என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் இன்று மேலும் 302 பேருக்கு கொரோனா உறுதி

    புதுச்சேரியில் இன்று மேலும் 302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,029 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.  ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 26,47,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,982  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 941 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,921ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 19,19,843  பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,76,900 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.93 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 71.91 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  8,029 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 4,627 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×