என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
புதுடெல்லி:
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அவர் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வருகிற 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.
இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு பொதுவாக ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
- இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.
துரின்:
தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 'கிரீன் பிரிவில் 2-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.
'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில் 'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு வீரருக்கான இடத்திற்கு அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையே போட்டி நிலவுகிறது.
- டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் ரூ.9756-ல் இருந்து ரூ.14,036-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அகமதாபாத்தில் இருந்து திரும்புவதற்கான விமான கட்டணம் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அகமதாபாத்:
இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (19-ந்தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சுமார் 1 லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
இந்த நிலையில் இறுதிப் போட்டி காரணமாக அகமதாபாத்தில் ஓட்டல் அறைகளின் ஒருநாள் வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. போட்டி நடைபெறும் அன்று பிரபல நட்சத்திர ஓட்டலில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஓட்டலின் சாதாரண அறையின் ஒருநாள் வாடகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும். அந்த அறைகள் வாடகை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தர அறைகள், வாடகை சாதாரணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். அந்த அறை களின் வாடகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.
அதேபோன்று மற்றொரு பிரபல நட்சத்திர ஓட்டலிலும் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் மைதானத்தை சுற்றி உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. அதேபோல் அகமதாபாத்துக்கான விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் ரூ.9756-ல் இருந்து ரூ.14,036-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு ரூ.5515-ல் இருந்து ரூ.8099-ஆகவும் கோவாவில் இருந்து ரூ.7188-ல் இருந்து ரூ.11,933-ஆகவும் கொல்கத்தாவில் இருந்து ரூ.14,175-ல் இருந்து ரூ.20,068 ஆகவும் விமான கட்டணங்கள் உயர்ந்து உள்ளது.
அகமதாபாத்தில் இருந்து திரும்புவதற்கான விமான கட்டணம் 400 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு முறை கூட எட்டியதில்லை.
- அந்த அணி அரைஇறுதியோடு நடையை கட்டுவது இது 5-வது முறையாகும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 19-ந் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு முறை கூட எட்டியதில்லை. அந்த பரிதாபம் இந்த முறையும் தொடருகிறது. அந்த அணி அரைஇறுதியோடு நடையை கட்டுவது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 1992-ம் ஆண்டில் இங்கிலாந்திடமும், 2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடமும், 2015-ம் ஆண்டில் நியூசிலாந்திடமும் அரைஇறுதியில் தோற்று இருந்தது.

1999-ம் ஆண்டு அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் டையில் முடிந்தாலும் சூப்பர்6 சுற்று ரன்ரேட்டில் பின்தங்கியதன் அடிப்படையில் தென்ஆப்பிரிக்கா வெளியேற்றப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.

- இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள்.
- நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும்.
கொல்கத்தா:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போடடிக்கு தகுதி பெற்றது.
நேற்று கொல்கத்தாவில் நடந்த 2-வது அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 212 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-
இந்த போட்டியில் வெளியே அமர்ந்திருந்ததை விட மைதானத்தில் பேட்டிங் செய்தது எளிதாக இருந்தது என நினைக்கிறேன். தொடக்கத்தில் 2 மணி நேரம் கடினமாக இருந்தது. ஆனால் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கை நோக்கி சிறப்பாக சென்றோம். ஆடுகளம் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்து இருந்தோம்.
ஆனால் கொஞ்சம் மேக மூட்டம் இருந்ததால் முதலில் பந்து வீசுவதில் ஏமாற்றம் அடையவில்லை. எங்கள் பீல்டிங்கை பற்றி அதிகம் பேசினோம். இந்த தொடரில் ஆரம்பத்தில் எங்களது பீல்டிங் தரமானதாக இல்லை. ஆனால் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்தோம். குறிப்பாக 37 வயதான டேவிட் வார்னர் சிறப்பாக செயல்பட்டார்.
டிராவிஸ் ஹெட், மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். ஜாஸ் இங்கிலீஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். இரண்டு தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கட்டுப்பாட்டுடன் விளையாடினார்.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். எங்களில் சிலர் இதற்கு முன்பு இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறோம். சில வீரர்கள் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள். நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும். ஆனால் அதை சந்தித்து தான் ஆக வேண்டும். அது சவாலாக இருக்கும்.
2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் நான் விளையாடியது என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஒன்று. இந்தியாவில் மற்றொரு இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஒரு குழுவாக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுடன் மோதுவதில் காத்திருக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது.
- குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முன்னேற முடியாத, தென் ஆப்பிரிக்காவின் சோகம் தற்போதும் தொடருகிறது. தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது:-
தோல்வியை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள். ஆட்டத்தின் பெரும் பகுதியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பான தொடக்கத்தை நாங்கள் பெறாததால் தோல்வியை சந்தித்தோம்.
மில்லர் கிளாசன் சிறப்பாக விளையாடினார். ஆனல் கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. வெற்றிக்காக நாங்கள் கடுமையாக போராடினோம். குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் சகாப்தமாக இருந்து வெளியேறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்.
- சில குறும்புக்கார ரசிகர்கள் "விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்" என்றெல்லாம் "கமெண்ட்" செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது.
அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர். ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, 'இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே பின்னர் அமைதியாகி போனார் என்பதும், பின்னர் அவர் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
- 2003-ல் கங்குலி தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
- தற்போது 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா நேற்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, நாக்அவுட்டில் சொதப்பும் நிகழ்வு கடந்த காலங்களில் நடைபெற்றது. 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்திருந்தது. தற்போது அந்த தடையை தகர்த்துள்ளது.
இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் இதற்கு முன்னதாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 2011-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 2003-ல் மட்டுமே ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு தோல்வியடைந்தது. அதன்பின் தற்போது 20 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.
தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2003 கதைக்களம் தற்போது உருவாகியுள்ளது. இதில் இந்தியா கிளைமாக்ஸை மாற்றி அமைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2003-ல் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. ரிக்கி பாண்டிங் ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் விளாசினார். பின்னர் விளையாடிய இந்தியா 39.2 ஓவரில் 234 ரன்னில் சுருண்டு கோப்பையை தவறவிட்டது. சேவாக் 82 ரன்களும், டிராவிட் 47 ரன்களும் சேர்த்தனர்.
- அரையிறுதியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
- இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றும் வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன. நாளைமறுதினம் (19-ந்தேதி) குஜராத் மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியில் 4-வது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி லீக் ஆட்டத்தில் சதம், அரையிறுதியில் சதம் என அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நண்பர்களுடன் சென்று நேரில் பார்த்து ரசித்தேன். அப்போது என் நண்பர்களிடம் நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறினேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறேன். இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பெருமை'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.
கொல்கத்தா:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 47 ரன்னில் அவுட்டானார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 30 ரன்னும், வார்னர் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
கடைசியில் போராடிய இங்கிலிஸ் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்கொள்கிறது.
- திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
- அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம். உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை டேவிட் பெக்காம் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது, ரோகித் சர்மா ஜெர்சியை டேவிட் பெக்காமும், டேவிட் பெக்காமின் ஜெர்சியை ரோகித் சர்மாவும் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.






