என் மலர்
புதுச்சேரி
புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 554 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 8 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாநிலத்தில் சில இடங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,388 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்தன. அதில் 554 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
அதாவது வாழைக்குளத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் ஜிப்மரிலும், பேட்டையன்சத்திரத்தை சேர்ந்த 55 வயது பெண், கடலூர் ரோட்டை சேர்ந்த 84 வயது மூதாட்டி, முத்தியால்பேட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த 48 வயது ஆண், தர்மாபுரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்த 56 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஏனாமில் 62 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
புதுவை பிராந்தியத்தில் 116 பேரும், காரைக்காலில் 7 பேரும், ஏனாமில் 14 பேரும் என ஒட்டுமொத்தமாக 137 பேர் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 59 ஆயிரத்து 757 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 48 ஆயிரத்து 902 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 9 ஆயிரத்து 292 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 521 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
அதிலும் 1,796 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,725 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்து 634 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவது 60.63 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும் உள்ளது.
இந்த மாதம் நாள்தோறும் சராசரியாக 250 பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பாதிப்பு 2 மடங்காக உள்ளது. எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பதையும், ஊர்வலம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மக்கள் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தவும் அவர் கேட்டு கொண்டார்.
புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 370 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக 7 பேர் வரை இறந்தது புதிய உச்சமாக இருந்து வந்தது.
அதாவது, மாநிலத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 1,106 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 370 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே இருந்ததைவிட ஒரேநாளில் அதிகபட்சமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சுத்துக்கேணியை சேர்ந்த 48 வயது ஆண் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், முல்லா வீதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டையை சேர்ந்த 53 வயது ஆண், உறுவையாறு ஜெயராம் நகரை சேர்ந்த 39 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலும், திலாசுப்பேட்டை மதுரம் நகரை சேர்ந்த 60 வயது முதியவர், வைசியாள் வீதியை சேர்ந்த 79 வயது முதியவர், மூலக்குளம் மோதிலால் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஜிப்மரிலும், காலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உயிரிழந்துள்ளனர். சாவு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் 104 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் 6 பேரும், ஏனாமில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் 57 ஆயிரத்து 25 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 47 ஆயிரத்து 202 பேருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. இன்னும் 709 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
ஓட்டுமொத்தமாக 8 ஆயிரத்து 396 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,621 பேர் ஆஸ்பத்திரியிலும், 1,743 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் 58.47 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரியில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,762 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 27,67,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1092 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,762 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,312 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவருக்கு பதில் உடலை மாற்றிக் கொடுத்த குழப்பத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி (வயது 44). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குணவேலியை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்தன. பரிசோதனை முடிவுகள் வரும் வரை குணவேலியின் உடல் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைத்தது. இதில் குணவேலிக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குணவேலியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் உடலை தருவதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்தனர்.இதற்காக பிணக்கிடங்குக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பெண்களின் உடல்களை பார்த்தபோது குணவேலியின் உடல் இல்லாதது தெரியவந்தது. இதனால் குணவேலியின் உடல் எது? என்பது குறித்து அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர். அவர்களும் அங்கு வந்து பார்த்த போது குணவேலியின் உடல் காணாதது தெரியவந்தது. பிணவறையில் இருந்த குணவேலியின் உடலை காணாமல் அவரது உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த வேறு ஒரு பெண்ணின் பிணத்துக்குப் பதிலாக குணவேலியின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் பிளாஸ்டிக் பையில் சுற்றி மாற்றி கொடுத்தது தெரியவந்தது. பொதுவாக கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பது இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியில் தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் பையில் உடலை சுற்றி எடுத்துச் சென்று அரசு செலவிலேயே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல் தொற்று பாதித்து உயிரிழந்தவரின் உடலுக்குப் பதிலாக குணவேலியின் உடலை மாற்றி கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து குணவேலியின் உறவினர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து துணை