என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று மேலும் 302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,029 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 26,47,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 941 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,921ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 19,19,843 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,76,900 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.93 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 71.91 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,029 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 4,627 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் மருத்துவ கல்லூரிகள் தானாக முன்வந்து சேவை செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, சில ஊடகங்களில் மருத்துவ சகோதரத்துவத்துக்கு தங்கள் குறைகளை சுதந்திரமாக பகிர்ந்துகொள்ள செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த பதில்கள் மிகவும் மதிப்புமிக்கதாக உள்ளது. உறுதியான ரகசியத்தன்மையுடன் அனைத்து பரிந்துரைகளும், குறைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுக்கும் கோவிட் வார் ரூமுக்கும் அனுப்பட்டு சிக்கல்களை தீர்க்க பின்தொடர்வதால் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது இடைநிலை சிக்கல்களை தீர்க்கும். நம்பிக்கையுடன் தகவல்களை பகிர்வதால் புதுச்சேரியும், அதன் மக்களும் பல துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். தங்கள் கருத்துகளை அல்லது பிரச்சினைகளை பகிர்ந்துகொண்ட அனைவரும் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களின் அடையாளம் வெளியிடப்படாது.
கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தை எதிர்த்து போராட இந்த நம்பிக்கையான செயல்பாடுகள் நமக்கு தேவை. எனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்தவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் இந்த பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்ப்பவர்களாகவும், ஒத்துழைப்புடனும், ஒற்றுமையாகவும் செயல்படுவதன் மூலம் மேலும் சேவை செய்ய முன்வருவதின் மூலமும் ஒன்றுபட வேண்டும்.
அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றின் வளங்களை கொண்ட நர்சிங் மற்றும் துணை மருத்துவ நிறுவனங்களும் ஒன்றிணைந்து தங்கள் சேவைகளை தானாகவே முன்வந்து வழங்கவேண்டும். தாமதமின்றி அனைவரையும் அரசு ஆதரிக்கவேண்டும். இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் ஒரு சிறிய இடத்தில் இவ்வளவு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் வசதிகள் இல்லை. அரசு மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்படும் அனைவருக்கும் சிகிச்சைக்கு பணம் செலுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சிகிச்சைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
குருவிநத்தத்தில் அனுமதியின்றி சாராயக்கடை நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
பாகூரை அடுத்த குருவிநத்தம் ராஜீவ்காந்தி திருமண நிலையம் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாராயக்கடை இயங்கி வந்தது. குத்தகை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த கடையை தற்போது வேறு ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றினார்.
இந்தநிலையில் ராஜீவ்காந்தி திருமண மண்டபம் அருகில் முதலில் இயங்கி வந்த கட்டிடத்தில் சிலர் அனுமதி பெறாமல் கடை நடத்தி சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடினர். அங்கு அனுமதியின்றி சாராயக்கடை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த பூபதி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 53 சாராய பாக்கெட்டுகளும், 1,140 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்காலில் கடற்கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது58) என்பவர், குடும்ப உணவுக்காக, நேற்று முன்தினம் கடற்கரையோரத்தில், வீச்சு வலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கரையை நோக்கி வேகமாக வந்த ராட்சத அலையில் ராஜேந்திரன் சிக்கி மாயமானார். இது குறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் ராஜேந்திரன் உடல், காளிகுப்பம் கடற்கரையோரத்தில் ஒதுங்கியது. இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புவதாகவும், அவர்கள் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி உயர் அதிகாரிகளை கொண்ட பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை வைத்துள்ளார். அதன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
சமீபத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் வார் ரூமுக்கு சென்ற கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் பலர் கவர்னரின் வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறினார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
டாக்டர்கள் தங்களிடம் வரும் அதிக நோயாளிகளை கவனிப்பதால் பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் கேள்விப்படுகிறேன். உங்களுக்கு உதவியாக இருக்க நான் பலமுறை உங்களிடம் கருத்து கேட்கிறேன்.
ஆனால் ஒரு சிலர் மட்டுமே பதில்களை பகிர்கிறார்கள். அவை உடனடியாக செயல்படுத்தப்படுகின்றன. உங்கள் நலனுக்காகத்தான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமானவற்றை நீங்கள் குழுவில் அனுப்ப முடியாவிட்டால் குழுவில் உள்ள தனது எண்ணுக்கு அனுப்புங்கள். அதற்கான 100 சதவீத ரகசியத்தன்மைக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்களது பிரச்சினைகளை அகற்றுவேன் அல்லது நிவர்த்தி செய்வேன். நீங்கள் பாதுகாப்பாக இருக்க நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,732 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்து 489 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,732ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 4,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 1,172 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 106 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை முடிந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,224 ஆக அதிகரித்துள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாகூர் குடியிருப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுவேதன் (வயது 19). இவரும், பாகூர் இருளன்சந்தை பகுதியை சேர்ந்த வினோத்குமாரும் (30) நண்பர்கள் ஆவர். பின்னர் சுவேதன் எதிர்தரப்பை சேர்ந்தவர்களுடன் பழகி வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
வினோத்குமார், கடந்த 10.5.2017 அன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாகூர் ஏரிக்கையில் மது குடித்தார். அப்போது சுவேதனை அங்கு வரவழைத்து அவரையும் மது குடிக்க வைத்தனர். பின்னர் முன்விரோத கோபத்தில் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவரது நண்பர்கள் தாஸ் (20), சர்மா என்கிற சர்மாவாணன் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நீதிபதி தனபால் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில், குற்றவாளி வினோத்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார். தாஸ், சர்மா ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் என்.கே.பெருமாள் ஆஜரானார்.
