search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்-  சாதனை படைத்தார் விராட் கோலி
    X

    விராட் கோலி 

    டி20 போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்- சாதனை படைத்தார் விராட் கோலி

    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ரோகித் சர்மா.
    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலுக்கு முதலிடம்.

    கவுகாத்தி:

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் விளையாடிய விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் அவர் 19 ரன்களை எடுத்த போது 11,000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    354 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 11,030 ரன்களை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ரோகித் சர்மா (10,587 ரன்கள்), அடுத்தபடியாக ஷிகர் தவான் (9,235 ரன்கள் ) ரன்கள் உள்ளார்.

    டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். 463 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 14,562 ரன்கள் எடுத்துள்ளார்.

    அடுத்ததாக அதே அணியை சேர்ந்த கீரன் பொல்லார்ட் 614 போட்டிகளில் 11,915 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 481 போட்டிகளில் விளையாடி 11,902 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    Next Story
    ×