என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 47 ரன்னில் அவுட்டானார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 30 ரன்னும், வார்னர் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கடைசியில் போராடிய இங்கிலிஸ் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்கொள்கிறது.

    • திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
    • அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

    இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம். உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

    இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை டேவிட் பெக்காம் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது, ரோகித் சர்மா ஜெர்சியை டேவிட் பெக்காமும், டேவிட் பெக்காமின் ஜெர்சியை ரோகித் சர்மாவும் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • 11.5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறியது.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கொல்கத்தா:

    இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கினர். பவுமா 0, டிகாக் 3, மார்க்ரம் 10, ராஸ்ஸி வான் டெர் டுசென் 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

    இதனால் 11.5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறியது. இதனையடுத்து கிளாசன் - மில்லர் ஜோசி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை ஹெட் பிரித்தார். கிளாசன் 47 ரன்னில் இருந்த போது ஹேட் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்த வந்த மார்கோ யான்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட் போனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மில்லர் அரைசதம் விளாசி அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் சதம் அடித்து 101 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
    • 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 19-ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

    இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் யார் மோதுவார்கள் என்பதை தேர்வு செய்வதற்கான 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

    இந்த நிலையில், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. 

    • முதல் அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
    • 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

    இந்நிலையில் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாடும்.

    இந்நிலையில் இன்று மழை குறுக்கீட்டால் நாளை ரிசர்வ் டே அறிவிக்கப்படும். ஒருவேளை நாளை முழுவதும் மழை பெய்தால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

    ஐசிசி விதிப்படி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    • சிராஜின் தந்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.
    • அந்த நேரத்தில் சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதல் அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது அரையிறுதியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

    முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் 4-வது முறையாக இந்தியா இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

    இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜின் இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் தனது தந்தையிடம் இருந்து கால் வருமா என எதிர்ப்பார்க்கிறேன் என பதிவிட்டிருந்தார். மிஸ் யூ எனவும் அதில் தெரிவித்தார். இந்த ஸ்டோரி கண்கலங்க வைப்பதாக இருந்தது.

    சிராஜின் தந்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அந்த நேரத்தில் சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



     


    • மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது.

    கொல்கத்தா:

    இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கினர். பவுமா முதல் ஓவரிலேயே 0 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென்- டிகாக் பொறுமையாக விளையாடினர்.

    14 பந்துகள் சந்தித்த டிகாக் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 10 ரன்னிலும் பொறுமையாக விளையாடிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    11.5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது. மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது.
    • ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது உள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுலகரின் சதங்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர். இதனால் 30 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் சுவிங் ஆவதில்லை. மேலும் பவர்பிளேயில் புதிய விதிமுறை பின்பற்றபடுகிறது. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை அப்போது இருந்திருந்தால் அந்த காலத்தில் சச்சினின் ரன்களும், சதங்களும் இருமடங்காக உயர்ந்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்பது ரோகித் சர்மா எண்ணம்.
    • சதம், தனிப்பட்ட ஸ்கோர் குறித்து கவலைப்படாமல் அணியின் நலனுக்காக விளையாடுவதாக பாராட்டு.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அபாரமாக விளையாடி வருகிறது. 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, நேற்று அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் முதலில் இறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை வெகுவாக உயர்த்தி வருகிறார். அதன்பின் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் போதுமான அளவிற்கு ஸ்கோரை உயர்த்துகின்றனர்.

    இந்த பார்முலா இந்தியாவுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. இந்தியாவின் அந்த அணுகுமுறையை கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ரியல் ஹீரோ என புகழராம் சூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில் "நாளைய (இன்று) ஹெட்லைனில் விராட் கோலிதான் இருப்பார். அதேபோல் ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சமியும் இடம் பிடிப்பார்கள். இந்திய அணியின் காலாசாரத்தை மாற்றிய ரோகித் சர்மாதான் உண்மையான ஹீரோ.

    இன்றைய (நேற்று) போட்டியில் ரியல் ஹீரோ ரோகித் சர்மாதான் என நினைக்கிறேன். குரூப் ஸ்டேஜ் போட்டிகள் வேறு. நாக்அவுட் போட்டி என்பது வேறு. பயம் இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறையை இந்திய அணி வீரர்களுக்கு மிகவும் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார்." என்றார்.

    • பல தலைமுறை ரசிகர்களாலும் சமியின் பந்து வீச்சானது கொண்டாடப்படும்.
    • அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் நேற்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை படைத்த விராட்கோலி, முகமது சமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் விராட்கோலி 50-வது சதத்தை மட்டும் அடிக்கவில்லை. சிறந்த வீரருக்கான வலிமை மற்றும் விடா முயற்சியை எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கும் புதிய மைல்கல்லாக இந்த சாதனை அமைந்துள்ளது. நான் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சமிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பல தலைமுறை ரசிகர்களாலும் அவரது பந்து வீச்சானது கொண்டாடப்படும். அற்புதமான பேட்டிங் பந்து வீச்சுகளில் நமது அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    • 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
    • அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில் டோனியின் ரன் அவுட்டுக்கு முகமது சமி பழி திர்த்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என இன்று வரை ஏங்காத ரசிகர்கள் இல்லை.

    அந்த நிலையில் நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டோனியின் ஜெர்சி நம்பர் 7 என்றும் முகமது எடுத்த விக்கெட்டும் 7 என்றும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 

    • ரோகித் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார்.
    • ரோகித்தை கிண்டல் செய்தவர்களை அரையிறுதி போட்டியின் நேரலையில் ஹர்ஷா போக்லே பதிலடி கொடுத்தார்.

    மும்பை:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. நாக் அடுட் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

    ஆனால் தொடக்க முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. ரோகித் அதிரடியான தொடக்கம் அளித்தார். அவர் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோகித் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

    ரோகித்தை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.

    இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

    ×