கலெக்டர் சுதாகர், போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்தனர். அப்போது தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதனின் மனைவி ஆனந்தாயி என்கிற சரோஜா(வயது 76) என்பவரை கொரோனா பாதித்த நிலையில் கடந்த 6-ந் தேதி சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து கடந்த 13-ந் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் திடீரென கடந்த 15-ந் தேதி இறந்து விட்டார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆனந்தாயியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்து சவக்கிடங்கில் வைத்தனர். அவரது இறுதிச்சடங்குக்கு நடவடிக்கை எடுத்த நிலையில் அப்போது ஆனந்தாயியின் உடலுக்கு பதிலாக குணவேலியின் உடலை அவரது உறவினர்கள் மாற்றி அடையாளம் காட்டி இருப்பது தற்போது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் குணவேலியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் நடந்த இந்த குழப்பம் குறித்து தெரிவித்து குணவேலியின் உறவினர்களிடம் அதிகாரிகள் சமரசம் பேசினர். இருந்தாலும் அவர்கள் மிகுந்த வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போன பெண்ணின் உடல் கொரோனா தொற்று காரணமாக மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம் கதிர்காமம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் இன்று மேலும் 370 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,396 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 876 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 19,77,780 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,73,166 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 73.2 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 370 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,396 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் சிவப்பு நிற ரேசன்கார்டுகளுக்கு அரிசி மற்றும் கொண்டைக்கடலை நாளை(புதன்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் பணிக்குச் செல்ல முடியவில்லை. எனவே மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ அரிசி ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாத காலத்திற்கு ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதேபோல் மேற்கூறிய கால கட்டத்திற்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்க ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 9,224 மெட்ரிக் டன் அரிசியும், 494 மெட்ரிக் டன் துவரம் பருப்பும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 5 மாத காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசியும், குடும்ப அட்டைகளுக்கு மாதம் 1 கிலோ கொண்டைக்கடலையும் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக 15,859.75 மெட்ரிக் டன் அரிசியும், 878.235 மெட்ரிக் டன் கொண்டைக்கடலையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சிவப்பு நிற ரேசன்கார்டுகளுக்கு ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதத்திற்கான அரிசியும், கொண்டைக்கடலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்கமாக நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம், திருபுவனை மற்றும் மணவெளி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவப்பு நிற ரேசன்கார்டுகளுக்கு நாளை(புதன்கிழமை) முதல் அரிசி, கொண்டைக்கடலை வினியோகம் செய்யப்படும். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்ட அதே பள்ளி மற்றும் இதர மையங்களில் இவை வினியோகிக்கப்படும். பயனாளிகள் அங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரோடியர் மில் மூடப்படுவதற்கு கவர்னர் கிரண்பேடியே காரணம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல் இறப்புவிகிதத்தையும் குறைக்கவேண்டும். அதிகப்படியாக தொற்று பரிசோதனைகளையும் செய்து வருகிறோம். இப்போது காரைக்காலில் உமிழ்நீர் பரிசோதனை மையத்தை அமைத்துள்ளோம்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் மிகப்பெரிய கூட்டமாக கூடியுள்ளனர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. காவல்துறையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அதை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. புதுவையில் திருக்கனூர், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது.
புதுவையில் திட்டமிட்டபடி இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கின்போது மருந்தகங்கள், பால் பூத்துகள் இயங்கும். வீடுகளுக்கு கியாஸ் சப்ளை செய்யலாம். பெட்ரோல் பங்க், காய்கறி, மளிகை கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
இப்போது செவ்வாய்க்கிழமை பரீட்சார்த்தமாக முழு ஊரடங்கை அமல்படுத்துகிறோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், மருத்துவர்கள், அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்.
ரோடியர் மில் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. விஜயன் கமிட்டி பரிந்துரையின்பேரில் 3-வது யூனிட்டை நடத்துவது, மற்ற பிரிவுகளை சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்து அதன் பரிந்துரையின்படி செயல்படுவது என்று முடிவு செய்தோம். இதனையே முதல் கோரிக்கையாக வைத்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம்.
மில்லை இயக்குவது தொடர்பான கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் மில்லை மூடவேண்டும் என்கிறார். இதுதொடர்பான அமைச்சரவையின் முடிவினை எதிர்த்து மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார். நாங்கள் மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கவேண்டும் என்றோம். தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை பட்டானூரில் உள்ள மில்லுக்கு சொந்தமான இடத்தை விற்று கொடுக்க முடிவு செய்தோம். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.
ஆனால் கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக முடிவு செய்து மில்லை மூட உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ரோடியர் மில் மூடப்பட்ட நிலையிலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.24 கோடி நிதி ஒதுக்கி தந்தோம். இந்த ஆண்டுகூட ரூ.14 கோடி ஒதுக்கி உள்ளோம். கடந்த ஆண்டு அந்த நிதியை தரவிடாமல் கவர்னர் தடுத்து நிறுத்தினார். ரோடியர் மில் மூடப்படுவதற்கு முழு காரணமும் கவர்னர் கிரண்பேடிதான்.
