என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் 6 மாதமாக சம்பளம் வழங்காததால் போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் உடல் உறுப்பை விற்பனை செய்ய அரசிடம் அனுமதி கோரியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வரும் தமிழ்ச்செல்வம் என்பவர் தனது உடல் உறுப்பை விற்பதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்காததால், குடும்ப வறுமையில் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தொழிற் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினர். நிலுவை சம்பளம் குறித்து முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தாங்கள் பேச இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மோகன பிரசாத் (வயது 21). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார். அண்ணசாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், மோகன பிரசாத் ஒட்டிவந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோகனபிரசாத் மோட்டார் சைக்கிளில் இருந்த தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மோகனபிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
3-வது மனைவியும் பிரிந்து சென்றதால் ஜிப்மர் குடியிருப்பில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). தஞ்சையை பூர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். அவர்கள் சிலம்பரசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒரு கற்பகம் என்பவரை 3-வதாக சிலம்பரசன் திருமணம் செய்துகொண்டு, ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வந்தார். கற்பகத்துடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்ட கற்பகம் தனது சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
3-வது மனைவியும் பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில் ‘தனது சாவுக்கு யாரும் காரணமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் தங்கள் நலம் பொருட்டு வீட்டிலேயே சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக கொண்டாடி விநாயகரின் அருளை பெற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படும் கணேஷ் சதுர்த்தி நாடு முழுவதும் பாரம்பரிய மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிஷ்டத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். ஒவ்வொரு புதிய முயற்சியின் தொடக்கத்திலும் பாரம்பரியமாக முதல் கடவுளாக அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.
இந்த கொண்டாட்டம் ஆண்டு முழுவதும் பொது நிகழ்வுகளில் பெரிய அளவிலான சிலைகளுடன் சமூக நிகழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது. நாம் தற்போது கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொண்டுள்ளோம். ஆகவே மக்கள் தங்கள் நலம் பொருட்டு வீட்டிலேயே சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக கொண்டாடி விநாயகரின் அருளை பெறுமாரும், பொதுக்கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,112 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 29,75,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 945 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55794 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,58,947-ல் இருந்து 22,22,578 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,112 ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் கார்கள் திருட்டு வழக்கில் திருச்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மூலக்குளம்:
புதுச்சேரி பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்தவர் டாக்டர் நிர்மல்குமார். இவரது சொகுசு காரை கடந்த 11.3.2020 அன்று இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை தேடி வந்தனர்.
தொடர்ந்து தமிழக பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நிர்மல்குமாரின் சொகுசு காரை திருடிச்சென்றது திருச்சியை சேர்ந்த 2 நபர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் உத்தரவின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் திருச்சிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ராஜாமணி என்கிற பெல்மணி (வயது 44), ஜாபர் உசைன் (24) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நிர்மல்குமாரின் காரை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சென்னையில் இதேபோல் மேலும் 4 சொகுசு கார்களை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் இருந்து 5 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் புதுவைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்கள் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் அவர்கள் சென்னையில் திருடிய 4 கார்கள் தொடர்பாக சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,594 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 29,05,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,96,665ல் இருந்து 21,58,947 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,92,028 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,594ஆக உயர்ந்துள்ளது.

வில்லியனூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்னர் அவர் தனது மகன் குமரேசன் வீட்டில் வசித்து வந்தார். மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து வந்த குணசேகரன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர் அருகே கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள உறுவையாறு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் என்கிற வடிவேலு (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்டரிங் வேலை செய்து வந்தார்.
அந்த வீட்டின் மேலே உயர்அழுத்த மின்கம்பி சென்றுள்ளது. அப்போது உரிய பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்த வெற்றிவேல், எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே உள்ள படகு கட்டும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே உள்ள படகு கட்டும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு தயாரிப்பு பொருட்கள், உபகரணங்கள் எரிந்து சாம்பலாகின.
இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நல்லவாடு கிராமத்தில் உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாகூர்:
மணவெளி தொகுதி தவளக்குப்பம் - நல்லவாடு இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், நல்லவாடு உப்பனாற்றின் குறுக்கே உள்ள சிறிய பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மக்களின் இந்த கோரிக்கையை தொகுதி எம்.எல்.ஏ.வான அனந்தராமன் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து, நபார்டு வங்கி மற்றும் புதுச்சேரி அரசின் பங்களிப்பில் ரூ.3 கோடி செலவில் தவளக்குப்பம் - நல்லவாடு சாலையை சீரமைத்து, உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பாலத்தை திறந்துவைத்தார். விழாவின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தரை மட்ட பாலம் தற்போது உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் பாதிப்பு இன்றி இந்த வழியாக செல்ல முடியும். மேலும், இங்கு உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் உள்ளது போன்ற படகு குழாம் அமைத்து சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள் மற்றும் சாலை) செயற்பொறியாளர் சாய் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் பூங்காவனம், மணவெளி தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுவையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
புதுச்சேரி:
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுவை மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுஇடங்களிலும், கோவில்களின் முன்பும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிறிய அளவிலான சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிலைகளை செய்யும் கைவினை கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் 2 அடி அளவுக்கு குறைவான உயரம் உள்ள சிலைகளை செய்து, வண்ணம் தீட்டி வருகின்றனர்.
புதுவை கொசக்கடைத்தெரு, முருங்கப்பாக்கம், வில்லியனூர், கோரிமேடு அடுத்த பட்டானூர் ஆகிய பகுதிகளில் கைவினை கலைஞர்கள் களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சிலைகளை செய்கின்றனர்.
அதன் பின்னர் சிலைகள் வண்ணம் பூசி நகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விருப்பமான சிலைகளை தேர்வு செய்து, ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.