என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் படகு கட்டும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து
    X
    புதுச்சேரியில் படகு கட்டும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து

    புதுச்சேரியில் படகு கட்டும் தொழிற்சாலையில் தீ விபத்து

    புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே உள்ள படகு கட்டும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே உள்ள படகு கட்டும் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு தயாரிப்பு பொருட்கள், உபகரணங்கள் எரிந்து சாம்பலாகின.

    இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


    Next Story
    ×