வினோத்குமார் ஏற்கனவே ஒரு வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது காலாப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு, 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கேரள மாநிலத்தில் தினசரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என அந்த மாநிலத்தின் சுகாதார மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக கேரள மாநிலத்தில்தான் பதிவானது. சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றிய உகான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா பாதித்தது, ஜனவரி 30-ந் தேதி உறுதியானது. தொடர்ந்து 2-வது, 3-வது கொரோனா நோயாளிகளும் கேரள மாநிலத்தில்தான் பதிவு ஆனார்கள். அவர்களும்கூட உகானில் இருந்து திரும்பியவர்கள்தான்.
மே 5-ந் தேதி வரை 500 பேருக்கு அங்கு பாதிப்பு பதிவானது. அதே மாதத்தின் 27-ந் தேதி பாதிப்பு 1,000 என இரு மடங்கானது. ஜூலை 4-ந் தேதி பாதிப்பு 5 ஆயிரம் என சென்றது. 12 நாளில் அந்த எண்ணிக்கை 10 ஆயிரம் என இரட்டிப்பு ஆனது. ஜூலை 28-ந் தேதி இது இரு மடங்கை கடந்து விட்டது. நேற்று 1,564 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் மொத்த பாதிப்பு என்பது 39 ஆயிரத்து 708 ஆக அதிகரித்தது.
ஆரம்பத்தில் கேரள மாநிலம், தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இப்போது அங்கும் தொற்று பரவல் அதிகரித்து வருவது, அந்த மாநில மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கொரோனா படை உருவாக்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 23-ந் தேதி அறிவித்தார்.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு அதிகமான மக்கள் தேவை, அதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்றும் அவர் அப்போது கூறினார்.
நேற்று கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்களை கொரோனா படையில் சேர அழைப்பு விடுத்து அந்த மாநில சுகாதார மந்திரி கே.கே. ஷைலஜா ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கேரளாவில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். தினமும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படலாம்.
கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா படையில் இளைஞர்கள் சேரவேண்டும்.
கேரளாவில் தொற்று பரவல் அதிகரிக்கிறபோது, இறப்புவீதமும் அதிகரிக்கும்.
கொரோனா உறுதி செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறபோது, இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே தொற்று பாதிப்பு அதிகரிப்பதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொற்று பரவல் சங்கிலியை தகர்க்க அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
நமது கொரோனா படை உலகுக்கு முன் மாதிரியாக அமையும். ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தொற்று நோயை எதிர்த்து போராடுகிறார்கள்.
இதில் அதிகளவிலான தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத தன்னார்வலர்கள் இதில் சேர்ந்து தொற்றுநோயை எதிர்த்து போரிட முன் வரவேண்டும்.
நவீன மருத்துவர்கள், ஆயுர்வேத, ஓமியோபதி, பல் மருத்துவர்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் இந்தப் படையில் சேரலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை தேவை என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாம் இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். தற்போது சக்தி, பணம் மற்றும் முன் தடுப்பு என்பது தேவையான ஒன்றாகும். நமது மூத்தோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை இழந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு மோசமான நிலை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால்தான் இதை தவிர்க்கலாம். இதற்கு தலைவர்கள், அமைச்சர்கள் உதாரணமாக இருக்கவேண்டும். அவர்கள் அதிகாரிகளை தங்களது அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து ஆலோசிக்குமாறு அழைக்கக் கூடாது. பல அலுவலகங்கள் மூடிய நிலையில் குளிரூட்டப்பட்டவையாக உள்ளன. இதனால் அதனுள் உள்ள காற்றே திரும்ப திரும்ப சுற்றி சுழன்று வருகிறது. இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது சமீப காலத்தில் நடந்தும் உள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,995 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 60 ஆயித்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளது. 55,573 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 17,51,555 பேர் குணமடைந்துள்ளனர்.
2-வது முறையாக இன்று பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் உயிரிழந்ததால், இதுவரை 48,040 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் உள்ளது. இதுவரை 2,76,94,416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு புதுவை மற்றும் ஏனாம் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விருப்பம் உள்ளவர்கள் புதுச்சேரி பேட்டையன்சத்திரம் வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த (செப்டம்பர்) மாதம் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புகைப்படத்துடன்கூடிய பூர்த்தி செய்யப்பட்ட படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, பட்டாசு விற்பனை செய்யப்போகும் இடத்தின் வரைபடம், கடையில் பட்டாசு வைத்துக்கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்குரிய வழிகள், சுற்றியுள்ள சாலைகள், 15 மீட்டர் சுற்றளவில் உள்ள பிற கடைகள் குறித்தும் குறிப்பிட வேண்டும்.
இடத்தின் உரிமை தொடர்பான பத்திர நகல், வாடகை கடையாக இருப்பின் வாடகை பத்திரம், மற்றும் இடத்தின் உரிமையாளரிடம் கடை வைக்க ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம், ரேசன் கார்டு, வாக்காளர், ஆதார் அட்டை நகல்கள் போன்ற இணைப்புகளின் நகல்கள் 3 பிரதிகள் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவத்தினை www.collectorate.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு வருகிற 4-ந்தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே தீபாவளியின் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்படும். கொரோனா பரவல் சூழ்நிலையை பொறுத்து பட்டாசு கடை விண்ணப்பங்கள் ரத்து செய்வதற்கும் உட்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.