங்கள் மிதவேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால், தோற்கடிக்கப்படுவீர்கள். வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை வீழ்த்த, அதிவேக பந்து வீசாளர்கள் தேவை.

    அதேபோல் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அய்யர் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். அவர் சேர்க்கப்படவில்லை. கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசியுள்ளார்'' என்றார்.

    உம்ரான் மாலிக் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்ததன் விளைவாக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

    • இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    • மற்ற இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர்.

    வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

    மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

    • ராஸ் டெய்லர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
    • விராட் கோலி வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்

    மும்பை:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். இவர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில், பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் விளையாடிய நேரத்தை மிகவும் ரசித்தேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளார். அவர் சிறந்த பார்மில் இருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.

    இந்த உலக கோப்பையில் இன்னும் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நினைக்கிறேன். போட்டி ஆஸ்திரேலியாவில் நடப்பதாலும் நடப்பு சாம்பியனாக இருப்பதாலும் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாடிய விதம், உலக கோப்பை போட்டிக்கு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும்.

    நியூசிலாந்து அரை இறுதிக்கு வருவது போல் தெரிகிறது. கடந்த சில ஐ.சி.சி. போட்டிகளில் கடைசி 4 இடத்துக்குள் நியூசிலாந்து அணி வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் ராஸ் டெய்லர் எழுதிய சுய சரிதை புத்தகம் வெளியானது. அதில் நியூசிலாந்து அணியில் சில வீரர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டனர் என்றும் தன்னை ஐ.பி.எல். அணி உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நசீம் ஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் மட்டும் விளையாடினார். இதற்கிடையே நசீம் ஷா நிமோனியா காய்ச்சலால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நசீம் ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×