கவர்னரின் அதிகார துஷ்பிரயோகத்தை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி மில்லை தொடர்ந்து நடத்த அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மத்திய ஜவுளித்துறை மந்திரியை சந்தித்துப் பேசினோம். அவர்களும் ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்வதாக கூறினார்கள். எங்கள் அரசு தொழிலாளின் பக்கம் நிற்கிறது. ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை விற்க அனுமதிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். ரோடியர் மில் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி புதுவையில் நாள்தோறும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவும் வேகம் அதிகரித்ததால் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதாவது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவது, கடைகள் திறப்பு நேரத்தை காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் செவ்வாய்க் கிழமை முழு ஊரடங்கிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் புதுவை மாநிலத்திலும் அதே கிழமையில் அமல்படுத்துவது தான் உகந்தது. ஏனென்றால், வெவ்வேறு கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்துவதால் அங்கிருப்பவர்கள் இங்கும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்வதை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் முகூர்த்தம் மற்றும் புதுவை விடுதலைநாள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த வாரம் செவ்வாய்க்கிழமை இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, அதன்பின் ஊரடங்கு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
ஏற்கனவே அறிவித்தபடி புதுவை மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் இந்த ஊரடங்கு தொடங்கிவிட்டது. நாளை (புதன்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஊரடங்கின்போது பால் பூத்துகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்து இருக்கும். அதேபோல் கியாஸ் வினியோகம் செய்யலாம். பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடி இருக்கும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது. ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று மாலையில் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை வாங்கி தங்களது வீடுகளில் இருப்பு வைத்துக் கொண்டனர்.

புதுவை முதலியார்பேட்டையில் மயிலாடுதுறையை சேர்ந்த மெக்கானிக்கை அடித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டனர். இதுதொடர்பாக மனைவி மற்றும் வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
மயிலாடுதுறையை சேர்ந்தவர் தனபாலன். இவரது மகன் கோபிநாத்(வயது 32). மெக்கானிக். மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். அவர் புதுவை முதலியார்பேட்டை சுதானாநகர் ராஜாஜி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி கவுசல்யா (25). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் கோபிநாத்தின் உறவினர் மகன் கார்த்திக்(26) என்பவரும் தங்கி இருந்தார்.
நேற்று பிற்பகலில் கோபிநாத்தின் வீட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. அப்போது அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு திடுக்கிட்டு வெளியே ஓடிவந்தார்.
உடனடியாக இது குறித்து அவர் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். தூக்கில் தொங்கிய கோபிநாத்தின் உடலை கீழே இறக்கி பார்த்ததில் அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இதன்பின் பிரேத பரிசோதனைக்காக உடலை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோபிநாத்தின் மனைவி கவுசல்யா, குழந்தை, அவரது உறவினர் கார்த்திக் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டது தெரியவந்தது. கோபிநாத்தை அடித்து கொலை செய்து விட்டு அதனை மறைக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாட உடலை தூக்கில் தொங்க விட்டு இருப்பது தெரியவந்தது.
அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் கோபிநாத் தகராறு செய்து வந்துள்ளார். இதுபோல் நேற்றும் தகராறு செய்து இருக்கலாம் என்றும் அப்போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதவிர கவுசல்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் தகாத உறவு இருந்து வந்தநிலையில் அது தொடர்பான பிரச்சினையில் கோபிநாத்தை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டு இருவரும் தப்பிச் சென்று இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தவளக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் கவுசல்யா, கார்த்திக் ஆகிய 2 பேரும் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து கோபிநாத் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தினசரி எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நிகராக 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்ககளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் வீடுகள் தோறும் சென்று தொற்று பாதித்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் நாளை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கின் போது மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
வில்லியனூரில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர்:
புதுச்சேரி வில்லியனூர் நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வார்டு மணி என்கிற ராமகிருஷ்ணன்(வயது45). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நேற்று இரவு 11.30 மணி அளவில் வில்லியனூர் புறவழிச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென்று வார்டு மணி மீது மோட்டார் சைக்கிளை மோதி தள்ளினர்.
இதில் வார்டு மணி நிலைகுலைந்து கீழே விழுந்தார். நிலைமையை அறிந்து சுதாரிப்பதற்குள் அங்கு பதுங்கி இருந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் வார்டு மணி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் தப்பி விடாமல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வார்டு மணி மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இது பற்றிய தகவல் அறிந்து வில்லியனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வார்டு மணியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வார்டு மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின் பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வார்டு மணியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? ரியல் எஸ்டேட் தொழில்போட்டியில் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.